MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • AC Rain Cover: ரூ.500 செலவு..ஆயிரக்கணக்கில் சேமிப்பு! AC வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

AC Rain Cover: ரூ.500 செலவு..ஆயிரக்கணக்கில் சேமிப்பு! AC வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

AC Rain Cover: மழைக்காலத்தில் ஏசியின் Outdoor Unit தொடர்ந்து ஈரப்பதத்திற்கு ஆளாவதால் துருப்பிடிப்பு, Coil மற்றும் Joint பகுதிகளில் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க என்ன வேண்டும்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Asianetnews Tamil Stories
Published : Sep 09 2026, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
AC வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் இதை செய்ய மறக்காதீங்க!
Image Credit : pinterest

AC வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் இதை செய்ய மறக்காதீங்க!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே வீட்டில் பயன்படுத்தப்படும் ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் ஏசியின் Outdoor Unit, தொடர்ந்து மழை, ஈரப்பதம் மற்றும் தூசி காரணமாக நாளடைவில் துருப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படியென்றால், இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.

இதற்கெல்லாம் ஒரே பதில் 500 ரூபாயில் கிடைக்கும் Rain Cover-ஐ பயன்படுத்தினாலே ஏசியின் Outdoor Unit-ஐ மழைக்கால பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்பதுதான். இந்த எளிய Rain Cover உண்மையில் எப்படி உதவுகிறது? இதனால் செலவு எப்படி குறைகிறது என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Rain Cover எதற்கு?
Image Credit : pinterest

Rain Cover எதற்கு?

Rain Cover, ஏசியின் Outdoor Unit மீது நேரடியாக மழைத்தண்ணீர் படுவதை குறைத்து, ஈரப்பதம் மற்றும் துருப்பிடிப்பு பாதிப்பை கட்டுப்படுத்த உதவும். ஆனால், காற்றோட்டம் பாதிக்காத Outdoor Unit-க்கு சரியான அளவிலான கவரை பயன்படுத்துவது அவசியம். பொதுவாக ஏசியின் அளவு மற்றும் கவரின் தரத்தைப் பொறுத்து இதன் விலை ரூ.300 முதல் ரூ.800 வரை இருக்கலாம்.

Related Articles

Related image1
AC Side Effects : 24 மணி நேரமும் ஏசி அறையா? உடலில் ஏற்படும் இந்த மாற்றங்கள் தெரியுமா?
Related image2
Car AC Cooling Tips: கார் ஏசி கூலிங் குறையுதா? மெக்கானிக்கிடம் போகும் முன் இந்த 5 விஷயங்களை முதலில் செக் பண்ணுங்க
34
துருப்பிடிப்பை தடுக்க என்ன செய்யலாம்?
Image Credit : pinterest

துருப்பிடிப்பை தடுக்க என்ன செய்யலாம்?

Rain Cover பயன்படுத்துவதுடன், ஏசியின் fins மற்றும் coils-ஐ மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது. மேலும், Outdoor Unit அருகே தண்ணீர் தேங்குகிறதா? drainage pipe சரியாக உள்ளதா? என்பதையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

Outdoor Unit துருப்பிடித்து சேதமடைந்தால், casing-ஐ மாற்ற சுமார் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவாகலாம். இதனுடன் ஒப்பிடும்போது, சில நூறு ரூபாய் செலவில் Rain Cover பயன்படுத்துவது ஒரு எளிய மற்றும் குறைந்த செலவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

44
கேஸ் லீக்கையும் தடுக்குமா?
Image Credit : pinterest

கேஸ் லீக்கையும் தடுக்குமா?

Rain Cover நேரடியாக refrigerant gas leak-ஐ தடுக்காது. ஆனால், மழைநீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக Outdoor Unit-ல் ஏற்படும் அரிப்பு மற்றும் துருப்பிடிப்பைக் குறைக்க உதவும். இதனால் copper coil, joints போன்ற பகுதிகளில் ஏற்படக்கூடிய சேதத்தை ஓரளவு தவிர்க்கலாம்.

1.5 டன் Split AC-க்கு gas refill செய்ய பொதுவாக ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை செலவாகலாம். Gas leak நீண்ட காலம் கவனிக்கப்படாமல் இருந்தால், compressor உள்ளிட்ட பாகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டு ரூ.8,000 அல்லது அதற்கு மேல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.

ரூ.500 செலவு… ஆயிரக்கணக்கில் சேமிப்பு!

மழைக்காலத்தில் சுமார் 4 மாதங்களுக்கு, மாதத்திற்கு ஒருமுறை ஏசியின் Outdoor Unit-ஐ சுத்தம் செய்து, Rain Cover பயன்படுத்தினால் பராமரிப்பை சிறப்பாக மேற்கொள்ள முடியும்

எனவே, மழைக்காலத்தில் ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்த விரும்புபவர்கள் Outdoor Unit-ஐ அலட்சியம் செய்யாமல், சரியான Rain Cover, வழக்கமான சுத்தம் மற்றும் முறையான பராமரிப்பை மேற்கொள்வது நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AT
Asianetnews Tamil Stories
ஏசி சுத்தம் செய்தல்
ஏசி பராமரிப்பு குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Meal Maker: மீல் மேக்கர் சாப்பிடுறீங்களா? அது எப்படி உருவாகுது தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!
Recommended image2
Lemon Storage: இனி மாசக்கணக்குல லெமன் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.!
Recommended image3
Pressure Cooker: இனி உங்க குக்கர் மக்கர் செய்யாது.! சூப்பர் டிப்ஸ்
Related Stories
Recommended image1
AC Side Effects : 24 மணி நேரமும் ஏசி அறையா? உடலில் ஏற்படும் இந்த மாற்றங்கள் தெரியுமா?
Recommended image2
Car AC Cooling Tips: கார் ஏசி கூலிங் குறையுதா? மெக்கானிக்கிடம் போகும் முன் இந்த 5 விஷயங்களை முதலில் செக் பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved