அல்சைமர் நோயின் அறிகுறிகளை நிர்வகிக்க உதவும் சிம்பிள் டிப்ஸ் இதோ!
வயதானவர்களைப் பாதிக்கும் ஞாபக மறதி பிரச்சனையான அல்சைமர் நோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
Alzheimer
வயதாகி விட்டாலே ஞாபக மறதி பிரச்சனை அதிகரிக்கும். குறிப்பாக அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் முடிவெடுப்பதில் உள்ள சிக்கல்கள் இருந்தால் அவை அல்சைமர் நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலை டிமென்ஷியாவின் முக்கிய காரணமாகும், இது முதன்மையாக வயதான நபர்களை பாதிக்கிறது. இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை என்றாலும், சில மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் தற்காலிகமாக நிர்வகிக்க முடியும்.
Alzheimer
சிலருக்கு தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கலாம். ஆனால் பல ஆரம்ப அறிகுறிகள் இன்னும் தெரியும். மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறி கற்றுக்கொண்ட புதிய தகவல்களை மறந்துவிடுவது, குறிப்பாக நிகழ்வுகள், இடங்கள் அல்லது பெயர்கள் நினைவுக்கு வராமல் போகலாம். இத்தகைய அறிகுறிகளை அனுபவிக்கும் நபர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம், அதே நேரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது முன்னேற்றத்தை மெதுவாக்குவதற்கான மிகச் சிறந்த உத்தியாகும்.
Alzheimer's Symptoms
இந்த நிலைமையை மாற்ற முடியாது என்றாலும், அமெரிக்காவில் எளிய வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் அல்சைமர் நோயை வென்றதாகக் கூறப்படும் இரண்டு பேர் கண்டறியப்பட்டனர். ஆனால் அல்சைமர் நோயை ஆரம்பத்தில் நிர்வகிக்க உதவும் சில உத்திகள் உள்ளன. இது குறித்து பார்க்கலாம் :
சரியான உணவு
சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகள், நட்ஸ், முழு தானியங்கள், மீன் மற்றும் கோழி மற்றும் ஆரோக்கியமான எண்ணெய்கள் போன்ற ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடவும்.. இந்த ஆரோக்கியமான உணவுத் திட்டம் உங்கள் ரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்கிறது, இது மூளை ஆரோக்கியத்திற்கு அற்புதம்.
Tips To Manage Alzheimer's
உடற்பயிற்சி :
உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாகவும், உங்கள் உடலை ஃபிட்டாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலு, இது உங்கள் மூளைக்கு அவசியமான பயிற்சியாகும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிட உடற்பயிற்சி நேர்மறையான முடிவுகளுக்கு வழிவகுக்கும். மெதுவான நடைபயிற்சி, நீச்சல் அல்லது நடனம் ஆகியவை சிறந்த உடற்பயிற்சிகளாக கருதப்படுகிறது. தினமும் இந்த உடற்பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றை செய்யலாம்.
மருத்துவம்
மல்டிவைட்டமின் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.. உங்கள் உடல் சரியாக செயல்பட தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் அவை வழங்குகின்றன. இருப்பினும், எந்த சப்ளிமெண்ட்ஸ் பொருத்தமானது என்பது குறித்த தனிப்பட்ட ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.
Tips To Manage Alzheimer's
அமைதியாக இருங்கள்
நிலையான மன அழுத்தம் உங்கள் நினைவகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், தியானம் அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தை நிதானப்படுத்தவும் நிர்வகிக்கவும் ஆரோக்கியமான வழிகளைக் கண்டறியவும். தினசரி வேலை அழுத்தத்தை போக்க சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சரியான தூக்கம் - உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால், உங்கள் மூளை சரியாக செயல்படாது. தினமும் தரமான தூக்கத்திற்கு குறைந்தபட்சம் 7-8 மணிநேரம் தூங்குவது அறிவுறுத்தப்படுகிறது. இது உங்கள் மூளையை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.