MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kitchen Tips: ஹோட்டல் ஸ்டைல் தோசை, சட்னி, சாப்பாடு இனி வீட்லயே! இந்த சூப்பர் டிப்ஸ் தெரிஞ்சா போதும்.!

Kitchen Tips: ஹோட்டல் ஸ்டைல் தோசை, சட்னி, சாப்பாடு இனி வீட்லயே! இந்த சூப்பர் டிப்ஸ் தெரிஞ்சா போதும்.!

சமையலின் சுவை, மணம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த சில எளிய குறிப்புகள். தோசை மாவு புளித்துவிட்டதா? வாழைப்பழம் கருத்துப் போகிறதா? இதோ உங்களுக்கான ஸ்மார்ட் சமையலறை தந்திரங்கள்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 08 2026, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
இனி டேஸ்ட் தாறு மாறா இருக்கும்.!
Image Credit : Getty

இனி டேஸ்ட் தாறு மாறா இருக்கும்.!

தினமும் சமைத்தாலும், சில சின்ன சின்ன டிப்ஸ்  மற்றும் ஐடியாக்கள் சமையலின் சுவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றால் அது மிகையல்ல. சமையலறையில் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் சில ஸ்மார்ட் டச் கொடுத்தால், உங்கள் சமையல் தனித்துவமாக மாறும்.  சாப்பிடும் நபர்களும் அதனை ஆகஹா ஒஹோ என புகழ்வார்கள்.  சின்ன சின்ன ஸ்மார்ட் டச்,  உணவின் சுவை, மணம், தோற்றத்தை மட்டுமல்ல, சாப்பிடும் அனுபவத்தையும் அற்புதமாக்கும். இது உங்கள் குடும்பமே உங்களை சுற்றி ஓடி வர வைக்கும்.

27
சமயலில் யாரும் சொல்லாத ரகசிய டிப்ஸ்.!
Image Credit : stockPhoto

சமயலில் யாரும் சொல்லாத ரகசிய டிப்ஸ்.!

உதாரணமாக, ரசம் செய்யும்போது புளியுடன் ஒரு சிறிய வெல்லத் துண்டைச் சேர்த்தால் போதும், ரசத்தின் சுவை இன்னும் அருமையாக இருக்கும். அதேபோல, பாலக் கீரையை அரைத்த பிறகு, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்தால், நல்ல மணம் வரும். இது சாப்பிடுவதற்கு முன்பே பசியைத் தூண்டும். எல்லார் வீட்டிலும் தோசை செய்வது வழக்கம். தோசை சுடும்போது, நடுவில் ஒரு சிறிய ஓட்டை போட்டு அதில் எண்ணெய் விட்டால், தோசை நன்கு மொறுமொறுப்பாக வரும். மேலும், இருபுறமும் நன்றாக வேகும்.

Related Articles

Related image1
Vastu Tips: வீட்டில் வாஸ்து தோஷமா? இந்த 5 எளிய வழிகளில் சரிசெய்யலாம்.!
Related image2
Kitchen Tips: இனி கேஸ் செலவு அப்படியே மிச்சம்.! சாப்பாடும் 1 நிமிடத்தில் ரெடியாகும்.! சீக்ரெட் இதுதான்.!
37
இனி நிறங்கள் மாறவே மாறாது.!
Image Credit : stockPhoto

இனி நிறங்கள் மாறவே மாறாது.!

வாழைப்பழங்கள் சில மணி நேரங்களிலேயே கருத்துவிடும். அவை ஃப்ரெஷ்ஷாக இருக்க, ஈரமான துணியில் சுற்றி வைப்பது நல்லது. சில காய்கறிகள் நறுக்கிய பிறகு கருப்பாவதைத் தடுக்க, தண்ணீரில் சிறிது பால் கலந்து அதில் போட்டு வைக்கலாம். உதாரணமாக, நறுக்கிய கத்திரிக்காய், வாழைக்காய் போன்றவை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.இட்லி, தோசை மாவு சில சமயம் சீக்கிரம் புளித்துவிடும். அப்போது அதை வீணாக்க வேண்டாம். காய்ச்சி ஆறவைத்த பாலை மாவில் கலந்தால், புளிப்புச் சுவை குறைந்து, ஒரு புதிய சுவை கிடைக்கும்.
47
மாங்காய் பொடி ரகசியம் இதுதான்.!
Image Credit : stockPhoto

மாங்காய் பொடி ரகசியம் இதுதான்.!

உருளைக்கிழங்கை வேகவைக்கும்போது, சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்தால், கிழங்கு உடையாமல் முழுதாக இருக்கும். இது மசாலா தோசை அல்லது உருளைக்கிழங்கு கறி செய்ய சூப்பரான டிப். அதேபோல, வெந்தயக் கீரை சூப் செய்யும்போது, ஆரம்பத்திலேயே உப்பு சேர்த்தால், இறுதியில் கசப்புச் சுவை வராது.கொத்தமல்லி, புதினா சட்னி செய்யும்போது புளிக்குப் பதிலாக, உலர்ந்த மாங்காய் பொடியைச் சேர்த்தால், சுவை வேற லெவலில் இருக்கும். இது வித்தியாசமான சுவையை விரும்புவோருக்கு மிகவும் பிடிக்கும்.
57
இப்படி சமைத்தால் வீடே மணக்கும்.!
Image Credit : stockPhoto

இப்படி சமைத்தால் வீடே மணக்கும்.!

தேங்காய் துருவல் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்க, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். வறுத்த உணவுகளின் மீது கடைசியாக சிறிது தேங்காய் எண்ணெய் தெளித்துக் கலந்தால், கூடுதல் மணமும் சுவையும் கிடைக்கும்.இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால், மாவு பாத்திரத்தில் ஒட்டாது. இது உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தும். கொத்தமல்லியை நெய்யில் லேசாக வதக்கி சாம்பாரில் சேர்த்தால், அதன் மணம் அருமையாக இருக்கும்.தேங்காய் துருவலை மிக்சியில் அரைக்கும்போது, சாதாரண தண்ணீருக்குப் பதிலாக வெந்நீர் ஊற்றி அரைத்தால், கெட்டியான தேங்காய்ப் பால் அதிகமாகக் கிடைக்கும்.
67
குண்டானபூரி, சாப்ட்டான தோசை ரெடி.!
Image Credit : stockPhoto

குண்டானபூரி, சாப்ட்டான தோசை ரெடி.!

பூரி மென்மையாக வரவில்லை என்றால், ஒரு சின்ன மாற்றம் செய்தால் போதும். கோதுமை மாவுடன் சிறிது ரவை (semolina) கலந்து பிசைந்தால், பூரி நன்கு உப்பி, சுவையாக வரும். இன்ஸ்டன்ட் தோசை செய்ய, அரிசியை மோர் அல்லது தயிரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, மிக்சியில் மென்மையாக அரைக்கவும். இந்த மாவை தோசைக்கல்லில் ஊற்றினால், சாஃப்ட்டான தோசை உடனடியாக ரெடி.காய்ந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோல்களை மசாலா பொருட்கள் வைக்கும் இடத்தில் வைத்தால், எறும்புகள் மற்றும் பூச்சிகள் வராது.பாலக் ப்யூரி செய்யும்போது, தேங்காய்க்குப் பதிலாக தேங்காய்ப் பால் சேர்த்தால், சாப்பிடும்போது ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும். ஆப்பம் மாவு அரைக்கும்போது, அரை கப் வடித்த சாதம் சேர்த்தால், ஆப்பம் மிகவும் மென்மையாக வரும்.
77
 சமையல் நேரம் குறையும், சுவை கூடும், பரிமாறும் அழகும் மேம்படும்.!
Image Credit : Getty

சமையல் நேரம் குறையும், சுவை கூடும், பரிமாறும் அழகும் மேம்படும்.!

இந்த சின்ன சின்ன டிப்ஸ்களைப் பின்பற்றினால், சமையல் நேரம் குறையும், சுவை கூடும், பரிமாறும் அழகும் மேம்படும். உணவின் மணம், சேமிப்பு முறை, மாவின் பதம் என அனைத்துக்கும் இதுவே எளிய தீர்வுகள்.இந்தக் குறிப்புகளை நாம் சாதாரணமாக மறந்துவிடுவோம். ஆனால், இவைதான் நம் அன்றாட சமையலை ஒரு மாஸ்டர் செஃப் லெவலுக்கு மாற்றும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
உணவு
உணவு சேர்க்கைகள்
உடற்பயிற்சிக்கான உணவுகள்
சமையலறை குறிப்புகள்
சமையலறை சுத்தம் செய்யும் குறுக்கு வழிகள்
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாசம் ஒருமுறை இந்த பொடியை போடுங்க... உங்க மணி பிளான்ட் சூப்பரா வளரும்!
Recommended image2
வெண்டைக்காய் ஒரு வாரம் வரை ஃப்ரெஷ்ஷா இருக்க... இந்த 2 டிப்ஸ் போதும்!
Recommended image3
பட்டு துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்கலாமா? எப்படி துவைப்பது? தப்பி தவறி இதை மட்டும் செய்திடாதீங்க
Related Stories
Recommended image1
Vastu Tips: வீட்டில் வாஸ்து தோஷமா? இந்த 5 எளிய வழிகளில் சரிசெய்யலாம்.!
Recommended image2
Kitchen Tips: இனி கேஸ் செலவு அப்படியே மிச்சம்.! சாப்பாடும் 1 நிமிடத்தில் ரெடியாகும்.! சீக்ரெட் இதுதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved