MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Trending Golu Decoration : டிரெண்டிங் நவராத்திரி கொலு அலங்காரம்..இந்த ஐடியாக்களை டிரை பண்ணிப் பாருங்க!

Trending Golu Decoration : டிரெண்டிங் நவராத்திரி கொலு அலங்காரம்..இந்த ஐடியாக்களை டிரை பண்ணிப் பாருங்க!

Trending Golu Decoration : இந்த வருடம் நவராத்திரி கொலுவை வித்தியாசமாக அலங்கரிக்க விரும்புகிறீர்களா? தீம் கொலு, குட்டி கிராமம், கோயில் திருவிழா, மினிமல் கொலு, போட்டோ கார்னர் உள்ளிட்ட அசத்தும் ஐடியாக்களை இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

6 Min read
Author : Vishnupriya
Published : Oct 05 2026, 07:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
நவராத்திரி கொலு அலங்காரம்
Image Credit : Pinterest

நவராத்திரி கொலு அலங்காரம்

ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரி பொம்மைகளை அடுக்கி கொலு வைக்கிறீர்களா? இந்த நவராத்திரியில் கொஞ்சம் வித்தியாசமாக டிரை பண்ணுங்க. உங்கள் வீட்டுக் கொலுவையே ஒரு குட்டி கிராமமாகவும், கோயில் திருவிழாவாகவும், பாரம்பரிய தமிழர் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் அழகான காட்சியாகவும் மாற்றலாம். அதுவும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே.

சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வரும் தீம் கொலு, மினிமல் கொலு, நேச்சுரல் கொலு, கிராமத்து கொலு போன்ற ஐடியாக்களைப் பார்த்து பலரும் தங்கள் வீட்டு கொலுவை புதுமையாக அலங்கரித்து வருகின்றனர். இந்த நவராத்திரிக்கு உங்கள் வீட்டு கொலுவும் பார்ப்பவர்களை அசத்த வேண்டுமா? அப்படியானால் இந்த ஐடியாக்களை டிரை பண்ணிப் பாருங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
நவராத்திரி கொலு எப்போது தொடங்குகிறது?
Image Credit : Pinterest

நவராத்திரி கொலு எப்போது தொடங்குகிறது?

இந்த ஆண்டு நவராத்திரி கொலு அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, அக்டோபர் 19, 2026 திங்கட்கிழமை விஜயதசமியுடன் நிறைவடைகிறது.

பொதுவாக கொலு பொம்மைகளை நவராத்திரி தொடங்கும் நாளுக்கு முன்பாகவே அடுக்கி, முதல் நாளில் பூஜையுடன் கொலுவைத் தொடங்குவார்கள். அதனால், வீட்டில் கொலு வைக்கப் போகிறவர்கள் குலு தொடங்கும் முன்னரே கொலு படிகள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்வது வசதியாக இருக்கும்.

312
டிரெண்டிங் கொலு அலங்காரம்
Image Credit : Gemini Ai

டிரெண்டிங் கொலு அலங்காரம்

குட்டி கிராமம் உருவாக்கலாமா

இந்த நவராத்திரிக்கு உங்கள் வீட்டுக் கொலுவை பார்த்தவுடன் அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு அழகான குட்டி கிராமமாகவே மாற்றிப் பாருங்கள். வழக்கமான பொம்மை அடுக்குகளுக்கு பதிலாக, கிராமத்து வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டு வரும் வகையில் இந்தத் தீம் கொலுவை அமைக்கலாம்.

ஒரு சிறிய மண் வீடு, அதற்கு அருகில் விவசாய நிலம், கிணறு, மாட்டு வண்டி, விவசாயிகள், மாடுகள், ஆடுகள் என சின்னச் சின்ன பொம்மைகளை வைத்து கிராமத்தின் அழகை உருவாக்கலாம். பார்ப்பவர்களுக்கு, அடடா.. ஒரு குட்டி கிராமத்தையே இங்கே உருவாக்கிவிட்டார்களே என்று சொல்ல வைக்கும் அளவுக்கு இந்த அலங்காரம் இருக்கும்.

கிராமத்து இயற்கைச் சூழலைக் கொண்டு வர பச்சை நிற துணி, செயற்கைப் புல், சிறிய மரங்கள், செடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வயலைக் காட்ட பச்சை நிறப் பொருட்களையும், சிறிய கற்கள் அல்லது மணலைப் பயன்படுத்தி மண் பாதையையும் அமைத்தால் காட்சி இன்னும் அழகாக இருக்கும்.

சிறிய இடமாக இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் கற்பனை, சில குட்டி பொம்மைகள், இயற்கைத் தோற்றம் தரும் அலங்காரப் பொருட்கள் இருந்தாலே போதும். உங்கள் வீட்டிலேயே ஒரு அழகான குட்டி கிராமம் உருவாக்கலாம்.

412
கோயில் திருவிழா தீம்
Image Credit : Gemini Ai

கோயில் திருவிழா தீம்

கொலுவில் குட்டி கோயில் திருவிழா..பார்த்தவுடன் மனதை கவரும் அலங்காரம்

உங்கள் கொலுவை இன்னும் வித்தியாசமாகவும், பாரம்பரிய மணம் வீசும் வகையிலும் அலங்கரிக்க நினைக்கிறீர்களா? அப்படியானால், “கோயில் திருவிழா” தீம் கொலு உங்களுக்கு சரியான தேர்வு.

கொலுவின் நடுப்பகுதியில் அழகான சிறிய கோயில் கோபுரத்தை அமைத்து, அதன் முன்புறத்தில் சுவாமி சிலைகள், பக்தர்கள், கோயில் வாசல் என ஒரு குட்டி கோயில் சூழலை உருவாக்கலாம். அதற்கு அருகில் சிறிய தேர் ஒன்றை வைத்து, திருவிழா நடைபெறுவது போன்ற காட்சியையும் அமைக்கலாம்.

இதை இன்னும் உயிரோட்டமாக்க, கோயிலைச் சுற்றிலும் பூக்கடைகள், வளையல் கடைகள், பொம்மைக் கடைகள், பழக்கடைகள் போன்ற சிறிய கடை பொம்மைகளை வைக்கலாம். பக்தர்கள் கூட்டமாக நிற்பது, குழந்தைகள் திருவிழாவை ரசிப்பது போன்ற சிறிய காட்சிகளையும் சேர்த்தால், கொலுவைப் பார்ப்பவர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்.

இரவு நேரத்தில் இந்த கொலுவின் அழகை இன்னும் அதிகரிக்க சிறிய LED விளக்குகளை பயன்படுத்தலாம். கோயில் கோபுரத்தைச் சுற்றியும், தேர் அருகிலும், கடைகளின் முன்புறத்திலும் விளக்குகளை அமைத்தால், மாலை நேரத்தில் கொலு ஒரு குட்டி திருவிழா போலவே ஜொலிக்கும்.

பெரிய அளவில் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பழைய பொம்மைகள், சிறிய விளக்குகள் மற்றும் சில கைவினைப் பொருட்களைப் பயன்படுத்தியே இந்தத் தீமை உருவாக்கலாம். பாரம்பரியம், பக்தி, திருவிழா உற்சாகம் மூன்றையும் ஒரே கொலுவில் கொண்டு வர விரும்பினால், இந்த கோயில் திருவிழா தீம் சூப்பர் சாய்ஸ்.

512
தமிழர் பாரம்பரிய கொலு
Image Credit : Gemini Ai

தமிழர் பாரம்பரிய கொலு

கொலுவில் பாட்டி காலத்து தமிழர் வாழ்க்கை

இந்த நவராத்திரிக்கு உங்கள் கொலுவில் வெறும் பொம்மைகளை மட்டும் அடுக்காமல், நம் முன்னோர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது என்பதை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு அழகான தமிழர் பாரம்பரிய தீமை உருவாக்கிப் பாருங்கள்.

கொலுவின் ஒரு பகுதியில் பழமையான ஓட்டு வீடு அல்லது பாரம்பரிய வீடு, திண்ணை, வாசல், முற்றம் போன்றவற்றை அமைக்கலாம். வீட்டின் முன்புறத்தில் சிறிய உரல், அம்மி, முறம், மண்பானை, செம்பு பாத்திரங்கள் போன்ற பொருட்களை வைத்தால், பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு தமிழர் வீட்டுச் சூழல் கண்முன்னே வந்துவிடும்.

சிறிய பொம்மைகளை வைத்து தண்ணீர் எடுக்கும் பெண்கள், முறத்தில் தானியம் புடைக்கும் காட்சி, அம்மியில் மசாலா அரைக்கும் காட்சி என பாட்டி காலத்து அன்றாட வாழ்க்கையையே ஒரு குட்டி கதையாக கொலுவில் சொல்லலாம்.

வாசலில் சிறிய கோலம், திண்ணையில் அமர்ந்திருக்கும் தாத்தா-பாட்டி பொம்மைகள், அருகில் விளையாடும் குழந்தைகள் என ஒவ்வொரு காட்சியையும் நுணுக்கமாக அமைத்தால், கொலுவைப் பார்க்கும் பெரியவர்களுக்கு அவர்களது குழந்தைப் பருவ நினைவுகள் நிச்சயம் வந்து செல்லும்.

பொம்மைகளால் அலங்கரிக்கப்படும் கொலுவைத் தாண்டி, நம் மண்ணின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் சொல்லும் கொலுவாக மாற்ற வேண்டும் என்றால் தமிழர் பாரம்பரிய கொலு நிச்சயம் மனதை கவரும் ஒரு அழகான தீம்.

612
நேச்சுரல் கொலு
Image Credit : Gemini Ai

நேச்சுரல் கொலு

பிளாஸ்டிக் அலங்காரங்களைத் தவிர்த்து இயற்கை அழகில் ஜொலிக்கும் நேச்சுரல் கொலு

கொலு படிகளின் அலங்காரத்தில் அதிகமான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மூங்கில் கூடை, சணல் கயிறு, மரப்பொருட்கள், மரத்தட்டுகள், உலர்ந்த பூக்கள், இலைகள், சிறிய கிளைகள் போன்ற இயற்கையான தோற்றம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தலாம். இவை கொலுவுக்கு இயல்பான, மண் மணம் வீசும் தோற்றத்தை கொடுக்கும்.

கொலு படிகளின் ஓரங்களில் சிறிய மூங்கில் கூடைகளை வைத்து அதில் உலர்ந்த பூக்கள் அல்லது இலைகளை அலங்கரிக்கலாம். சணல் கயிறைச் சுற்றி கட்டி, சிறிய மரப்பலகைகள் அல்லது மரத்துண்டுகளைப் பயன்படுத்தி பொம்மைகளுக்கு மேடை அமைக்கலாம். இதனால் ஒவ்வொரு அடுக்கும் தனித்துவமாகத் தெரியும்.

பச்சை இலைகள், சிறிய செடிகள், தேங்காய் ஓலைப் பொருட்கள் போன்றவற்றையும் சேர்த்தால் கொலுவுக்கு இன்னும் அழகான இயற்கைத் தோற்றம் கிடைக்கும். குறிப்பாக மண் பொம்மைகள், மரப்பொம்மைகள் போன்றவற்றுடன் இந்த அலங்காரம் மிகவும் இயல்பாகப் பொருந்தும்.

இந்த தீமின் சிறப்பு என்னவென்றால், அதிக செலவு இல்லாமலேயே அழகான கொலுவை உருவாக்க முடியும். இந்த நேச்சுரல் கொலு, எளிமையை விரும்புபவர்களுக்கும், பாரம்பரியத்துடன் நவீன தோற்றத்தை இணைக்க விரும்புபவர்களுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

712
குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் தீம்
Image Credit : Gemini Ai

குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் தீம்

குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் கொலு தீம்

இந்த நவராத்திரியில் குழந்தைகளையும் கொலு அலங்காரத்தில் ஆர்வமாக பங்கேற்க வைக்க வேண்டுமா? அப்படியானால், கொலுவில் அவர்களுக்காகவே ஒரு தனி பகுதியை ஒதுக்கி, அவர்களுக்குப் பிடித்த உலகத்தை உருவாக்கிப் பாருங்கள்.

குழந்தைகளின் கற்பனைக்கு ஏற்ப விண்வெளி, கடல் உலகம், விலங்குகள், பள்ளி, ரயில் நிலையம் போன்ற தீம்களை தேர்வு செய்யலாம்.

விண்வெளி தீம் என்றால் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ராக்கெட், விண்வெளி வீரர்கள் என அமைக்கலாம். கடல் உலகத்திற்கு மீன்கள், திமிங்கலம், ஆக்டோபஸ், படகு போன்ற பொம்மைகளைப் பயன்படுத்தலாம். பள்ளி தீமில் ஆசிரியர், மாணவர்கள், வகுப்பறை, கரும்பலகை போன்றவற்றை சிறிய பொம்மைகளைக் கொண்டு உருவாக்கலாம்.

இதில் சிறப்பு என்னவென்றால், தீமைத் தேர்வு செய்வது முதல் பொம்மைகளை அடுக்குவது, சிறிய அலங்காரங்களை உருவாக்குவது வரை குழந்தைகளையே பங்கேற்கச் செய்யலாம். இதனால் கொலு அவர்களுக்கு ஒரு விளையாட்டாகவும், குடும்பத்துடன் செலவிடும் இனிய நேரமாகவும் மாறும்.

812
மினிமல் கொலு
Image Credit : Gemini Ai

மினிமல் கொலு

வீட்டில் இடம் குறைவாக இருந்தாலும் கொலு வைக்கலாம். பெரிய அளவில் பொம்மைகளை அடுக்க வேண்டிய அவசியமில்லை. 3 அல்லது 5 படிகள் கொண்ட சிறிய கொலு அமைத்து, முக்கியமான பொம்மைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கலாம்.

ஒவ்வொரு பொம்மைக்கும் இடைவெளி விட்டு அடுக்கினால் நேர்த்தியாகத் தெரியும். வெள்ளை, கிரீம் அல்லது லைட் கலர் துணியைப் பின்னணியாக பயன்படுத்தி, சிறிய பூ அலங்காரங்களைச் சேர்க்கலாம். மாலை நேரத்தில் LED lights அமைத்தால் கொலுவின் அழகு மேலும் அதிகரிக்கும். குறைந்த இடம், குறைந்த அலங்காரம், ஆனால் நிறைந்த அழகு

912
பூக்களால் அலங்காரம்
Image Credit : Gemini Ai

பூக்களால் அலங்காரம்

பூக்களின் மணமும், கொலுவின் அழகும்.. இந்த எளிய அலங்காரம் வீட்டையே கவரும்.

இந்த நவராத்திரிக்கு கொலுவை அதிகமான அலங்காரப் பொருட்கள் இல்லாமலேயே அழகாக மாற்ற வேண்டுமா? அப்படியானால், இயற்கையான பூக்களைக் கொண்டு கொலு படிகளை அலங்கரித்துப் பாருங்கள்.

கொலு படிகளின் ஓரங்களில் மல்லிகை, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி போன்ற பூக்களை சிறிய மாலைகளாகத் தொங்கவிடலாம். படிகளின் முன்புறம் அல்லது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பூக்களை வைத்து அலங்கரித்தால், கொலு இன்னும் நேர்த்தியாகத் தெரியும்.

பொம்மைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பூ அலங்காரம் செய்வது சிறந்தது. இதனால் பூக்களின் அழகும் தனியாகத் தெரியும்.

வெள்ளை மல்லிகையுடன் மஞ்சள் சாமந்தி, சிவப்பு ரோஜா போன்ற வெவ்வேறு நிறப் பூக்களை இணைத்தால் கொலுவுக்கு அழகான வண்ணத் தோற்றம் கிடைக்கும். சிறிய பூக்கூடைகள் அல்லது பூத்தோரணங்களையும் சேர்க்கலாம்.

1012
விளக்குகள்தான் ஹைலைட்
Image Credit : Gemini Ai

விளக்குகள்தான் ஹைலைட்

கொலுவின் அழகை இரவில் இரட்டிப்பாக்கும் விளக்குகள்.. இப்படிப் போட்டால் அசத்தல் லுக்

பகல் நேரத்தில் அழகாக இருக்கும் கொலு, மாலை நேரத்தில் விளக்குகள் ஒளிரும்போது இன்னும் பிரமிக்க வைக்கும். அதனால் இந்த நவராத்திரியில் கொலு அலங்காரத்தில் விளக்குகளுக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுக்கலாம். கொலு படிகளின் பின்புறம் அல்லது ஓரங்களில் சிறிய LED விளக்குகள் பொருத்தலாம்.

குறிப்பாக பொம்மைகள் இருக்கும் இடங்களில் விளக்குகளை நேரடியாக அதிகமாக வைக்காமல், மென்மையான ஒளி படும் வகையில் அமைக்கலாம். இதனால் முக்கியமான பொம்மைகள் தெளிவாகத் தெரியும்.

சிறிய விளக்குகளை பூ அலங்காரம், பாரம்பரிய பொம்மைகள் அல்லது கொலு பின்னணியுடன் இணைத்தால் அழகான காட்சி கிடைக்கும். மாலை நேரத்தில் அறையின் பிரதான விளக்கை சற்று குறைத்து, கொலு விளக்குகளை மட்டும் மிளிரச் செய்தால் இன்னும் அழகாக இருக்கும்.

1112
ஒரு போட்டோ கார்னர் வையுங்கள்
Image Credit : Gemini Ai

ஒரு போட்டோ கார்னர் வையுங்கள்

கொலுவுக்கு புது டச்..விருந்தினர்களை கவரும் அழகான போட்டோ கார்னர் (Photo Corner)

கொலுவின் அருகிலேயே ஒரு அழகான போட்டோ கார்னர் (Photo Corner) அமைத்துப் பாருங்கள். கொலுவைப் பார்ப்பதுடன், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு அழகான இடமாக இது இருக்கும்.

கொலுவின் அருகில் ஒரு சிறிய பின்னணியை அமைத்து, அதைச் சுற்றி மல்லிகை, சாமந்தி, ரோஜா போன்ற பூக்கள், அழகான தோரணங்கள் மற்றும் சிறிய LED விளக்குகள் கொண்டு அலங்கரிக்கலாம்.

பின்னணியில் “நவராத்திரி நல்வாழ்த்துகள்”, “கொலு 2026” போன்ற சிறிய எழுத்து அலங்காரங்களையும் சேர்க்கலாம். பாரம்பரிய தோற்றம் வேண்டும் என்றால் வாழை இலை, மா இலை தோரணம், பூமாலை போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

வீட்டிற்கு வரும் பெண்கள் பாரம்பரிய புடவை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகள் தங்களுக்கு பிடித்த பொம்மைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். குடும்பமாகவும் நண்பர்களுடனும் சேர்ந்து புகைப்படம் எடுக்க இந்த Photo Corner ஒரு அழகான இடமாக இருக்கும்.

கொலுவை பார்த்து ரசிப்பதோடு மட்டும் நிற்காமல், அந்த நவராத்திரி தருணங்களை அழகான புகைப்படங்களாகவும் சேமிக்கலாம்.

1212
உங்களுக்குப் பிடித்த ஒரு தீமைத் தேர்வு செய்யுங்கள்
Image Credit : Pinterest

உங்களுக்குப் பிடித்த ஒரு தீமைத் தேர்வு செய்யுங்கள்

முக்கியமாக, கொலு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் ஏற்கனவே இருக்கும் பொம்மைகள், துணிகள், பூக்கள், மரப்பொருட்கள், சிறிய விளக்குகள் போன்றவற்றை வைத்து கொஞ்சம் கிரியேட்டிவாக யோசித்தாலே அழகான கொலுவை உருவாக்க முடியும்.

இந்த நவராத்திரியில் வழக்கமான கொலுவுக்கு ஒரு சின்ன பிரேக் கொடுத்து, உங்களுக்குப் பிடித்த ஒரு தீமைத் தேர்வு செய்து அலங்கரித்துப் பாருங்கள். உங்கள் வீட்டு கொலு இந்த முறை பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Homemade Coconut oil : வீட்டிலேயே ஈஸியாக தேங்காய் எண்ணெய் செய்யலாம்..இதோ எளிய செய்முறை
Recommended image2
Microwave Oven: மைக்ரோவேவ் ஓவன் சுத்தம் செய்ய காசு செலவு செய்யாதீங்க! இந்த பொருளே போதும்
Recommended image3
Walking Tips: குறைந்த நேரத்தில் அதிக பலன்.. 'ஜப்பானிய வாக்கிங்' டெக்னிக் பாலோ பண்ணுங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்!
Related Stories
Recommended image1
Homemade Sambrani : சாமிக்கு வச்ச பூவை இனி தூக்கி போடாதீங்க.. வீட்டிலேயே மணக்கும் சாம்பிராணி செய்யலாம்!
Recommended image2
Homemade Coconut oil : வீட்டிலேயே ஈஸியாக தேங்காய் எண்ணெய் செய்யலாம்..இதோ எளிய செய்முறை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved