- Home
- Lifestyle
- Succulent Plants: உங்க வீட்டுக்கு ஒரு Luxury Villa லுக் வேண்டுமா? இந்த 5 செடிகளை வையுங்க!
Succulent Plants: உங்க வீட்டுக்கு ஒரு Luxury Villa லுக் வேண்டுமா? இந்த 5 செடிகளை வையுங்க!
சின்ன சின்ன தொட்டிகளில் வளர்க்கப்படும் சக்குலன்ட் செடிகள், வீட்டுக்கு ஒரு மாடர்ன் மற்றும் லக்ஸரி லுக்கைக் கொடுக்கும். குறைவான பராமரிப்பில் வீட்டை அழகாக்க எச்சிவேரியா முதல் ஜேட் பிளான்ட் வரை இந்த 5 செடிகள் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

கொஞ்சம் தண்ணீர் போதும்.! ஆனா அழகோ அற்புதம்.!
எச்சிவேரியா (Echeveria):
இந்த செடியின் இலைகள் பார்க்க ரோஜாப்பூ இதழ்கள் மாதிரி வட்டமாக அழகாக இருக்கும். இதை ஒரு சின்ன செராமிக் அல்லது வெள்ளை தொட்டியில் வைக்கும்போது ரொம்பவே எலிகன்டாகத் தெரியும். லிவிங் ரூம் அல்லது சென்டர் டேபிளில் வைத்தால், வீட்டுக்கு இன்ஸ்டன்டாக ஒரு பிரீமியம் ஃபீல் கிடைக்கும். குறைவான தண்ணீரும், லேசான வெயிலும் இதற்குப் போதும்.
ஹாவோர்த்தியா (Haworthia):
உங்கள் வீட்டில் நேரடி சூரிய வெளிச்சம் வராதா? அப்போ ஹாவோர்த்தியா ஒரு பெஸ்ட் ஆப்ஷன். இதன் தடிமனான, கோடுகள் போட்ட இலைகள் ஒரு மாடர்ன் லுக்கைக் கொடுக்கும். பெட்ரூம், ஆபீஸ் டெஸ்க், புக் ஷெல்ஃப் போன்ற இடங்களில் வைக்க இது ஒரு சரியான சக்குலன்ட் செடி.
ஜேட் பிளான்ட் (Jade Plant):
ஜேட் செடியை அதிர்ஷ்டம் மற்றும் பாசிட்டிவ் எனர்ஜியின் அடையாளமாகக் கருதுகிறார்கள். சின்ன தொட்டியில் வைக்கும்போது இது பார்க்க அழகாக இருப்பது மட்டுமல்லாமல், வாஸ்துப்படியும் நல்லது என்று சொல்லப்படுகிறது. பால்கனி, ஜன்னல் அல்லது வீட்டு நுழைவாயிலை அலங்கரிக்க இது பெஸ்ட்.
ஜீப்ரா சக்குலன்ட் (Zebra Succulent):
இந்த செடியின் இலைகளில் வெள்ளை நிற கோடுகள் இருக்கும், இதுவே இதை ரொம்ப தனித்துவமாகக் காட்டுகிறது. இது ரொம்ப மெதுவாக வளரக்கூடிய செடி, அதனால் அதிக பராமரிப்பும் தேவையில்லை. ஒரு சின்ன கருப்பு அல்லது கிரே நிற தொட்டியில் வைத்தால், செம லக்ஸரி லுக்கில் இருக்கும்.
ஸ்ட்ரிங் ஆஃப் பெர்ல்ஸ் (String of Pearls):
இது ஒரு தொங்கும் வகை சக்குலன்ட். பார்க்க சின்ன சின்ன முத்துக்களைக் கோர்த்த மாலை மாதிரி இருக்கும். இதை ஒரு சின்ன தொங்கும் தொட்டியில் வைத்து பால்கனி, கிச்சன் அல்லது ஜன்னல் ஓரத்தில் அலங்கரிக்கலாம். இது எந்த ஒரு மூலையையும் டிரெண்டியாகவும், இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணும் அளவிற்கும் அழகாக மாற்றிவிடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

