MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபிரிட்ஜ் இல்லையா? கவலையை விடுங்க.! கோடையிலும் பால் கெட்டுப்போகாமல் பாதுகாக்க எளிய வழிகள்.! இல்லத்தரசிகளுக்கு உதவும் சூப்பர் டிப்ஸ்.!

ஃபிரிட்ஜ் இல்லையா? கவலையை விடுங்க.! கோடையிலும் பால் கெட்டுப்போகாமல் பாதுகாக்க எளிய வழிகள்.! இல்லத்தரசிகளுக்கு உதவும் சூப்பர் டிப்ஸ்.!

How to Preserve Milk Without Refrigerator in Summer : மின்சாரம் இல்லாதபோதோ அல்லது ஃபிரிட்ஜ் வசதி இல்லாத போது பாலை கெடாமல் பாதுகாப்பது சவாலான விஷயம். ஆனால் சில பாரம்பரிய முறைகளை பின்பற்றி பாலை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியும். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 20 2026, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
How to Preserve Milk Without Refrigerator in Summer
Image Credit : Getty

How to Preserve Milk Without Refrigerator in Summer

கோடைகாலம் தொடங்கிய உடனேயே வெப்பநிலை அதிகரிப்பால் உணவுப் பொருட்கள் கெட்டு விடுவது வழக்கம் தான். பால் கெட்டு விடுவது, காய்கறிகள் அழுகி வீணாவது போன்ற ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கிறோம். சில சமயங்களில் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும் பால் விரைவாக கெட்டுவிடும். இந்த பிரச்சனையை நம்மால் எளிதில் சரி செய்ய முடியும். சுட்டெரிக்கும் வெயிலிலும் பாலை நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சியுடன் வைக்கக்கூடிய சில பாரம்பரிய முறைகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

26
அடிக்கடி காய்ச்ச வேண்டும்
Image Credit : istockphoto

அடிக்கடி காய்ச்ச வேண்டும்

சிலர் பாலை வாங்கியவுடன் நீண்ட நேரம் வைத்திருந்து, பின்னர் காய்ச்சுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாலை வாங்கியவுடன் தாமதிக்காமல் காய்ச்சுவது அவசியம். காய்ச்சாத பால் கோடையில் விரைவில் திரியும் தன்மை கொண்டதாக இருக்கும். பாலை ஒரு முறை காட்சி அப்படியே விட்டுவிடக்கூடாது. காலையில் காய்ச்சிய பாலை மதியம் ஒருமுறை, இரவு தூங்குவதற்கு ஒரு முறை என ஐந்து முதல் ஆறு முறை மிதமான சூட்டில் காய்ச்சி வைக்க வேண்டும். பாலை காய்ச்சும்போது அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். பால் கெட்டியாக இருந்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.

Related Articles

Related image1
கோடை காலத்தில் இட்லி மாவு சீக்கிரம் புளித்து போகுதா? இதோ ஒரு எளிய டிப்ஸ்.! இப்படி பண்ணா மாவு கெட்டுப்போகாது.! இட்லி பஞ்சு மாதிரி வரும்.!
Related image2
Summer Flowers: கடவுளுக்குப் பூக்கள்.! வீடு முழுவதும் வாசம்.! கோடையில் பால்கனியில் வளர்க்க ஏதுவான 6 செடிகள்.!
36
தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் வைக்கவும்
Image Credit : Pixabay

தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் வைக்கவும்

வீட்டில் மின்சாரம் அல்லது ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள் ஒரு அகலமான பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி அதற்குள் பால் பாத்திரத்தை வைக்க வேண்டும். இது பாலின் வெப்பநிலையை குறைத்து நேச்சுரல் கூலிங் தரும். தண்ணீரை அவ்வப்போது மாற்றுவது கூடுதல் பலன்கள் தரும். அதேபோல் பால் பாத்திரத்தை சுற்றி ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து அதையும் சுற்றி வைக்கலாம். துணியில் உள்ள ஈரம் காற்றில் ஆவியாகும் பொழுது பாத்திரத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இந்த துணியை அவ்வப்போது ஈரப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

