MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழந்தையை வளர்க்கும் போது இந்த '5' விஷயங்கள் ரொம்ப முக்கியம்; மறந்தும் கூட இந்த '1' தப்பு பண்ணிடாதீங்க!

குழந்தையை வளர்க்கும் போது இந்த '5' விஷயங்கள் ரொம்ப முக்கியம்; மறந்தும் கூட இந்த '1' தப்பு பண்ணிடாதீங்க!

Raising Independent Kids : உங்கள் குழந்தையை நீங்கள் தன்னம்பிக்கையாக வளர்ப்பதற்கு 5 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 09 2024, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Parenting tips for independent kids in tamil

Parenting tips for independent kids in tamil

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தையை நல்ல முறையில் வளர்க்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் பெற்றோரின் தவறான வளர்ப்பு முறையால் குழந்தைகள் வளர வளர பிறரை அதிகமாக சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. இப்படி இருப்பது எப்பேர்ப்பட்ட குழந்தையையும் கூட ஊனமாக்கிவிடும். இந்த பழக்கம் அவர்களது எதிர்காலத்தையும் சீர்குலைத்து விடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Teaching responsibility to kids in tamil

Teaching responsibility to kids in tamil

இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளையை வளர்க்கும் போதே அவர்களது குழந்தை பருவத்தில் இருந்தே தன்னம்பிக்கைக்கான அனைத்து விஷயங்களையும் அவர்களுக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. 

எனவே, உங்கள் குழந்தையை நீங்கள் வளர்க்கும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கான 5 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க: உங்க குழந்தை படிப்பில் எப்படினு தெரிஞ்சுக்கனுமா? அவங்க டீச்சர்ட இந்த '6' கேள்வி கேளுங்க!

35
Encouraging self-dependence in kids in tamil

Encouraging self-dependence in kids in tamil

குழந்தையை தன்னம்பிக்கையாக வளர்க்கும் 5 விஷயங்கள்:

1. அவர்கள் வேலையை அவர்களே செய்யட்டும்:

உங்கள் குழந்தை தன்னம்பிக்கை உடையவர்களாக மாறுவதற்கு முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்கள் வேலையை அவர்களை செய்ய பழக்கப்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் ஒவ்வொரு வேலையும் சரியாக செய்ய கற்றுக் கொள்வார்கள். மேலும் நீங்களும் அவர்கள் செய்யும் வேலையையும் கண்காணிக்க வேண்டும். உதாரணமாக வீட்டுப்பாடம் முடிப்பது, அவர்கள் காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டில் சரியான இடத்தில் வைப்பது, உணவை அவர்களை சாப்பிடுவது போன்றவை அடங்கும். இவை அனைத்தும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்வார்கள்.

2. சுய முடிவு எடுக்க பழக்கப்படுத்துங்கள்:

குழந்தைகளை வளர்க்கும் போது சுய முடிவுகளை எடுக்க அவர்களை பழக்கப்படுத்துவது மிகவும் அவசியம். மேலும் பெற்றோர்களாகிய நீங்களும் இதை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். அதாவது என்ன சாப்பிடலாம், என்ன படிக்கலாம் போன்றவை அடங்கும். முக்கியமாக அவர்கள் எடுக்கும் முடிவு நல்லதாக இருந்தால் அவர்களை பாராட்டுங்கள். ஒருவேளை தவறாக இருந்தால் அதை அன்பாக சுட்டிக்காட்டி திருத்தவும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்..

45
Building self-esteem in kids in tamil

Building self-esteem in kids in tamil

3. வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தவும்:

உங்களது குழந்தையை நீங்கள் சிறு வயது முதலே அவர்களை சின்ன சின்ன வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துங்கள். உதாரணமாக வீட்டை சுத்தம் செய்வது, சமைக்கும்போது உதவுவது போன்றவை ஆகும். முக்கியமாக குழந்தைகள் உங்களுக்கு வீட்டு வேலைகளில் உதவும் போது கண்டிப்பாக அவர்களை கண்காணிக்க வேண்டும். இப்படி உங்கள் குழந்தையை நீங்கள் பழக்கப்படுத்தும் போது, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதோடு மட்டுமின்றி அவர்களது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 

4. தவறுகளை அன்பாக திருத்தவும்:

பல பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான். அதாவது குழந்தைகள் ஏதாவது தவறு செய்து விட்டால் உடனே அவர்கள் குழந்தையிடம் கோபத்தில் கத்துவார்கள் கத்துவார்கள் அல்லது அடிப்பார்கள். இப்படி செய்தால் குழந்தைகளுக்கு பய உணர்வு தான் ஏற்படுமே தவிர, தன்னம்பிக்கை வராது. எனவே உங்கள் குழந்தை ஏதாவது தவறு செய்தால் அவர்களை திட்டுவதற்கு பதிலாக நிதானமாக குழந்தையிடம் விளக்கவும். மேலும் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது எப்படி என்றும் சொல்லிக் கொடுங்கள்.

55
How to raise confident kids in tamil

How to raise confident kids in tamil

5. வெகுமதி வழங்குதல்:

கடினமாக உழைத்தால் வெற்றியை சுலபமாக அடைய முடியும் என்பதை குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள் இதன் மூலம் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதற்கு நீங்கள் சிறுவயதிலிருந்தே அவர்கள் ஏதாவது கடினமாக உழைத்தால், அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்காக ஏதாவது கிப்ட் வாங்கி கொடுங்கள்.

இதையும் படிங்க:   குழந்தைங்க படித்ததும் மறக்கிறார்களா? ஈஸியா ஞாபகம் வச்சுக்க '5' சூப்பர் டிப்ஸ்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved