MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • cockroach prevention tips: கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லையா? விரட்ட இந்த Tips-ஐ தெரிஞ்சுக்கோங்க!

cockroach prevention tips: கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லையா? விரட்ட இந்த Tips-ஐ தெரிஞ்சுக்கோங்க!

cockroach prevention: சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லையை குறைக்க வேண்டுமா? உணவை மூடி வைப்பது முதல் ஈரப்பதத்தை குறைப்பது வரை பயனுள்ள எளிய வீட்டு குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 03 2026, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லையா?
Image Credit : pinterest

சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லையா?

சமையலறையை எவ்வளவுதான் சுத்தமாக வைத்திருந்தாலும், இரவு நேரத்தில் கரப்பான் பூச்சிகள் நடமாடுவதைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கும். நாம் என்னதான் விரட்டினாலும், நைட் ஆனதும் மீட்டிங் போட கிச்சனுக்கு வந்திருவாங்க. ஒருமுறை வீட்டுக்குள் வந்துவிட்டால், அவை வேகமாக பெருகும் வாய்ப்பிருக்கு. எனவே, ஒன்று இரண்டு பூச்சிகளைப் பார்த்தவுடனே அதை அலட்சியம் செய்யாமல் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது ரொம்ப முக்கியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
கிச்சனில் குடியிருக்கும் கரப்பான் பூச்சி
Image Credit : pinterest

கிச்சனில் குடியிருக்கும் கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சிகளுக்கு ஈரப்பதமான இடங்கள் மிகவும் பிடிக்கும். இதனால், கிச்சன் மற்றும் பாத்ரூம் பகுதிகளில் இவை அதிகம் தென்படுகின்றன. இதன் நடமாட்டத்தைத் தடுக்க, சமையல் முடிந்ததும் கிச்சன் மேற்பரப்புகளில் தண்ணீர் தேங்காமல், உலர்ந்த துணியால் நன்றாகத் துடைத்து சுத்தமாக வைத்திருப்பது நல்லது.

மேலும், கழுவிய பாத்திரங்களை ஈரமாகவே வைக்காமல், வெயில் படும் இடத்தில் வைத்து உலர்த்த வேண்டும். அதேபோல், சிங்க் மற்றும் குழாய்களில் ஏதேனும் தண்ணீர் கசிவு இருந்தால் உடனடியாக சரிசெய்வதும் அவசியம்.

37
உணவுப் பொருட்களை திறந்து வைக்க வேண்டாம்
Image Credit : pinterest

உணவுப் பொருட்களை திறந்து வைக்க வேண்டாம்

சமையலறையில் உள்ள அரிசி, மாவு, சர்க்கரை, பிஸ்கட், தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை திறந்த நிலையில் வைக்காமல் காற்று புகாத டப்பாக்களில் சேமிக்க வேண்டும். சமையல் மேடையில் சிதறும் உணவுத் துகள்களையும் உடனடியாக சுத்தம் செய்வது நல்லது.

47
குப்பையை இரவு முழுவதும் வைக்க வேண்டாம்
Image Credit : pinterest

குப்பையை இரவு முழுவதும் வைக்க வேண்டாம்

உணவுக் கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகள் கரப்பான் பூச்சிகளை ஈர்க்கக்கூடும். எனவே, குறிப்பாக இரவு நேரத்தில் சமையலறை குப்பையை நீண்ட நேரம் வைத்திருக்காமல் அகற்றுவது நல்லது. குப்பைத் தொட்டியையும் அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

57
சிறிய இடுக்குகளையும் கவனியுங்கள்
Image Credit : pinterest

சிறிய இடுக்குகளையும் கவனியுங்கள்

முக்கியமாக சுவர், கதவு, சமையலறை அலமாரி மற்றும் சிங்க் பின்புறம் உள்ள சிறிய விரிசல்கள் வழியாக கரப்பான் பூச்சிகள் உள்ளே வரலாம். இத்தகைய இடங்களை பொருத்தமான சீலண்ட் (Sealant / ஒட்டும் பசை) மூலம் அடைத்தால் கரப்பான் பூச்சி நடமாட்டத்தை குறைக்கலாம்.

67
bait அல்லது trap பயன்படுத்தலாம்
Image Credit : pinterest

bait அல்லது trap பயன்படுத்தலாம்

அதிகமாக கரப்பான் பூச்சிகள் இருந்தால், வீட்டில் bait அல்லது trap-களை (பொறி) வழிமுறைகளை பயன்படுத்தலாம். ஆனால், ஏதேனும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தினால், அவற்றை உணவு, பாத்திரங்கள் மற்றும் சமையல் மேடைகளுக்கு அருகில் கவனக்குறைவாக வைக்கக்கூடாது. குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இருக்கும் வீடுகளில் கூடுதல் பாதுகாப்புடன் செயல்படுவது முக்கியம்.

77
pest control சேவை
Image Credit : pinterest

pest control சேவை

தொடர்ந்து அதிகளவில் கரப்பான் பூச்சிகள் தென்பட்டால், தொழில்முறை pest control சேவையை நாடுவது சிறந்தது. குறிப்பாக உங்கள் சமையலறையை ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தாலே கரப்பான் பூச்சி தொல்லையை குறைப்பது எளிதாகிவிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சமையலறை குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mushroom Storage Tips: காளான் சீக்கிரம் கறுத்துப் போகுதா? இந்த ஒரு கிச்சன் ட்ரிக் தெரிஞ்சா போதும்..!
Recommended image2
Weight Loss Foods: உடல் எடையை குறைச்சு செரிமானத்தை அதிகரிக்கணுமா? இதோ சூப்பர் ஐடியா!
Recommended image3
Mutton Cooking Tips: மட்டன் எவ்வளவு நேரம் வேக வைத்தாலும் கல்லு மாதிரி இருக்கா? இதை மறந்துடாதீங்க!
Related Stories
Recommended image1
Cockroach Issue : கரப்பான் பூச்சிகளால் ஒரே தொல்லையா? வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே அவற்றை ஓட ஓட விரட்டுவது எப்படி?
Recommended image2
Cockroach Janta Party : ஒரு தலைமுறையின் கோபத்திற்கு 'கரப்பான் பூச்சி' என்று பெயர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved