MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Gardening Tips: வீட்டைக் காக்கும் முட்டை ஓடுகள்: செடிகளை பச்சையாக வைக்க 5 சூப்பர் டிப்ஸ்!

Gardening Tips: வீட்டைக் காக்கும் முட்டை ஓடுகள்: செடிகளை பச்சையாக வைக்க 5 சூப்பர் டிப்ஸ்!

Gardening Tips: நாம் சமையலுக்குப் பிறகு தூக்கி எறியும் முட்டை ஓடுகள், தோட்டக்கலைக்கு ஒரு சூப்பர் வரம். கால்சியம் நிறைந்த இந்த ஓடுகள் செடிகளுக்கு 5 வழிகளில் உதவுகின்றன. அது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 13 2026, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வீட்டைக் காக்கும் முட்டை ஓடுகள்
Image Credit : Credit: Jurgute / Getty Images

வீட்டைக் காக்கும் முட்டை ஓடுகள்

வீட்டுத் தோட்டம் வைத்துள்ளீர்களா? அப்படியானால் இந்த 5 குறிப்புகள் உங்களுக்கானவை. நாம் குப்பையில் எடையும் முட்டை ஓடு, செடிகளை ஆரோக்கியமாக வளர்க்கும் ஒரு அருமையான பொருளாகும். இது மண்ணை வளப்படுத்தி, செடிகளுக்கு உயிர் கொடுக்கிறது. இனிமேல் முட்டை ஓடுகளை வீணாக்காதீர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
முட்டை ஓடுகளில் கால்சியம் சத்து அதிகம்
Image Credit : google

முட்டை ஓடுகளில் கால்சியம் சத்து அதிகம்

முட்டை ஓடுகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது செடியின் செல் சுவர்களைப் பலப்படுத்தி, வளர்ச்சிக்கு உதவுகிறது. தக்காளி, மிளகாய், முலாம்பழம் செடிகளில் கால்சியம் குறைபாட்டால் வரும் 'பிளாசம் எண்ட் ராட்' (blossom end rot) நோயை இது தடுக்கும். முட்டை ஓடுகளை நன்றாகப் பொடி செய்து மண்ணில் கலந்தால், கால்சியம் சீக்கிரமாக செடிக்கு கிடைக்கும்.

நத்தை, புழு மாதிரி பூச்சிகளுக்கு முட்டை ஓடு ஒரு சிம்மசொப்பனம். நொறுக்கப்பட்ட முட்டை ஓடுகளின் கூர்மையான முனைகள், இந்த பூச்சிகளை செடி பக்கத்துல வர விடாது. செடிகளின் தண்டுப் பகுதியைச் சுற்றி இந்த ஓடுகளைத் தூவி வெச்சா போதும். இது ஒரு இயற்கை பூச்சி விரட்டி மாதிரி செயல்படும்.

Related Articles

Related image1
Gardening Tips: குப்பைனு தூக்கி போடாதீங்க... உங்க பால்கனி தோட்டம் செழிக்க இதுவே போதும்!
Related image2
Gardening Tips: வீட்டுத் தோட்டத்து தக்காளியை வெச்சு என்ன பண்ணலாம்? 5 சூப்பர் ஐடியாஸ்!
36
நாற்றங்கால் தொட்டி
Image Credit : google

நாற்றங்கால் தொட்டி

உங்கள் தோட்டத்து மண்ணில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளதா? முட்டை ஓடுகள் காரத்தன்மை கொண்டவை. இவற்றில் உள்ள கால்சியம் கார்பனேட், மண்ணின் அமிலத்தன்மையைக் குறைத்து, pH அளவைச் சமன்படுத்தும். இதனால் செடிகள் சத்துக்களை நன்றாக உறிஞ்சி, வலிமையுடன் வளரும்.

சுத்தம் செய்த பாதியளவு முட்டை ஓடுகளைக் குட்டி நாற்றங்கால் தொட்டியாகப் பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கையான மக்கும் (biodegradable) தொட்டியாகும். நாற்று வளர்ந்ததும், அதை முட்டை ஓட்டோடு சேர்த்து அப்படியே மண்ணில் நடலாம். இதனால், செடிக்கு நேரடியாகக் கால்சியம் சத்து கிடைப்பதுடன், ஓடும் மண்ணில் மக்கிவிடும்.

46
முட்டை ஓட்டுத் தேநீர் தயாரிப்பு
Image Credit : google

முட்டை ஓட்டுத் தேநீர் தயாரிப்பு

முட்டை ஓடுகளைப் பொடியாகவோ அல்லது உரமாகவோ மட்டும் பயன்படுத்தாமல், சுத்தமான முட்டை ஓடுகளைத் தண்ணீரில் போட்டு சில நாட்கள் ஊறவைத்தோ அல்லது கொதிக்கவைத்தோ 'முட்டை ஓட்டுத் தண்ணீர்' (Eggshell Tea) தயாரிக்கலாம். இந்தத் திரவத்தை வடிகட்டி செடிகளுக்கு ஊற்றுவதன் மூலம், கால்சியம் சத்து செடியின் வேர்களுக்கு மிக விரைவாகக் கிடைத்து செழிப்பாக வளர உதவும்.

56
தற்காலிக விதைப்பைகள்
Image Credit : our own

தற்காலிக விதைப்பைகள்

முட்டை ஓடுகளைப் பாதியாக உடைத்து சுத்தம் செய்துவிட்டு, அதில் தேங்காய் நார்க்கழிவு அல்லது மண் நிரப்பி விதைகளைத் தூவலாம். விதைகள் முளைத்துச் செடியாக வந்ததும், முட்டை ஓட்டோடு சேர்த்து அப்படியே பெரிய தொட்டியிலோ அல்லது நிலத்திலோ நட்டுவிடலாம். முட்டை ஓட்டின் கடினமான பகுதி ஆரம்பத்தில் விதைக்கு நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும். நாற்று வளர்ந்து வேர் விடும்போது ஓடு தானாகவே மண்ணில் மக்கிவிடும் என்பதால், நாற்றுகளை மாற்றும்போது வேர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாது.

66
உரத்துடன் நொறுக்கிய முட்டை ஓடுகள்
Image Credit : Getty

உரத்துடன் நொறுக்கிய முட்டை ஓடுகள்

நீங்கள் தயாரிக்கும் கம்போஸ்ட் உரத்துடன், நொறுக்கிய முட்டை ஓடுகளைச் சேர்க்கவும். இது உரத்திற்கு கால்சியம் மற்றும் பிற தாதுக்களை அளித்து, அதன் சத்துக்களை அதிகரிக்கும். இந்த உரத்தை மண்ணில் இடும்போது, மண் கட்டமைப்பும் காற்றோட்டமும் மேம்படும். எனினும், பூச்சிகளைத் தவிர்க்க, ஓடுகளை நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti on Trust: இந்த 5 பேர் வாழ்க்கையில ஈஸியா ஏமாந்து போவாங்க! லிஸ்டில் நீங்க இருக்கீங்களா?
Recommended image2
Water Bottles : தண்ணீர் பாட்டில்களில் வளைவான கோடுகள் ஏன் இருக்கு? 99% பேருக்கு இது தெரியாது!
Recommended image3
Silver Chain : வெறும் 1000 ரூபாயில், அசத்தலான டிசைனுடன் கலக்கலான வெள்ளி செயின்கள்!
Related Stories
Recommended image1
Gardening Tips: குப்பைனு தூக்கி போடாதீங்க... உங்க பால்கனி தோட்டம் செழிக்க இதுவே போதும்!
Recommended image2
Gardening Tips: வீட்டுத் தோட்டத்து தக்காளியை வெச்சு என்ன பண்ணலாம்? 5 சூப்பர் ஐடியாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved