- Home
- Lifestyle
- வீட்டில் மறைந்துள்ள கரப்பான் பூச்சிகளை அடியோடு ஒழிக்க இப்படி செய்ங்க! ஒன்னு கூட தப்பிக்காது!
வீட்டில் மறைந்துள்ள கரப்பான் பூச்சிகளை அடியோடு ஒழிக்க இப்படி செய்ங்க! ஒன்னு கூட தப்பிக்காது!
கரப்பான் பூச்சிகளை கூண்டோடு ஒழிக்க என்னென்ன மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் அலமாரிகளை திறந்தால் அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சமையலறை அலமாரிகளை திறக்கும் போது கரப்பான் பூச்சியை இருப்பதை பார்க்கும் போது நம்மில் பலருக்கும் எரிச்சலும், முக சுழிப்பும் உண்டாகும் . குறிப்பாக இந்த கரப்பான் பூச்சிகள் நாம் சமைத்த உணவுகளின் மீது ஊர்ந்து அல்லது பறந்து செல்லும் போது அவை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. தவிர இது பல்வேறு நோய் கிருமிகளை பரப்புகிறது.இதனை கட்டுப்படுத்த ரசாயனம் கலந்த ஹிட்கள் இருப்பினும் அதனை கையாளும் போது மிக கவனமாக செயல்பட வேண்டி இருக்கும்.
பல 100 ஆண்டுகளாக இந்த கரப்பான் பூச்சி நமது சமையல் அறையில் பதுங்கி இருக்கின்றன. இவைகளை கூண்டோடு ஒழிக்க என்னென்ன மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை:
கரப்பான் பூச்சிகளை கூண்டோடு அழிக்க சிறந்த மருந்து எனில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரையை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு கலவையாகும். இதிலுள்ள சர்க்கரை கரப்பான் பூச்சிகளை ஈர்க்கும் பணியை சிறப்பாக செய்கிறது. அதே சமயத்தில் பேக்கிங் சோடா அவைகளை கொல்லும்.
கரப்பான் பூச்சிகளை பார்க்கும் இடங்களில் இந்த கலவையை உருட்டி வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது இதனை சாப்பிட்டு விட்டு கரப்பான் பூச்சிகள் சில நொடிகளில் இருந்து வருவதை காணலாம்.
வேப்பெண்ணெய் :
வேப்பெண்ணயை தண்ணீருடன் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு சமையல் அறை உட்பட மற்ற இடங்களில் / அனைத்து கார்னர்களிலும், அலமாரிகளில் இதனை ஸ்பிரே செய்யலாம்.
இதனால் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத காரணத்தினால் இது சிறந்த பாதுகாப்பு முறையாகும். இப்படி இரவில் தெளிப்பதால் காலையில் நாம் பார்க்கும் போது அனைத்தும் இறந்து இருப்பதை காண முடியும்.
பெப்பர்மிண்ட் ஆயில்:
கரப்பான் பூச்சியை ஒழிக்க பயன்படும் மருந்துகளில் பெப்பர்மிண்ட் ஆயில் ஒரு நல்ல தேர்வு என்று கூறலாம். இதனை உப்பு கலந்த தண்ணீருடன் கலந்து கரப்பான் பூச்சிகள் இருக்கும் அல்லது மறைந்து/ஒளிந்து இருக்கும் இடங்களில் தெளித்து விட வேண்டும். அவ்ளோதான் இதற்கு பிறகு நீங்கள் கரப்பான் பூச்சியை தேடினாலும் கிடைக்காது.
பிரியாணி இலை :
கரப்பான் பூச்சிகள் இல்லாத வீடாக மாற்ற பிரியாணி இலை மிகச் சிறந்த சாய்ஸ் ஆகும். அன்றாடம் சமைக்கும் உணவில் வாசனைக்காகவும், மசாலாவிற்காகவும் சேர்க்கப்படும் இந்த இலைகள் கரப்பான் பூச்சியை ஒழிக்கும் என்று கூறும் போது பலரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.
சில பிரியாணி இலைகளை தண்ணீர் கொதிக்க வைத்து அதனை ஒரு ஸ்பிரே பாட்டில் மூலம் கரப்பான் பூச்சி காணும்ம் இடங்களில் ஸ்பிரே செய்தால் கரப்பான் பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும். இது மிகச்சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் கரப்பான் பூச்சிகள் அழிந்து விடும்.
போரிக் ஆசிட் :
கரப்பான் பூச்சிகளை கொல்ல மிகச் சிறந்த மருந்துகளில் ஒன்று இந்த போரிக் ஆசிட்டும் ஒன்றாகும். வேகமான வீட்டு வைத்தியம் போரிக் ஆசிட்டாகும். இந்த பொடியை கரப்பான் பூச்சிகள் மறைந்து இருக்கும் அல்லது அதனை காணும் இடங்களில் தூவி விட வேண்டும்.
கரப்பான் பூச்சிகள் இந்த பொடியை உட்கொள்ளும் சமயத்தில் அவை நீரிழப்பு காரணத்தினால் இறந்து விடும். ஆகையால் இந்த பொடியை பயன்படுத்து பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகல் மற்றும் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு எட்டாதவாறு பார்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.