- Home
- Lifestyle
- Grow Taller: உயரம் குறைவானவரா? உங்கள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் சூப்பர் 5 உணவுகள்..
Grow Taller: உயரம் குறைவானவரா? உங்கள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் சூப்பர் 5 உணவுகள்..
Grow Taller: மரபணு மாற்றம் தவிர்த்து, சில ஊட்டச்சத்து காரணமாக குழந்தைகள் குள்ளமாக இருந்தால் அதை உணவு முறைகள் சற்று மாற்றலாம். குழதைகளின் உயரத்தை அதிகரிக்க உதவ ஊக்கம் கொடுக்கும் தேவையான உணவுகள் இவைகள் தான்.

உயரமாக இருப்பது ஒருவரின் ஆளுமை நம்பிக்கைகையை அதிகரிக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால், பள்ளி முதலே குழந்தைகள் குள்ளமாக இருந்தால் பெற்றோரிடம் நான் ஏன் குள்ளமாக இருக்கிறேன் என ஏக்கத்துடன் கேட்பார்கள். மரபணு காரணமாக குள்ளமாக இருந்தால் அதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. ஒருவேளை சில குறைபாடுகள், உடல் பலவீனம் காரணமாக குள்ளமாக இருந்தால், உணவுகளை முறையாக கொடுக்க வேண்டியது அவசியம்.
புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற சரியான ஊட்டச்சத்து மூலம் குழந்தை தனது அதிகபட்ச உயரத்தை அடையலாம். மேலும், இவை எலும்புகளின் வளர்ச்சியும் திண்மையுமே உயரமாக வளர முக்கியமானது. எனவே, வளரும் வயதில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் உணவின் மூலமே கிடைக்கிறது. எனவே, குழந்தைகளின் உணவு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கோழி
புரதச்சத்து நிறைந்துள்ள கோழிக்கறி இதற்கு சிறந்த தேர்வாகும். இதில், உயரத்தை அதிகரிக்க தேவையான, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி12 இதில் அதிகம் உள்ளது. இதில் டாரைன் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது எலும்பு வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை சீராக்க உதவுகிறது.
முட்டை:
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இந்த முட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொடுத்து வந்தால், அவர்களின் உடல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
Vegetables
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் குழந்தையின் உயரம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். கனிமங்களின் சரியான கலவைகள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
பீன்ஸ்
புரத சத்து நிறைந்த பீன்ஸ், புரோட்டீன் அதிகம் கொண்ட முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். உயரமாக வளர மற்றொரு முக்கிய காரணியான இரும்புச்சத்தும் இதில் நிறைந்துள்ளது. இது குழந்தைகளில் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி காரணியை அதிகரிக்கும் பண்பு கொண்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
கீரை வகைகள்:
கீரைகளில் வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவை போதுமான அளவு இருப்பதால் தினசரி உணவில் கீரை சேர்த்துக் கொள்வது அவசியம்.
அவகோடா:
இந்தப் பழத்தில் வைட்டமின்பி6 மற்றும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. அதனால் இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். இந்த பழத்தை நாம் குழந்தைகளுக்கு சாலட் போன்று செய்து கொடுக்கலாம்.