- Home
- Lifestyle
- Budhan peyarchi 2022: நாளை புதன் பெயர்ச்சி..கஜகேசரி யோகம் பெறப்போகும் ராசிகள் இவர்கள்தான்..
Budhan peyarchi 2022: நாளை புதன் பெயர்ச்சி..கஜகேசரி யோகம் பெறப்போகும் ராசிகள் இவர்கள்தான்..
Budhan peyarchi 2022: புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்..

Budhan peyarchi 2022:
ஜோதிடத்தில், புதன் கிரகம் ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, அறிவு கூர்மை, புத்திசாலித்தனம், வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றின் காரண கிரகமாக கருதப்படுகிறார். பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 10-ம் தேதி கன்னி ராசியில் புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகிறார். புதன் கிரகம் தற்போது கன்னி ராசியில் உள்ளது.
Budhan peyarchi 2022:
செப்டம்பர் 10 முதல் வக்ர நிலையை அடையும். அக்டோபர் 2 ஆம் தேதி வரை புதன் வக்ர நிலையில் தொடரும். இதன் பிறகு புதன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இதனால், சில ராசிக்காரர்களின் தலை விதி தலைகீழாய் மாறும். புதன் பகவான் வெற்றிகளை வாரி வழங்குவார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Budhan peyarchi 2022:
மிதுனம்:
புதனின் பிற்போக்கு சஞ்சாரம், மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான வெற்றிகளை அள்ளித் தரும். நிதி நிலையை வலுப்படுத்தும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். சட்ட விவகாரங்கள் தீர்க்கப்பட்டு உங்களுக்கு சாதகமாக அமையும்.
Budhan peyarchi 2022:
கடகம்:
புதன் வக்ர பெயர்ச்சி, கடக ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயங்களைத் தரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வரும். பணியில் மாற்றம் ஏற்படலாம். உங்கள் மீது நம்பிக்கை வைத்தால், மகத்தான வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வெளியூர் பயணம் திட்டமிடலாம்.
Budhan peyarchi 2022:
விருச்சிகம்:
புதனின் வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும். வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள். அதிர்ஷ்டத்தின் உதவியால், வேலை வெற்றிகரமாக இருக்கும். மகிழ்ச்சி நிறைந்த சூழல் உங்களுக்கு இருக்கும். உறவினர் வருகையால் வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் மனைவியிடமிருந்து அன்பையும் பாசத்தையும் பெறுவீர்கள்.