MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • AC Safety: கோடை காலத்தில் ஏசி வெடிக்காம இருக்கணுமா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க, ஆபத்தை தவிருங்க!

AC Safety: கோடை காலத்தில் ஏசி வெடிக்காம இருக்கணுமா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க, ஆபத்தை தவிருங்க!

Summer AC Maintenance Tips : வெயில் காலம் வந்துவிட்டதால், ஏசி பயன்பாடு அதிகமாகிவிட்டது. ஆனால், ஏசியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், அது வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 22 2026, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Summer AC Maintenance Tips
Image Credit : Freepik

Summer AC Maintenance Tips

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வீடுகளில் ஏசி (AC) பயன்பாடு அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சமீபகாலமாக ஏசி வெடித்து விபத்துக்கள் ஏற்படுவதையும் நாம் செய்திகளில் பார்க்கிறோம். உங்கள் வீட்டில் ஏசி வெடிக்காமல் பாதுகாப்பாக இருக்க, நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 முக்கியமான குறிப்புகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
ஏர் ஃபில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும்
Image Credit : Getty

ஏர் ஃபில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும்

ஏசி பராமரிப்பில் மிக முக்கியமானது ஏர் ஃபில்டர்களை சுத்தம் செய்வதுதான். 15 நாட்களுக்கு ஒருமுறை ஃபில்டர்களை எடுத்து, சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். ஃபில்டரில் தூசி படிந்தால், காற்று வருவது குறைந்து, கூலிங் குறையும், கரண்ட் பில்லும் எகிறும். கழுவிய பின் ஃபில்டரை வெயிலில் காய வைக்காமல், துடைத்து மீண்டும் பொருத்த வேண்டும்.

Related Articles

Related image1
ஃபிரிட்ஜ் இல்லையா? கவலையை விடுங்க.! கோடையிலும் பால் கெட்டுப்போகாமல் பாதுகாக்க எளிய வழிகள்.! இல்லத்தரசிகளுக்கு உதவும் சூப்பர் டிப்ஸ்.!
Related image2
உங்க வீட்டுக்குள்ள காற்று மாசு அதிகமாக இருக்கா? இந்த 5 செடிகளை வையுங்க.! காற்றை சுத்தப்படுத்தி ஆக்ஸிஜனும் தரும்.!
36
போலி டெக்னீஷியன்கள்
Image Credit : Getty

போலி டெக்னீஷியன்கள்

ஏசிகள் வெடிப்பது கட்டுக்கதை அல்ல, அது நிஜம். இதற்கு முக்கிய காரணம், அனுபவமில்லாத டெக்னீஷியன்களை வைத்து வேலை வாங்குவதுதான். ஏசியில் பயன்படுத்தப்படும் கேஸ், எல்பிஜி கேஸ் போலவே மிகவும் அபாயகரமானது. கேஸ் லீக் ஆகும் போது, சரியாக 'வேக்யூம்' செய்யாமல் கேஸ் நிரப்பினால், ஏசி வெடிக்க 100% வாய்ப்புள்ளது. அதனால், குறைந்த விலையில் சரிசெய்கிறார்கள் என போலி டெக்னீஷியன்களை நம்பி உயிரைப் பணயம் வைக்காதீர்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

46
கேஸ் லீக்
Image Credit : Getty

கேஸ் லீக்

ஏசியில் உள்ள கேஸ் ஒருபோதும் தீர்ந்து போகாது, அது வாழ்நாள் முழுவதும் இருக்கும். லீக் இருந்தால் மட்டுமே கேஸ் குறையும். ஏசி சரியாக கூலிங் ஆகவில்லை என்றால், கேஸ் லீக் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்க வேண்டும். கேஸ் நிரப்பும் போது, லீக் எங்கே இருக்கிறது என்று கண்டறிந்து, அதை வெல்டிங் செய்து, 'வேக்யூம்' செய்த பிறகே கேஸ் நிரப்ப வேண்டும். இந்த முழு செயல்முறைக்கும் சுமார் ₹4,000 முதல் ₹4,500 வரை செலவாகும்.

56
முக்கிய குறிப்புகள்
Image Credit : Getty

முக்கிய குறிப்புகள்

பவர் சேமிப்பு: ஏசியை எப்போதும் 24 டிகிரியில் வைத்துப் பயன்படுத்தினால், கரண்ட் பில் குறைவதோடு, உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

சீசனுக்கு முன்பே சர்வீஸ்: ஏப்ரல், மே மாதங்கள் வரை காத்திருக்காமல், பொங்கல் சமயத்திலேயே ஏசி சர்வீஸ் செய்வது சிறந்தது.

ஆஃப்-சீசனிலும் கவனம்: குளிர்காலத்தில் ஏசி பயன்படுத்தாவிட்டாலும், வாரத்திற்கு ஒருமுறை குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் ஆன் செய்வதால், மெஷின் நல்ல கண்டிஷனில் இருக்கும்.

புரொபஷனல் சர்வீஸ்: கூலிங் காயில்களை சுத்தம் செய்ய பிரஷ் பயன்படுத்தக்கூடாது. திறமையான டெக்னீஷியன் மூலம் 'பிரஷர் கிளீனிங்' செய்ய வேண்டும்.

66
கவனிக்க வேண்டியது
Image Credit : Getty

கவனிக்க வேண்டியது

ஏசி நமக்கு குளிர்ச்சியையும், நிம்மதியான தூக்கத்தையும், வெயில் காலத்தில் பாதுகாப்பையும் வழங்கும். இருந்தாலும், ஒரு சிறிய அலட்சியம் பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். நம்பிக்கையான, அனுபவம் வாய்ந்த டெக்னீஷியன்கள் மூலமாக மட்டுமே சர்வீஸ் செய்வதன் மூலம் உங்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
ஏசி சுத்தம் செய்தல்
ஏசி பராமரிப்பு குறிப்புகள்
குளிர்சாதனப் பெட்டி சுத்தம் செய்தல்
காற்று குளிர்விப்பான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருமணமான பெண்களுக்கான லஹரியா வெள்ளி கொலுசு டிசைன்கள்
Recommended image2
Lifestyle: உள்ளாடை முதல் பெட்ஷீட் வரை.! எத்தனை நாளைக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? மருத்துவர் கூறும் அறிவுரை.!
Recommended image3
Extramarital Affair: உங்க கணவர் இப்படி நடந்துக்கிட்டா அவருக்கு கள்ள உறவு இருக்குனு அர்த்தம்!
Related Stories
Recommended image1
ஃபிரிட்ஜ் இல்லையா? கவலையை விடுங்க.! கோடையிலும் பால் கெட்டுப்போகாமல் பாதுகாக்க எளிய வழிகள்.! இல்லத்தரசிகளுக்கு உதவும் சூப்பர் டிப்ஸ்.!
Recommended image2
உங்க வீட்டுக்குள்ள காற்று மாசு அதிகமாக இருக்கா? இந்த 5 செடிகளை வையுங்க.! காற்றை சுத்தப்படுத்தி ஆக்ஸிஜனும் தரும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved