Sevvai Peyarchi: ரிஷபம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு செல்வம் கொழிக்கும், வெற்றி கிடைக்கும்
Sevvai Peyarchi 2022 Palangal: செவ்வாய் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் கோச்சாரம் ஆகிறது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Sevvai Peyarchi 2022
ஜோதிடத்தின் படி, இந்த ஆகஸ்ட் மாதத்தில், 4 பெரிய கிரகங்கள் தனது ராசியை மாற்றும். மேலும் நான்கு பெரிய விரதங்களும் இந்த மாதம் கடைபிடிக்கப்படுகின்றன. பொதுவாக, கிரகங்களின், ராசி மாற்றம் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி, செவ்வாய் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் கோச்சாரம் ஆகிறது. ஜோதிடத்தின் படி, செவ்வாயின் இந்த ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த செவ்வாய் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Sevvai Peyarchi 2022
மேஷம்
செவ்வாய் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இந்த சமயத்தில் மேஷ ராசிக்காரர்கள் களத்தில் வெற்றி பெறுவார்கள். கஇந்த நேரத்தில் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகள் வலுவாக இருக்கும்.
Sevvai Peyarchi 2022
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நுழைவது மிகவும் சுபமாக இருக்கும். இந்த கலாத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்களின் வேலை மற்றும் தொழிலில் அமோக வெற்றி கிடைக்கும். பதவி, கௌரவம் உயரும். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் உங்களின் திறமை மேம்படும் மற்றும் உங்கள் பேச்சால் மற்றவர்களை கவர முடியும். இன்று உங்களுக்கு வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
Sevvai Peyarchi 2022
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்குசெவ்வாய் பெயர்ச்சி நன்மைகள் உண்டாகும்.செவ்வாயின் ராசி மாற்றத்தால் உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. பணி மாறுதல் உங்களுக்கு சிறந்த பலன் அளிக்கும்.வாழ்வில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் லாபம் அடைவார்கள்.இந்த காலகட்டத்தில் வியாபாரம் செய்பவர்களும் அதிகப்படியான தொகையை ஈட்ட முடியும்.