MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • "எல்லார் கண்ணும் இவங்க மேல தான்..” பிரம்மாண்ட வைர நகைகளால் ஜொலித்த நீட்டா அம்பானி..

"எல்லார் கண்ணும் இவங்க மேல தான்..” பிரம்மாண்ட வைர நகைகளால் ஜொலித்த நீட்டா அம்பானி..

நீட்டா அம்பானியிடம் உள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.  

2 Min read
Author : Ramya s
Published : Oct 03 2023, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
nita ambani

nita ambani

நீட்டா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆசியாவின் பணக்கார குடும்பம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அம்பானி குடும்பத்தின் தூணாக விளங்கும் நீட்டா அம்பானி தனது தொண்டு பணிகளுக்காகவும், தனது சித்தாந்தங்களுக்காகவும் பெயர் பெற்றவர். இருப்பினும், அவர் மிகவும் அழகான இந்திய உடைகளை அணிவதில் பிரபலமானவர். ஆனால் நீட்டா அம்பானியிடம் உள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.

27
nita ambani

nita ambani

நகைகள் என்றால் எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது. அதில் நீட்டா அம்பானி மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு தனது மகள் இஷா அம்பானியின் திருமண நாளன்று நீட்டா அம்பானி, முழு வைர நகைகளை அணிந்திருந்தார். 

37

இந்திய ஆடையோ அல்லது மேற்கத்திய ஆடையோ அந்த ஆடையாக இருந்தாலும் வைரங்கள் அழகாக இருக்கும். ஆனால் நீட்டா அம்பானியின் பிரம்மாண்ட வைர மூக்குத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

47

விலைமதிப்பற்ற நகைகளை சேகரிப்பது மட்டுமின்றி, சில விலையுயர்ந்த புடவைகளை சேகரித்து வைப்பதற்கும் பெயர் பெற்றவர் நீட்டா அம்பானி. 2015 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பரிமல் நத்வானியின் மகனின் திருமணத்திற்காக நிதா அம்பானி மிகவும் விலையுயர்ந்த புடவையை அணிந்திருந்தார்.

57
Nita Ambani

Nita Ambani

இந்தப் புடவையை வடிவமைத்தவர் சென்னை சில்க்ஸ் இயக்குநர் சிவலிங்கம். அவரின் பிளவுசின் பின்புறத்தில் கிருஷ்ணரின் உருவத்தை கொண்டுள்ளது. கிருஷ்ணரின் உருவம் பல்வேறு வண்ணங்கள் மற்றும் சிக்கலான எம்பிராய்டரிகளைப் பயன்படுத்தி எம்ப்ராய்டரி செய்யப்பட்டது.

67
Nita Ambani

Nita Ambani

நீட்டா அம்பானியின் வெள்ளை மற்றும் பிங்க் நிற புடவை உண்மையான தங்க நூல்களால் ஆனது, மேலும் அதில் வைரங்கள் மற்றும் மரகதம், மாணிக்கங்கள், புக்ராஜ் போன்ற பல விலைமதிப்பற்ற கற்கள் உள்ளன. ஆனால், புடவையின் விலைதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. புடவையின் விலை ரூ. 40 லட்சம் என்று கூறப்படுகிறது. நீட்டா அம்பானியின் அலமாரியில் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருட்களில் இதுவும் ஒன்று.

77
nita ambani

nita ambani

இதுதவிர பழமையான வைர நெக்லஸ்கள், பாரம்பரிய தங்க நகைகள் மற்றும் அரிய வைர மோதிரங்கள் என கோடிக்கணக்கான ஆபரணங்களை வைத்துள்ளார். நீட்டா அம்பானியின் நகைகள் பல நூறு கோடி மதிப்புடையவை ஆகும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved