பொங்கல் இந்த திசையில் மட்டும் பொங்கினால் பிரச்சனை தான்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!
First Published Jan 12, 2021, 12:55 PM IST
புத்தரிசியில்... பொங்கல் வைத்து, புதிய ஆடை உடுத்தி பொங்கல் திருவிழாவை வரவேற்க தமிழ் மக்கள் பலரும் தயாராகி விட்டனர். அதே நேரத்தில் நம், முன்னோர்கள் பொங்கல் எந்த திசையில் பொங்க வேண்டும். அப்படி பொங்கும் திசையை வைத்து, இந்த வருடம் முழுவதும் அந்த குடும்பம் எப்படி இருக்கும் என்பதையும் கணித்து கூறியுள்ளனர்.

கிராமப்புறங்களில் கூட தற்போது தார் ரோடு வந்து விட்டதால், வாசல் பொங்கல் வைப்பவர்களை பார்ப்பது கூட மிகவும் அரிதாகி விட்டது. குறிப்பாக, நகரங்களில் வாழும் பலர் வீட்டின் உள்ளேயே கேஸ் அடுப்பில் தான் பொங்கல் வைத்து வழிபாடுகிறார்கள்.

இப்படி கேஸ் அடுப்பில் நீங்கள் பொங்கல் வைபவராக இருந்தால் கூட பொங்கல் பொங்கி வரும்போது, அடுப்பை சிம்மில் வைக்காமல் அதனை பொங்க விடுவதே நலம்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?