MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பாதாம் தோலை குழந்தைகளும் வயதானவர்களும் கட்டாயம் சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா? 

பாதாம் தோலை குழந்தைகளும் வயதானவர்களும் கட்டாயம் சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா? 

Almond Skin Side Effects : பாதமில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி காணப்படுகிறது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது. ஆனால், பாதாமின் தோலை குழந்தைகளும் பெரியவர்களும் சாப்பிடக்கூடாது என சொல்லப்படுகிறது. 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 13 2024, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Almond Skin Side Effects In Tamil

Almond Skin Side Effects In Tamil

உலர் பழங்களில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதில் பாதாமுக்கு தனி இடம் உண்டு. பாதாம் உண்பதால் வயிறு நிரம்பிய உணவு நீண்ட நேரம் இருக்கும். ஆகவே தான் உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிகின்றனர். வயிறு நிரம்பிய உணர்வு பசியை கட்டுப்படுத்த உதவும். பாதாமில் உள்ள ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவும். இளமையான தோற்றத்தை தக்க வைக்க பாதமின் ஊட்டச்சத்துகள் உதவும். 

பாதாம் சுவையை விரும்பாதவர்கள் மிகவும் குறைவு தான். குழந்தைகள் முதல் பெரியோர் வரை பாதாம் எல்லோருக்கும் நல்ல பலன்களை தரும். நாள்தோறும் பாதாம் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல் திறன் மேம்பாடு அடையும். இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும். பாதாமை குளிர்காலத்தில் அப்படியே உண்ணலாம்.

இதையும் படிங்க:   காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்  பாதாமா? திராட்சையா? எதை சாப்பிட்டால் நல்லது?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Almond Skin Side Effects In Tamil

Almond Skin Side Effects In Tamil

ஆனால், வெயில் காலங்களில் இரவில் ஊற வைக்க வேண்டும். அதை தோலுரித்து காலை உண்பதே நல்லது. ஏனென்றால் ஆயுர்வேதத்தின்படி, பாதாம் வெப்பத்தை உருவாக்கும்  உணவாகக் கருதப்படுகிறது. அதனை இரவில் ஊறவைப்பது, வெப்பத்தை குறைக்க உதவுகிறது. 

வெயில் காலங்களில் பாதாமை ஊறவைத்து உண்பதற்கு ஒரு காரணம் இருப்பதை இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதை போலவே பாதாமை தோலுரித்து உண்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. அதிலும் குழந்தைகளும், பெரியவர்களும் கட்டாயம் தோலுரித்து தான் உண்ண வேண்டுமாம். அது ஏன் என இங்கு காணலாம். 

பாதாம் ஊட்டச்சத்துக்கள்: 

பாதாமில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் தலைமுடி, தோல் ஊட்டம் பெறும். பாதாம் தோலில் நார்ச்சத்து உள்ளது. அதுவும் நல்ல பலன்களை கொடுக்கும்.

இதையும் படிங்க:  பாதாமை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் தெரியுமா..??

34
Almond Skin Side Effects In Tamil

Almond Skin Side Effects In Tamil

பாதாமை ஊறவைத்த பின்னர் அதனை தோலை நீக்கி உண்ண வேண்டும் என பழைய ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன. ஏனெனில் பாதாமை நீரில் ஊறவைத்த பின் அதில் டானின் என்ற பொருள் சேர்கிறது. அதை நீக்கிவிட்டு உண்பதால் ​​பாதாமின் முழு ஆற்றலும் நம் உடலுக்கு கிடைக்கும் என பழைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

ஆனால், அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் பாதாமை தோலுடன் உண்பதால் நன்மைகள் கிடைக்கும் என  சொல்கிறது. பாதாம் தோலை நீக்காமல் உண்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இதனால் வைட்டமின் ஈ, நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கிறது.

ஏன் குழந்தைகள், பெரியவர்கள் தவிர்க்க வேண்டும்? 

எல்லா வயதினருக்கும் ஒரே மாதிரியான செரிமான மண்டலம் இல்லை. ஒவ்வொருவரின் வயது, வாழ்க்கை முறை, சூழலுக்கு ஏற்ற மாதிரி செரிமானம் ஆகும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் செரிமான சற்று மந்தமாகத்தான் இருக்கும். இவர்கள் பாதாமை தோலுடன் உண்பதால் செரிமானத்திற்கு சிரமம் ஏற்படலாம்.

44
Almond Skin Side Effects In Tamil

Almond Skin Side Effects In Tamil

ஆகவே பாதாமை ஊறவைத்து தோலுரித்த பின் உண்ண வேண்டும். தோலுரித்த பாதாமாக இருந்தாலும் உடலுக்கு நல்லது தான். ஒருவேளை செரிமான பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் தோலுரிக்காமல் கூட பாதாமை யார் வேண்டுமானாலும் உண்ணலாம். 

பாதாமின் தோலுரிக்க பொதுவான காரணங்கள்: 

பாதாமின் தோலில் அமிக்டலின் காணப்படுகிறது. இது கசப்பான சுவையைத் தரக்கூடியது. தோலுரிக்கும் போது இந்த கசப்பு சுவை நீங்கிவிடுகிறது. ஆகவே சாப்பிட இனிமையாக இருக்கும். 

பாதாமின் தோல் கடினமானது. இதனை சிலரால் ஜீரணிக்க முடியாது. தோலை உரித்தால் எளிதில் ஜீரணமாகும். 

பாதம் தோலில் பைடிக் என்ற அமிலம் காணப்படும். அது ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும். ஆகவே தோலை உரித்தால் பைடிக் அமிலம் குறையும். இதனால் வைட்டமின் ஈ, மெக்னீசியம்,  பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதை ஊக்கப்படுத்தும். இதனால் பாதாமை தோலுரிக்க அறிவுறுத்தப்படுகிறது.

பாதாம் தோலுரித்தால் மென்மையாக இருக்கும். அதை உண்ணும்போது சுவையாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Taps: துருப்பிடித்த தண்ணி குழாய்கள் புதுசு போல ஜொலிக்கணுமா? 'இந்த' 2 சமையலறை பொருட்கள் போதும்!
Recommended image2
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image3
Cow Ghee Benefits: பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தினமும் சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved