தயிர் நல்லதுனு தெரியும்.. ஆனா இந்த '1' உணவுடன் சாப்பிட்டால் '4' பிரச்சனைகள் வரலாம்!!
Curd and Ghee Combination : தயிர் மற்றும் நெய் இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது தெரியுமா? அது ஏன் என்று இங்கு பார்க்கலாம்.
Curd and Ghee Combination in Tamil
பால் மற்றும் பால் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. மருத்துவர்கள் கூட பால் மற்றும் பால் பொருட்கள் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அந்த லிஸ்டில் தயிர் மற்றும் நெய் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
Curd and Ghee Combination in Tamil
பொதுவாக மதிய உணவில் தயிர் நாம் சாப்பிடுவோம். அது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. தினமும் தயிர் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி பலப்படும். அதுபோல நெய் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அள்ளித் தருகிறது. ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. இல்லையெனில் நீங்கள் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தயிர் மற்றும் நெய்யின் நன்மைகள் மற்றும் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி இங்கு காணலாம்.
இதையும் படிங்க: முழுபலன்களை பெற வெண்டைக்காய் கூட இந்த '5' உணவுகளை சாப்பிடக் கூடாது!!
Curd and Ghee Combination in Tamil
தயிர் நன்மைகள்:
தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தினமும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும், உடல் எடை குறையும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். தயிரில் இருக்கும் கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, தயிர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
இதையும் படிங்க: மீன் சாப்பிடும் போது 'இந்த' உணவுகளை மட்டும் தவிர்க்கனும்!! மீறினால் சேதாரம் தான்!!
Curd and Ghee Combination in Tamil
நெய் நன்மைகள்:
நெய் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் பல நோய்களையும் எதிர்த்து போராட உதவுகிறது.
Curd and Ghee Combination in Tamil
தயிர் & நெய் ஏன் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது?
ஆயுர்வேதத்தில், தயிர் மற்றும் நெய் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டாலும் அவற்றின் தன்மை வெவ்வேறு என்பதால் அவற்றை ஒன்றாக சாப்பிடுவது நல்லதல்ல. அதாவது தயிர் குளிர்ச்சி தன்மையுடையது. அதே சமயம் நெய் உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது. எனவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
உதாரணமாக, சிலர் நெய் சேர்த்த பரோட்டாவை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போதெல்லாம் அவர்களுக்கு வயிற்று உப்புசம் அல்லது வாயு பிரச்சனை ஏற்பட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் இவை இரண்டும் ஒன்றாக சேர்வதால் ஜீரணிப்பதில் சிக்கல் ஏற்படுவதால் இது நிகழ்கிறது.
Curd and Ghee Combination in Tamil
தயிர் மற்றும் நெய் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்:
- செரிமான கோளாறுகள்
- உயர் கொலஸ்ட்ரால் அளவு
- இதய நோய்
-தோல் ஒவ்வாமை
தயிருடன் இவற்றையும் சாப்பிடாதே!
1. எலுமிச்சை ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
2. அதுபோல தயிருடன் தக்காளி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
3. ஆயுர்வேதத்தின் படி, தயிர் மற்றும் முலாம்பழம், மற்றும் தர்பூசணி ஒன்றாக சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
4. தயிருடன் பாலாடை கட்டி மற்றும் பாகற்காயை சேர்த்து சாப்பிடக்கூடாது.