MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Facts: இந்தியா மேப்பில் இலங்கை ஏன் இருக்கு தெரியுமா? இதுதான் 'அந்த' சீக்ரெட்!

Facts: இந்தியா மேப்பில் இலங்கை ஏன் இருக்கு தெரியுமா? இதுதான் 'அந்த' சீக்ரெட்!

India Map: இந்தியா மேப்பில் இலங்கையும் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இலங்கை ஒரு தனி நாடு, அப்படியிருக்க இந்தியா மேப்பில் அதற்கு என்ன வேலை? இதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச கடல் சட்டம் மற்றும் புவியியல் காரணங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 20 2026, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியா மேப்பில் இலங்கை இருப்பதற்கான காரணங்கள் என்ன?
Image Credit : AI

இந்தியா மேப்பில் இலங்கை இருப்பதற்கான காரணங்கள் என்ன?

நம்ம சின்ன வயசுல ஸ்கூல் புக்ஸ்ல இருந்து, ஆபீஸ் சுவர்கள் வரைக்கும் இந்தியா மேப்பை எங்க பார்த்தாலும், அதுக்கு கீழ குட்டியா இலங்கையும் இருக்கும். இலங்கை ஒரு தனி நாடுங்கிறப்போ, நம்ம நாட்டு மேப்ல அதை ஏன் காட்டணும்னு பலருக்கும் ஒரு கேள்வி இருக்கும். இதுக்குப் பின்னாடி அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. இலங்கை ஒரு முழுமையான சுதந்திர நாடு. அப்போ ஏன் இப்படி? இதுக்கு ஒரு சர்வதேச சட்டம் தான் முக்கிய காரணம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஐக்கிய நாடுகள் சபை கடல் சட்டம்
Image Credit : Getty

ஐக்கிய நாடுகள் சபை கடல் சட்டம்

இந்தியா மேப்ல இலங்கைய காட்டறதுக்கு முக்கிய காரணம், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல் சட்டம் தான். 1982-ல் 'கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு' (UNCLOS) என்ற ஒரு ஒப்பந்தத்தை கொண்டு வந்தாங்க. இந்தச் சட்டப்படி, கடற்கரையோரமுள்ள எந்த ஒரு நாட்டுக்கும், அதன் கரையிலிருந்து 200 நாட்டிகல் மைல்கள் (சுமார் 370 கி.மீ) வரை கடலில் உரிமை உண்டு. ஒரு நாடு தனது அதிகாரப்பூர்வ மேப்பை வெளியிடும்போது, இந்த 200 நாட்டிகல் மைல் எல்லைக்குள் வரும் கடல் பகுதியையும், அருகில் இருக்கும் நிலப்பரப்புகளையும் தெளிவாகக் காட்ட வேண்டும் என்பது விதி.

Related Articles

Related image1
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
Related image2
சாதிக் கட்சி நடத்தும் நீ பிரபாகரனை இழிவாகப் பேசலாமா? திருமாவை கிழித்தெடுத்த இலங்கை தமிழர்..!
35
இந்தியாவுக்கு மிக அருகில் இலங்கை
Image Credit : Gemini

இந்தியாவுக்கு மிக அருகில் இலங்கை

இரண்டாவது காரணம், இலங்கை நம்ம நாட்டுக்கு ரொம்ப ரொம்ப பக்கத்துல இருக்குறது. தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தி பகுதி ரொம்ப குறுகலானது. இந்த ரெண்டுக்கும் நடுவுல வெறும் 18 நாட்டிகல் மைல் (சுமார் 33 கி.மீ) தூரம்தான் இருக்கு. ஐ.நா விதிப்படி, இந்தியா தனது கடல் எல்லையான 200 நாட்டிகல் மைல் தூரத்தை மேப்பில் காட்டணும். ஆனா இலங்கை வெறும் 18 நாட்டிகல் மைல் தூரத்திலேயே வந்துடுது. இதனால, இலங்கையை விட்டுவிட்டு தென்னிந்தியாவின் மேப்பை முழுமையாக வரையவே முடியாது.

45
மற்ற நாடுகளுக்கு இந்த விதி உண்டா?
Image Credit : AI Meta

மற்ற நாடுகளுக்கு இந்த விதி உண்டா?

பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளும் இந்தியாவின் அண்டை நாடுகள்தான். ஆனால், அவை இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. அதனால மேப் வரையும்போது இயல்பாகவே அந்த நில எல்லைகள் வந்துவிடும். ஆனால் இலங்கை அப்படி இல்லை. அது கடலுக்கு நடுவில் இருக்கும் ஒரு தீவு. அதனால்தான், ஐ.நா. கடல் சட்டப்படி, நமது கடல் எல்லையைத் துல்லியமாகக் காட்டுவதற்காக இலங்கையையும் இந்திய வரைபடத்தின் சட்டகத்திற்குள் கொண்டு வருகிறார்கள்.
55
இலங்கை மீது இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை
Image Credit : Getty

இலங்கை மீது இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை

பலர் நினைப்பது போல, இது அரசியல் ரீதியான உரிமை கோரல் கிடையாது. இலங்கை மீது இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை. சர்வதேச வரைபட விதிகளின்படி (Cartographic Rules), இந்திய வரைபடத்தை முழுமையாக்க இலங்கையைக் காட்டுவது கட்டாயம். அதனால்தான், கல்வி சம்பந்தப்பட்ட, அதிகாரப்பூர்வமான அல்லது வணிக ரீதியான எந்த இந்திய வரைபடத்தைப் பார்த்தாலும், இந்தியாவின் தெற்கே இலங்கை தவறாமல் இடம்பிடித்திருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
இந்தியா
இலங்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kids Lunch Box: ஸ்கூல் டிபன் பாக்ஸ்க்கு தினமும் என்ன செய்வது? 6 நாட்களுக்கான ஹெல்தி & டேஸ்டி மெனு இதோ!
Recommended image2
Indian Railways: ரயில் பெட்டி மேல இந்த வட்டமான மூடிகள் ஏன் இருக்கு? இதன் உண்மையான வேலை என்ன தெரியுமா?
Recommended image3
Chanakya Niti: இந்த 4 ரகசியங்களை யாரிடமும் சொல்லவே சொல்லாதீங்க... சாணக்கியரின் சீக்ரெட் அட்வைஸ்!
Related Stories
Recommended image1
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
Recommended image2
சாதிக் கட்சி நடத்தும் நீ பிரபாகரனை இழிவாகப் பேசலாமா? திருமாவை கிழித்தெடுத்த இலங்கை தமிழர்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved