MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Zinc Food: சைவ பிரியர்களா நீங்கள்..? உங்களுக்கு ஓர் குட்நியூஸ்...ஜிங்க் அதிகம் உள்ள 5 சிறந்த உணவுகள்

Zinc Food: சைவ பிரியர்களா நீங்கள்..? உங்களுக்கு ஓர் குட்நியூஸ்...ஜிங்க் அதிகம் உள்ள 5 சிறந்த உணவுகள்

Zinc Food: நாம் உண்ணும் உணவில் இருந்து போதுமான அளவு ஜிங்க் ஊட்டச்சத்தை பெற வேண்டும், இல்லை என்றால் வயிற்றுப்போக்கு, முடி உதிர்வு, கண் மற்றும் தோல் புண்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். 

3 Min read
Author : Anija Kannan
Published : Jul 29 2022, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் (Zinc) எனப்படும் துத்தநாகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பல உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவை மற்றும் வாசனையை நாம் சரியாக உணர இது அவசியம். இளம் குழந்தைகள், பதின்வயதினர், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்பட சிலருக்கு துத்தநாகக் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகை செய்கிறது.  

27

நல்ல ஆரோக்கியத்திற்கு NIH யின் பரிந்துரைக்கப்பட்ட துத்தநாகம் அளவுப்படி, (பெண்களுக்கு 8 மி.கி, ஆண்களுக்கு 11 மி.கி) உடலுக்கு தேவைப்படுகிறது. அதேபோன்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு 11 மி.கி ஆகும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இது 12 மி.கி ஆகும். மாமிச உணவுகள் ஜிங்க் சத்தின் ஆதாரமாக கருதப்பட்டாலும் சைவ உணவு உண்பவர்களுக்கும் சில சிறந்த தாவர அடிப்படையிலான துத்தநாக சத்து நிறைந்த உணவுகள்  கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: இன்று குருவின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு அற்புதமான காலம்..

37

சணல் விதைகள்:

சணல் விதைகள் ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். இதில் நிறைவுறா கொழுப்புகள் மற்றும் துத்தநாகம் காணப்படுகின்றன. சுமார் 3 டேபிள்ஸ்பூன் சணல் விதைகளில் 3 மி.கி வரை துத்தநாகம் உள்ளது. இந்த விதைகள் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் பசியை நமது கட்டுப்பாட்டில் வைக்கும். இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. 

47

பூசணி விதைகள் : 

விதைகள் உங்கள் உணவில் ஆரோக்கியமான ஒன்றாகும். பூசணி விதைகள் எண்ணற்ற  துத்தநாகம், நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2.2 மி.கி அளவு துத்தநாக சத்து நிறைந்துள்ளது. எனவே, பூசணி விதைகள் நிறைந்த உணவை உட்கொள்வது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எனவே, துத்தநாக குறைபாடு இருப்பவர்கள் நாள்தோறும் ஒரு கைப்பிடி அளவு பூசணி விதைகள் எடுத்து கொள்ளலாம்.
 

57

முழு தானியங்கள்:

கோதுமை, கினோவா, அரிசி மற்றும் ஓட்ஸ் போன்ற முழு தானியங்களில் துத்தநாகம் உள்ளது.  முழு தானியங்களில் ஆரோக்கியத்திற்கு  சிறந்த நார்ச்சத்து, பி வைட்டமின்கள், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற பல முக்கியமான ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: இன்று குருவின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு அற்புதமான காலம்..

உண்மையில், முழு தானியங்களை உண்பது நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது மற்றும் உடல் பருமன், வகை இரண்டு நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகளை தடுக்கும். 

67
nuts

nuts

நட்ஸ்:

பைன் நட்ஸ், வேர்க்கடலை, முந்திரி மற்றும் பாதாம் போன்றவை சாப்பிடுவது உடலில்  துத்தநாகத்தின் அளவை அதிகரிக்கும். இதில் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து, அத்துடன் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன.

துத்தநாகம் அதிகம் உட்கொள்ள விரும்பினால் முந்திரி ஒரு நல்ல தேர்வாகும்.1-அவுன்ஸ் (28-கிராம்) சேவையில் 15% DV (17)  உள்ளது. நட்ஸ் சாப்பிடுவது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற சில நோய்களுக்கான ஆபத்து காரணிகளை குறைக்கும் தன்மை கொண்டது.   

77

தர்பூசணி விதைகள்:

தர்பூசணி விதைகள் அதிக சத்தானவை, இதில் துத்தநாகம் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒரு சில தர்பூசணி விதைகளில் 4 மி.கி வரை துத்தநாகம் உள்ளது.இது எல்.டி.எல்-கொலஸ்ட்ரால் அல்லது ரத்த ஓட்டத்தில் மோசமான கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது.  மேலும், தர்பூசணி விதைகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: இன்று குருவின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு அற்புதமான காலம்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved