MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கொழுக் மொழுக் தொப்பை எப்படி உருவாகிறது! அதை குறைக்க இதை செய்தால் போதும்!

கொழுக் மொழுக் தொப்பை எப்படி உருவாகிறது! அதை குறைக்க இதை செய்தால் போதும்!

ஆண்கள்,பெண்கள்,பள்ளி செல்லும் குழந்தைகள் என்று வயது பேதமின்றி இன்று அனைவரும் எதிர்கொல்லும் தொப்பை என்ற கொழுப்பு பகுதி நமது உடலில் எப்படி உண்டாகிறது? அதனை எப்படி சரிசெய்ய என்பதனை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Dinesh TG
| Updated : Mar 15 2023, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

இன்றைய நவீன உலகத்தில் மக்களின் வாழ்வியல் முறையில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் உருவாகி உள்ளன. வாழ்வியல் முறை என்று சொல்லப்படும் போது எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளில் இருந்து, உடற்பயிற்சி, தூக்கம் , மனச் சோர்வு என்று தினமும் நடைபெறும் செயல்கள் என்ற அனைத்தும் தலைகீழாக நடைபெறுவதால் அதிக உடல் பருமன் அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் நம்மில் பலரும் தொப்பை பிரச்சனையால் அவதிப் படுவதை பார்த்து இருப்போம்
.
ஆண்கள்,பெண்கள்,பள்ளி செல்லும் குழந்தைகள் என்று வயது பேதமின்றி இன்று அனைவரும் எதிர்கொல்லும் தொப்பை என்ற கொழுப்பு பகுதி நமது உடலில் எப்படி உண்டாகிறது? அதனை எப்படி சரிசெய்ய என்பதனை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நமது எடையைக் கட்டுக்குள் வைத்திருந்தால் நாம் தன்னம்பிக்கையோடும், உற்சாகமாகவும் , சுறுசுறுப்பாகவும் இருக்க இயலும். மேலும் ஆரோக்கியமான எடையை பெறுவது மற்றும் பராமரிப்பது என்பது நமது வாழ்நாளை அதிகரிக்கும்.

தொப்பை என்பது அடிவயிற்றைச் சுற்றி இருக்கும் கொழுப்பாகும் .இந்த கொழுப்பில் 2 விதங்கள் இருக்கின்றன.

விஸ்செரல்:

இது உள்ளுறு கொழுப்பாகும்.அதாவது இது வயிற்றில் உள்ள உள்ளுருப்புகள் அதிக இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதால் ஏற்படக்கூடிய தொப்பையாகும்.

தோல்புறக் கொழுப்பு :

தோல்புறக் கொழுப்பு என்பது தோலின் கீழ் இருக்கும் கொழுப்பாகும்.

இந்த இரண்டு விதக் கொழுப்புகளில் விஸ்செரல் கொழுப்பினால் தான் நமது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image: Getty Images

Image: Getty Images

தொப்பை கொழுப்பு அதிகமாக இருப்பின், பின் காணும் நோய்ககளை உண்டாக்கும்:

ஆஸ்துமா, மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் ,மாரடைப்பு, டைப் 2 நீரழிவு நோய்

என்னென்ன காரணங்களினால் தொப்பை கொழுப்பு அதிகரிக்கிறது:

தவறான உணவுப் பழக்கம்:

அதிக மாவுச்சத்து , குறைந்த புரதச்சத்து , அதிக கொழுப்பு உணவுகள் எடுத்துக் கொள்வதால் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.

மேலும் பாஃஸ்ட் புட், பிஸ்கட் வகைகள்,பதப்படுத்தப் பட்ட உணவுகள் மற்றும் பேக்கரி உணவுகள் போன்றவற்றில் டிரான்ஸ்ஃபேட் ( நிறைவுறா கொழுப்பு) அதிக அளவில் காணப்படுகிறது.

 

உடற்பயிற்சி இல்லாமை:

உடல் இயக்கம் வெகு குறைவாக இருப்பதால் அது வயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பை அதிகபடுத்தும் முக்கிய காரணியாக இருக்கிறது.

தேவைக்கு அதிகமான கலோரிகளை உணவில் எடுத்துக் கொள்வதாலும் உடல் எடை மற்றும் தொப்பை பல மடங்கு அதிகரிக்கும்.

சரியான தூக்கமின்மை:

போதுமான தூக்கம் அல்லது குறைந்த தூக்கம் கொண்டவர்கள் அதிக உணவு எடுத்துக்கொள்வதற்கு தொடர்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நைட் ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள், இரவில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துபவர்கள் போன்றோர்களுக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் மேற்கொள்ள குறைவான வாய்ப்பு இருப்பதால், வயிற்று பகுதியில் பெருமளவில் கொழுப்பு சேரும் நபர்களாக இருக்கிறார்கள்.

33

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க உடலை குளு குளு வென வைக்க சிறந்த பானங்கள் வீட்டிலேயே செய்யலாம் !

மன அழுத்தம்:

ஒருவருக்கு அவர்தம் வாழ்வில் பிரச்சனைகள் இருக்கும் போது அவருக்கு மன அழுத்தம் உண்டாகிறது. அத்தகைய மனஅழுத்ததினால் ஸ்டீராய்டு ஹார்மோன் வெளிபடுகிறது. தவிர உடலின் வளர்சிதை மாற்றத்த்தையும் பாதிக்கிறது.இம்மாதிரியான மன அழுத்ததில் இருக்கும் போது, ஆறுதலுக்காக பெருமளவிலான உணவை சேர்த்துக் கொள்வதாலும் தொப்பை உண்டாகிறது. இவைகள் (கார்டிசோல்) வயிற்றைச் சுற்றி அதிகப்படியான கலோரிகள் படிவதற்கு காரணமாகிறது.

மரபியல்:

மரபணுக்களுக்கும் உடல் பருமனுக்கும் ஒரு முக்கிய தொடர்பு இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தொப்பையை குறியாகும் வழிகள்:

உடல் பருமனுக்கு எதிரான போரில் நமது வாழ்க்கை முறையான சரிவிகித உணவு முறையும், . உடற்பயிற்சியும்,சரியான தூக்கம் மற்றும் மன மகிழ்ச்சி ஆகியவை மிகப் பெரிய அளவில் பங்கு வகிப்பதால் அதனை முறைப்படுத்தினாலே நாம் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ளலாம்.

 

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DT
Dinesh TG
ஆரோக்கிய குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved