நவீன காலத்தில் ரக்ஷாபந்தன் எப்படி கொண்டாடலாம்? சில ஐடியாக்கள்!
இன்றை கால மக்கள் படிப்பு, தொழில், சூழல் காரணமாக இனம் மதம், மொழி கடந்து வெவ்வேறு இடங்களில் குடும்பத்தை பிரிந்து வசித்து வருகின்றனர். அதனால், பொது விழாக்கள், மற்றும் குடும்ப நிகழ்சிகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டிய சூழல் உண்டாகிறது. ஆனால், எந்த சூழலிலும் ரக்ஷா பந்தன் என்று வந்து விட்டால், யாரும் அதனை கொண்டாடுவதை விட்டுக் கொடுப்பதில்லை. அருகிலோ, தொலைவிலோ, எங்கு இருந்தாலும், ஏதாவது ஒரு விதத்தில் தங்கள் ஆசியையும், பரிசுகளையும் உங்கள் தங்கைகளோடு பகிர்ந்து கொள்வார்கள். தூரத்தில் இருக்கும் அண்ணன்-தங்கைமார்களுக்கான ரக்ஷாபந்தன் ட்ரீட் உங்களுக்காக.
இ- ராக்கி
இப்போது இணையளதத்தில் உங்கள் அண்ணனுக்கு நீங்கள் விரும்பிய ராக்கியை வாங்கி அனுப்பலாம். இந்த உலகத்தில் எந்த மூலையில் உங்கள் அண்ணன் இருந்தாலும், இந்த இணையதள ராக்கி அவரை சென்றடையும்.
வீடியோ கால்
நீங்கள் எங்கு இருந்தாலும், அதை பற்றி இனி கவலைப் பட வேண்டாம். இணையதளம் சென்று வீடியோ கால் செய்து கொண்டாடலாம். நேருக்கு நேராக இருந்து நீங்கள் பேசிக்கொள்வது போலவும், அன்பையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வது போலவும் போன்ற ஒரு உண்மையான உணர்வை நீங்கள் பெறுவீர்கள்.
ரக்ஷா பந்தன் : உங்கள் சகோதரிக்கு வழங்கப்போகும் சிறந்த கிஃப்ட் என்ன? இங்க வாங்க பாக்கலாம்!
சமூக பதிவுகள்
இன்று ஃபேஸ்புக், யு டியுப், இன்ஸ்டா கிராம், டிவிட்டர் என்று பல சமூக தளங்கள் வந்து விட்டன. இதில் நீங்கள் உங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் ரக்ஷா பந்தன் (Rakhi) பண்டிகையை எப்படி ஒவ்வொருவரும் கொண்டாடி வருகின்றனர் என்பதையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
திடீர் விஜயம்
உங்களுக்கு நெருக்கமான மற்றும் பிடித்தமான ஒருவரது வீட்டிற்கு திடீர் என்று வருகை தந்து அவர்களை ஆச்சரியப் படுத்துங்கள். இது அவர்களுக்கு ஆச்சரியம் மட்டும் அல்ல, மகிழ்ச்சியையும் தரும். மேலும் இது ஒரு சுவாரசியமான நாளாகவும் உங்களுக்கு அமையும்.
எதிர்பாராத பரிசுகள்
அன்று போல் இல்லாமல், இன்று பல வகை பரிசு பொருட்கள் ஆன்லைன் கடைகளில் எளிதாக கிடைத்து விடுகின்றது. அதில் உங்கள் வசதிக்கேற்ப மற்றும் பிடித்தமான பரிசு பொருளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்தவருக்கு பரிசளியுங்கள். இது அவரை ஆச்சரியப் படுத்துவதோடு, என்றும் மறக்க முடியாத ஒரு பரிசாகவும், நாளாகவும் அவரது வாழ்க்கையில் இருக்கும்.