46
பாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் முறை
Image Credit : pinterest

பாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் முறை

பாலை அடுப்பிற்கு அருகிலோ அல்லது ஜன்னல் வழியாக வெயில் படும் இடத்திலோ வைக்க வேண்டாம். வீட்டின் குளிர்ந்த மற்றும் காற்றோட்டமான பகுதியில் வைக்கவும். பாலை தட்டு போட்டு இறுக மூடி வைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக ஓட்டைகள் உள்ள தட்டுகளை பயன்படுத்தி மூடவும். இதனால் ஆவி வெளியேறி பால் சூடாகாமல் இருக்கும். அதே போல் பால் காய்ச்சும் பாத்திரம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். முந்தைய நாள் பயன்படுத்திய பாத்திரமாக இருந்தால் நன்கு தேய்த்து வெயிலில் உலர்த்திய பின்னர் பயன்படுத்துவது பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும்.

56
ஏலக்காயை பயன்படுத்துங்கள்
Image Credit : social media

ஏலக்காயை பயன்படுத்துங்கள்

காலையில் காய்ச்சிய பாலை மாலையில் பயன்படுத்துபவர்களாக இருந்தால் காலையில் காய்ச்சும் பொழுது இரண்டு பச்சை ஏலக்காய்களை சேர்க்கவும். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பாலை நீண்ட நேரம் சேமித்து வைக்க உதவும். கோடை காலத்தில் பால் நீண்ட நேரம் கெடாமல் இருப்பதற்கு எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது பாலை கொதிக்க வைக்க வேண்டும். பால் அறை வெப்பநிலையை அடைந்த பிறகு, குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். சூடான பாலை நேரடியாக குளிர்சாதன பெட்டியில் வைப்பதும் அது விரைவாக கெட்டுப் போவதற்கு காரணமாக அமையும்.

66
பேக்கிங் சோடா வேண்டாமே
Image Credit : Pixabay

பேக்கிங் சோடா வேண்டாமே

ஒரு சிலர் பாலில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா அல்லது சமையல் சோடா சேர்த்து காய்ச்சினால் பால் திரியாமல் இருக்கும் என்று கூறுவார்கள். பாலில் பேக்கிங் சோடா சேர்க்கும் பொழுது அது பாலின் pH அளவை சமநிலைப்படுத்தி விரைவாக தயிராவதை தடுக்கிறது. இருப்பினும் அதிக சமையல் சோடாவை சேர்க்கும் பொழுது அது பாலின் சுவையை மாற்றி விடக்கூடும். எனவே சமையல் சோடாவை பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பயன்படுத்துங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kitchen Garden: மளிகை செலவு இனி பாதிதான்! கோடையில் இந்த 10 காய்களை ஈஸியா வளர்க்கலாம்!
Recommended image2
Life Skills: நேர்மறை மேஜிக்.! உங்கள் வாழ்வை வசந்தமாக்கும் 10 அற்புதத் திறன்கள்!
Recommended image3
கோடை காலத்தில் இட்லி மாவு சீக்கிரம் புளித்து போகுதா? இதோ ஒரு எளிய டிப்ஸ்.! இப்படி பண்ணா மாவு கெட்டுப்போகாது.! இட்லி பஞ்சு மாதிரி வரும்.!
Related Stories
Recommended image1
கோடை காலத்தில் இட்லி மாவு சீக்கிரம் புளித்து போகுதா? இதோ ஒரு எளிய டிப்ஸ்.! இப்படி பண்ணா மாவு கெட்டுப்போகாது.! இட்லி பஞ்சு மாதிரி வரும்.!
Recommended image2
Summer Flowers: கடவுளுக்குப் பூக்கள்.! வீடு முழுவதும் வாசம்.! கோடையில் பால்கனியில் வளர்க்க ஏதுவான 6 செடிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved