MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Gas saving tips: கேஸ் சிலிண்டர் சீக்கிரம் காலியாகிறதா? சமையலில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

Gas saving tips: கேஸ் சிலிண்டர் சீக்கிரம் காலியாகிறதா? சமையலில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

Gas saving tips: கேஸ் சிலிண்டர் சீக்கிரம் காலியாகிறதா? சமையலில் கேஸ் வீணாவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சிலிண்டர் நீண்ட நாட்கள் வர என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 03 2026, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கேஸ் சிலிண்டர் சீக்கிரம் காலியாகிறதா?
Image Credit : pinterest

கேஸ் சிலிண்டர் சீக்கிரம் காலியாகிறதா?

ஒரு சிலிண்டர் வழக்கமாக எத்தனை நாட்களுக்கு வரும் என்று நாம் கணக்கு போட்டு வைத்திருப்போம். ஆனால், எதிர்பார்த்ததைவிட சிலிண்டர் சீக்கிரமே காலியாகிடும். இப்படி நடந்தால் உடனே சிலிண்டரின் தரத்தை சந்தேகிப்பதற்கு முன், சமையலறையில் நாம் அன்றாடம் செய்யும் சில சிறிய தவறுகளை கவனிக்க வேண்டும்.

அடுப்பை பயன்படுத்தும் முறை முதல் பர்னரை சுத்தமாக வைத்திருப்பது வரை சில எளிய சமையல் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் தேவையற்ற கேஸ் வீணாவதைத் தவிர்த்து, சிலிண்டரை அதிக நாட்கள் பயன்படுத்த உதவலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
பாத்திரத்தின் அளவுக்கு அதிகமான தீ
Image Credit : pinterest

பாத்திரத்தின் அளவுக்கு அதிகமான தீ

சமையலை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக, பாத்திரத்தைத் தாண்டி தீ வெளியேறும் அளவுக்கு அதிகமாக கேஸ் திறந்து வைப்பது தவறு. இப்படி பாத்திரத்தின் அடிப்பகுதியைச் சுற்றி தீ வீணாகப் பரவினால் கேஸ் அதிகமாக செலவாகும். எனவே, பாத்திரத்தின் அளவிற்கு ஏற்ற தீயை வைத்து சமையல் செய்யவது நல்லது.

Related Articles

Related image1
Kitchen : கேஸ் அடுப்புக்கு பக்கத்தில் இந்த 7 பொருட்களை வைக்காதீங்க! சின்ன தவறு பெரிய பிரச்சினையாகலாம்!
Related image2
Gas Lighter: கேஸ் லைட்டர் வேலை செய்யலையா? தூக்கி எறியாதீங்க... ஃபர்ஸ்ட் இதை செக் பண்ணுங்க!
37
பர்னரை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்
Image Credit : pinterest

பர்னரை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்

பர்னரில் எண்ணெய், உணவுத் துகள்கள் அல்லது அழுக்கு படிந்திருந்தால் தீ சரியாக எரியாமல் போகலாம். இதனால் சமையல் நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நீல நிறத்தில் எரிய வேண்டிய தீ, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் எரிந்தால் பர்னரை சுத்தம் செய்வது அவசியம். இந்த நிலை தொடர்ந்தால், பர்னர் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை பரிசோதிக்க வேண்டும்.

47
சமையல் பொருள்களை முன்கூட்டியே தயார் செய்வது
Image Credit : pinterest

சமையல் பொருள்களை முன்கூட்டியே தயார் செய்வது

அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்த பிறகு காய்கறி நறுக்குவது, மசாலா தேடுவது, அரிசியை கழுவுவது, மசாலா அரைப்பது போன்றவற்றால் கேஸ் தேவையில்லாமல் வீணாகும். எனவே, சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைத்துவிட்டு அடுப்பை பற்ற வைப்பது கேஸ் மற்றும் நேரத்தை சேமிக்க உதவும்.

57
மூடி வைத்து சமைப்பது
Image Credit : pinterest

மூடி வைத்து சமைப்பது

சமைக்கும்போது பாத்திரத்தை மூடி வைப்பதால் வெப்பம் வெளியேறுவது குறைந்து, உணவு வேகுவதற்கு உதவுகிறது. இதனால் சமையல் நேரத்தையும், கேஸ் பயன்பாட்டையும் குறைக்க முடியும். இது அனைத்து உணவுகளுக்கும் பொருந்தாது என்றாலும், தேவைப்படும் உணவுகளை மூடி வைத்து சமைப்பது நல்லது.

67
சரியான அளவு பாத்திரத்தைப் பயன்படுத்துவது
Image Credit : pinterest

சரியான அளவு பாத்திரத்தைப் பயன்படுத்துவது

கொஞ்சமாக சமைப்பதற்கு மிகப்பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதேபோல், பாத்திரத்தின் அடிப்பகுதி ஈரமாக இருந்தால் அவற்றை துடைத்து அடுப்பில் வைப்பது நல்லது.

மேலும், ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த உணவை உடனே அடுப்பில் வைத்து சூடு செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக சிறிது நேரம் வெளியில் வைத்து அதன் குளிர்ச்சி குறைந்தவுடன் சூடு படுத்தவும். இப்படி செய்தால் கேஸ் பயன்பாட்டை குறைக்க முடியும்.

77
கேஸ் கசிவு உள்ளதா என்பதை கவனியுங்கள்
Image Credit : pinterest

கேஸ் கசிவு உள்ளதா என்பதை கவனியுங்கள்

சிலிண்டர் வழக்கத்தைவிட வேகமாக காலியாகிறது என்றால் வெறும் சமையல் பழக்கங்களை மட்டும் காரணமாக கருதக்கூடாது. ரெகுலேட்டர், கேஸ் குழாய் மற்றும் இணைப்புகளில் கசிவு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யக்கூடாது. உடனே, தகுதியான நிபுணரிடம் பரிசோதிக்க வேண்டும். மேலும், கேஸ் வாசனை வந்தால் தீப்பெட்டி, லைட்டரை பயன்படுத்தாமல், பாதுகாப்பாக கேஸ் விநியோகத்தை நிறுத்தி உதவி பெறுவது அவசியம்.

முக்கியமாக, சிலிண்டர் நீண்ட நாட்கள் வர வேண்டும் என்பதற்காக பாதுகாப்பை ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது. சரியான தீ அளவு, சுத்தமான பர்னர், முன்கூட்டிய சமையல் தயாரிப்பு மற்றும் முறையான உபகரணப் பராமரிப்பு ஆகியவற்றை கடைப்பிடிப்பது கேஸ் வீணாவதை குறைக்க உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
சமையலறை குறிப்புகள்
வாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: ஜெயிக்கணுமா? உங்க கிச்சன்ல இருக்குற இந்த ஒரு பொருள் போதும்
Recommended image2
Cooking Tips : சாதம் குழைந்துவிடாமல் உதிரி உதிரியாக வடிப்பது எப்படி? இதோ சிம்பிள் டிப்ஸ்
Recommended image3
Mint Coriander Storage Tips: புதுசு போலவே இருக்கும் புதினா, கொத்தமல்லி.! ஒரு வாரத்துக்கு பிரஷ்ஷாகவே இருக்கும் சூப்பர் டிப்ஸ்.!
Related Stories
Recommended image1
Kitchen : கேஸ் அடுப்புக்கு பக்கத்தில் இந்த 7 பொருட்களை வைக்காதீங்க! சின்ன தவறு பெரிய பிரச்சினையாகலாம்!
Recommended image2
Gas Lighter: கேஸ் லைட்டர் வேலை செய்யலையா? தூக்கி எறியாதீங்க... ஃபர்ஸ்ட் இதை செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved