MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தங்க நகைகளை சுத்தம் செய்ய இந்த '1' பொருள் போதும்; புதுசு மாதிரி ஜொலிக்கும்!!

தங்க நகைகளை சுத்தம் செய்ய இந்த '1' பொருள் போதும்; புதுசு மாதிரி ஜொலிக்கும்!!

தங்க நகைகள் அழுக்கு படிந்து இருந்தால் புதுசு மாதிரி ஜொலிக்க அதை வீட்டிலேயே எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 02 2025, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Simple Ways To Clean Gold Jewellery  At Home : தங்க நகைகள் மீது பெண்களுக்கு எப்போதுமே ஆசை இருக்கும். இதனால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல விதமான டிசைன்களில் தங்க நகைகளை வாங்கி வீட்டில் வைப்பார்கள். மேலும் தங்க நகைகளை அடிக்கடி பயன்படுத்தினால் அதில் அழுக்குகள் எண்ணெய்கள் படிந்து தங்கத்தின் நிறத்தை மங்க வைத்து விடுகிறது. சொல்ல் போனால் தங்கம் வாங்கியது போலவே ஜொலிப்பதில்லை. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

இதனால் பல பெண்கள் தங்க தங்க கடைக்கு சென்று பாலிஷ் செய்கிறார்கள். ஆனால் அப்படி பாலிஷ் செய்யும்போது அதிலிருந்து சிறிதளவு தங்கம் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. ஜெட் வேகத்தில் இருக்கும் தங்கத்தின் விலைக்கு இப்படி அதை பாலிஷ் செய்து குறைத்தால் எப்படிம்?! எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க வீட்டிலேயே மிக எளிதாக தங்கத்தை சுத்தம் செய்யலாம்.  அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

36
டிஷ் வாஷ் கொண்டு தங்க நகைகள் சுத்தம் செய்தல்:

டிஷ் வாஷ் கொண்டு தங்க நகைகள் சுத்தம் செய்தல்:

ஒரு கிண்ணத்தில் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் மட்டும் டிஷ்வாஷ் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அதில் தங்க நகைகளை போடுங்கள். 15 நிமிடம் கழித்து டூத் பிரஷ் கொண்டு தங்க நகைகளின் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை மென்மையாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஓடும் நீரில் நகைகளை கழுவுங்கள். இறுதியாக ஒரு துணியால் தங்க நகைகளை ஒத்தி உலர்த்தவும்.

இதையும் படிங்க:  வெறும் சோடா உப்பு போதும்!!  கை வலிக்காம தீஞ்சு போன பாத்திரத்தை கழுவிடலாம்

46
சூடான நீரில் தங்க நகைகளை சுத்தம் செய்யலாமா?

சூடான நீரில் தங்க நகைகளை சுத்தம் செய்யலாமா?

ஒரு பெரிய கிண்ணத்தில் இளம் சூட்டில் இருக்கும் தண்ணீரை ஊற்றுங்கள். அதில் தங்க நகைகளை போடவும். சில நிமிடங்களிலேயே தங்க நகைகளில் இருக்கும் அழுக்குகள் எண்ணெய் பசை அகன்றிவிடும். மென்மையான பிரஷ் கொண்டு நகைகளை சுத்தம் செய்ய வேண்டும். பின் துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். 

இதையும் படிங்க: வெறும் 10 நிமிடம்! ஏசியை இப்படி கிளீன் பண்ணுங்க.. காத்து ஜில்லுனு வரும்!

56
டூத் பேஸ்ட் கொண்டு தங்க நகைகள் சுத்தம் செய்தல்:

டூத் பேஸ்ட் கொண்டு தங்க நகைகள் சுத்தம் செய்தல்:

டூத் பேஸ்ட்டை சிறிதளவு தொட்டுக்கொண்டு நகைகள் மீது மென்மையாக தேய்க்க வேண்டும். பிறகு ஒரு மெல்லிய துணி கொண்டு நகைகளை சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் நகைகளில் இருக்கும் தூசிகள் அழுக்குகள் வெளியேறிவிடும். பிறகு ஓடும் நீரில் நகைகளை நனைக்க வேண்டும்.. டூத் பேஸ் நகைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கி ஜொலிக்க உதவும்.

66
முத்துக்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்வது எப்படி?

முத்துக்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்வது எப்படி?

முத்துக்கள் மென்மையானது என்பதால் சிறிதளவு சூடான நீரில் மென்மையான ஷாம்பு கலந்து ஒரு மென்மையான பிரஷ் கொண்டு நகைகளை மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். பவளம் பதித்த நகைகளை கடைகளில் தான் கொடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
தங்க நகை
தங்கம்
தங்க நகைகள் சுத்தம் செய்யும் முறைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved