MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த '3' பொருள் யூஸ் பண்ணுங்க!! உங்க வீட்டு மரக்கதவு புதுசு போல பாலிஷ் ஆகிடும்!!

இந்த '3' பொருள் யூஸ் பண்ணுங்க!! உங்க வீட்டு மரக்கதவு புதுசு போல பாலிஷ் ஆகிடும்!!

Wooden Door Cleaning Tips : உங்கள் வீட்டில் இருக்கும் மரக்கதவை மிகவும் எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 14 2024, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Wooden Door Cleaning Tips In Tamil

Wooden Door Cleaning Tips In Tamil

பொதுவாக ஒவ்வொருவரும் தங்கள் வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வீடு சுத்தமாக இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாகவும், வீட்டிற்கு வருபவர்களின் கண்களுக்கு அவரும் விதமாகவும் இருக்கும். வீட்டை சுத்தம் செய்பவர்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் மிகவும் எளிதாக சுத்தம் செய்து விடுவார்கள். 

இதையும் படிங்க:  தரையை துடைச்ச அப்பறம் 'மாப்' அழுக்கா மாறிடுதா? ஈஸியா மாப்பை கிளீன் பண்ண டிப்ஸ்!!

24
Wooden Door Cleaning Tips In Tamil

Wooden Door Cleaning Tips In Tamil

ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் மரக்கதவை சுத்தம் செய்ய மறந்து விடுகிறார்கள். இன்னும் சிலரோ அதை சுத்தம் செய்வதற்கு ரொம்பவே கஷ்டம் என்று அப்படியே விட்டுவிடுகிறார்கள் ஆனால் மரக்கதவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே போட்டு விட்டால் அதில் தூசிகள் குவிந்து, அதன் பாலிஷ் போய் பார்ப்பதற்கு மங்களாக இருக்கும். அதுமட்டுமின்றி கதவுகளை சுத்தம் செய்வதற்கு கடைகளில் கிடைக்கும் ரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் அவற்றின் நிறம் மாறிவிடும். 

அந்த வகையில் உங்கள் வீட்டின் மரக்கதவு ரொம்பவே அழுக்காக இருந்தால், அதை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று தெரியவில்லையா? இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து உங்க வீட்டு மரக்கதவை பளபளக்க செய்யலாம். இதன் காரணமாக மரக்கதவு சேதமடைய முடியாது. உங்களது கதவு முற்றிலும் சுத்தமாக இருக்கும். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

34
Wooden Door Cleaning Tips In Tamil

Wooden Door Cleaning Tips In Tamil

மரக்கதவை எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ்:

சூடான நீர் டிஷ்வாஷ் லிக்விட்

மரக்கதவில் இருக்கும் தூசி மற்றும் அழுக்கை சுத்தம் செய்ய சூடான நீர் மற்றும் டிஷ் வாஷ் லிக்விட் பயன்படுத்தலாம். இதற்கு முதலில் கதவை நன்றாக ஒரு பிரஷ்ஷால் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் சூடான நீர் மற்றும் டிஷ்வாஷ் லிக்விடை நன்றாக கலந்து ஒரு துணியை அதில் நனைத்து பிறகு கதவை நன்றாக துடைக்கவும். இறுதியாக ஒரு உலர்ந்த துணியால் கதவை துடைக்க வேண்டும்.

இதையும் படிங்க: மிதியடியை துவைப்பது இவ்வளவு ஈஸியா? சூப்பர் டிப்ஸ்!!

44
Wooden Door Cleaning Tips In Tamil

Wooden Door Cleaning Tips In Tamil

தேங்காய் எண்ணெய் மற்றும் வினிகர்

இதற்கு ஒரு பாத்திரத்தில் அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை கப் வெள்ளை வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலந்து ஒரு மென்மையான துணியை அதில் நனைத்து கதவில் நன்றாக மெதுவாக தேய்க்க வேண்டும். இறுதியாக ஒரு உலர்ந்த துணியால் துடைக்கவும். தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துவதன் மூலம் உங்களது மரக்கதவு முற்றிலும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். முக்கியமாக நீங்கள் கதவை இப்படி துடைப்பதற்கு முன் உங்களது கதவை சுத்தம் செய்ய மறக்காதீர்கள். இல்லையெனில் அழுக்குகள் அதில் அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கும். 

வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய்:

இதற்கு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் நன்கு கலந்து ஒரு துணியை அதில் நனைத்து கதவை நன்றாக துடைக்கவும் இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டு மரக்கதவு பார்ப்பதற்கு புதியது போல் இருக்கும். கதவை இப்படி துடைப்பதற்கு முன் சுத்தம் செய்ய மறந்து விடாதீர்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved