Sukran Peyarchi: ஆகஸ்ட் 31ல் சுக்கிரன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு கோடீஸ்வரர் யோகம் உண்டு, உங்கள் ராசி இதுவா
Sukran Peyarchi 2022 Palangal: சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சுபமாக இருக்கும்,சிலருக்கு சிரமங்களைச் சந்திக்க நேரிடும். அப்படி யாருக்கு என்னென்னெ பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Sukran Peyarchi 2022 Palangal:
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் ராசி மாற்றம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிகழ்கிறது. இது 12 ராசிகளையும் பாதிக்கிறது. சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மாறுவது சுபமாகவும், சிலருக்கு வேதனையாகவும் இருக்கும். அந்த வகையில், சுக்கிர பகவான் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 5:20 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குள் நுழைந்தார். தற்போது ஆகஸ்ட் 31 வரை சுக்கிரன் இந்த ராசியில் சுக்கிரன் நீடிப்பார். இதையடுத்து, வரும் ஆகஸ்ட் மீண்டும் மிதுன ராசியில் பெயர்ச்சியாகிறார். இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்:
சுக்கிரனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். ந்த ராசியில் இருக்கும் வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தில் லாபம் அடையலாம். நீங்கள் புதிய வேலை தொடங்க நினைத்தால் இது சரியாமன நேரமாக அமையும்.
Sukran Peyarchi 2022 Palangal:
கன்னி:
சுக்கிரன் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்துடன் பண வரவு ஆதாயத்திற்கான அறிகுறிகள் ஏற்படும்.இந்த காலகட்டத்தில் நீங்கள் மரியாதை மற்றும் கௌரவத்தை பெறவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறவீர்கள்.
Sukran Peyarchi 2022 Palangal:
துலாம்:
சுக்கிரன் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான விளைவை தரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம், இருப்பினும் செலவுகள் காரணமாக நீங்கள் சிரமப்படுவீர்கள். உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கும். உங்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டாளியின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.மேலும் படிக்க...Gooseberry: கல்லீரல் பிரச்சனை சரியாக வேண்டுமா..? நெல்லிக்காயை இப்படி ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள்..
Sukran Peyarchi 2022 Palangal:
விருச்சிகம்:
சுக்கிரன் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களின் தைரியத்தை அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கடினமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தை தரப்பில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். அதேபோல் உங்களின் தொழிலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவீர்கள்.