சிலர் உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது ஏன்? காரணம் இதுதான்..!!
வாயு, மலச்சிக்கல், வீக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவை செரிமான அமைப்பை பெரியளவில் பாதிக்கிறது. இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
banana
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் உடல்நலப் பிரச்சனைகள் ஏராளம். அதில் மக்களிடையே பொதுவாக நிலவும் உடல்நலப் பாதிப்புகளில் ஒன்று செரிமானப் பிரச்னை. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இன்று பலர் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. வாயு, மலச்சிக்கல், வீக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவை செரிமான அமைப்பை பாதிக்கிறது. இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை ஆகும்.
Image: Getty Images
உணவில் மிகுந்த கவனம் செலுத்துதல், சரியான தூக்கத்தை உறுதி செய்தல் மற்றும் தினமும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது உடற்பயிற்சி செய்வதன் மூலம் செரிமான பிரச்சனைகளை பெருமளவு சரி செய்யலாம். வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கலில் இருந்து விடுபட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.
சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மீது ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் உப்பு தூவி சாப்பிடவும். இது நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும் மற்றும் மலச்சிக்கல் நீங்குகிறது. இது தவிர, வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மறுபுறம் வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
உங்களை ”மீண்டும்...” ”மீண்டும்...” சிப்ஸ் சாப்பிட தூண்டுவது இதுதானாம்..!!
சோடியம் பெரும்பாலானவர்களுக்கு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இவை வாழைப்பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இனிப்பு உருளைக்கிழங்கு, தயிர், கேஃபிர், காய்கறிகள், பழங்கள், மூலிகை தேநீர் மற்றும் சீரக நீர் போன்ற பல உணவுகள் மற்றும் பானங்கள் மலச்சிக்கலைத் தடுக்கின்றன,
செரிமான பிரச்சனைகளுக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது. முன்பே சொன்னது போல், சரியான தூக்கம் மற்றும் உடற்பயிற்சியும் தேவை. உட்கார்ந்த வாழ்க்கை முறை, அதிக உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது இடையூறு தூக்கம் ஆகியவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.