Health Tips- Night Shift: நைட் ஷிப்ட் வேலையில் இவ்வளவு ஆபத்தா..? இனியாவது...கொஞ்சம் அலர்ட்டா இருங்க பாஸ்..
Health Tips- Night Shift: நைட் ஷிப்ட் வேலையில் உடல் சோர்வு அடைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தூக்கமின்மை, ஹார்மோன் சமநிலை பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
night shift
இன்றைய நவீன கால கட்டத்தில், நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறையை மறந்து ஓர் இயந்திரம்போல வாழ்ந்து வருகிறோம். உடலுழைப்பு பற்றியே அறியாத வண்ணம் இங்கு பலரின் வாழ்கை முறை கழிகிறது. அவற்றில் முக்கியப் பங்கு வகிப்பது தொழில்நுட்பம், நிறுவனங்களில் வேலை செய்வதில் தொடங்கி, வீட்டில் ஓய்வு எடுப்பது வரை எல்லாவற்றிக்கும் தொழில்நுட்பம் இன்றியமையாதது.
night shift
அவற்றில் நாம் பின்பற்றும் நைட் ஷிப்ட் வேலை நமக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.ஆம் நைட் ஷிப்ட் வேலையில் உடல் சோர்வு அடைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தூக்கமின்மை, ஹார்மோன் சமநிலை பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
night shift
அதுமட்டுமின்று, நைட் ஷிப்ட் அல்லது சுழற்சி ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களுக்கு இதய -ரத்த நாள நோய், புற்றுநோய், உடல் பருமன், நீரழிவு, சர்க்கரை, மனசோர்வு, தீவிர ஜீரண கோளாறு, குழந்தையின்மை பிரச்சனை, ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும், பெரும்பாலோனோருக்கு குளிர்சாதன அறையில் வேலை இருப்பதால், உடலுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைக்காமல் 'வைட்டமின் டி' போன்ற ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உதவியாக இருக்கும்.
night shift
புஜங்காசனம்:
முதலில், குப்புறப்படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து, கைகளை தோள்பட்டைக்குக் கீழே ஊன்றி மேலே அண்ணாந்து பார்க்க வேண்டும். இதேபோல், மூன்று முறை செய்ய வேண்டும். இது, முதுகில் உள்ள தசைகளை வலுபெறச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
டர்டி டாக்ஸ்:
'டர்டி டாக்ஸ்' உடற்பயிற்சி என்றால் நாய் போல உடலை வளைத்தல் வேண்டும். இரு கால்களையும் மடித்து முட்டிப்போட்டு நின்றபடி, நாயினை போல கைகளை முன்னால் ஊன்றிய நிலையில் 5 நிமிடம் இருக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் உதவுகிறது.
night shift
எனவே, நைட் ஷிப்ட் பணி முடிந்ததும், ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள். ஷிப்ட் எதுவானாலும், சாப்பிடும் நேரத்தில் மாற்றம் வேண்டாம். புரதம் நிறைந்த காய்கறிகள் சாப்பிடவும், உறங்கும் இடம் அமைதியாகவும், இருட்டாகவும் இருக்கட்டும். உறங்கும் முன்பு, காபி , டீ குடிப்பதை தவிர்க்கவும். மதுவை அறவே தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் உறங்க வேண்டாம். தூங்கி எழுந்த பிறகு உடற்பயிற்சி செய்யலாம்.