- Home
- Lifestyle
- Natural vs Chemical Mangoes: இயற்கை மாம்பழமா? இரசாயன மாம்பழமா? எளிதாக கண்டுபிடிப்பது எப்படி? இதோ 9 எளிய வழிகள்!
Natural vs Chemical Mangoes: இயற்கை மாம்பழமா? இரசாயன மாம்பழமா? எளிதாக கண்டுபிடிப்பது எப்படி? இதோ 9 எளிய வழிகள்!
Mangoes: மாம்பழங்கள் அனைத்தும் இயற்கையாகப் பழுத்தவை அல்ல. வியாபாரிகள் பயன்படுத்தும் கால்சியம் கார்பைடு போன்ற இரசாயனங்கள் மூலம் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களை நிறம், வாசனை, மற்றும் தொடு உணர்வு மூலம் கண்டறிய சில எளிய வழிகள் உள்ளன.

மாம்பழ சீசன்
இந்தியாவில் கோடைகாலம் என்றாலே மாம்பழ சீசன் தான் நினைவுக்கு வரும். அல்போன்சா, லங்டா, தசேரி எனப் பல ரகங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று சுவைப்பர்கள். ஆனால், சந்தையில் கிடைக்கும் அனைத்து மாம்பழங்களும் இயற்கையாகப் பழுத்தவை அல்ல. வியாபாரிகள் லாபத்திற்காக கால்சியம் கார்பைடு, எத்திலீன் ஆக்சைடு போன்ற ரசாயனங்களை பயன்படுத்தி மாம்பழங்களைச் செயற்கையாக பழுக்க வைக்கின்றனர். இதுபோன்ற மாம்பழங்களை சாப்பிடுவதால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

நிறத்தை உற்று நோக்குங்கள்
நாம் வாங்கும் மாம்பழம் ஆரோக்கியமானதா அல்லது இரசாயனம் கலந்ததா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? எப்படி என்பது தொடர்பாக சில எளிய டிப்ஸ் பார்க்கலாம்.
* நிறத்தை உற்று நோக்குங்கள்
இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் சீரான நிறத்தில் இருக்காது. ஆங்காங்கே பச்சை, மஞ்சள் மற்றும் லேசான ஆரஞ்சு நிறங்கள் கலந்து காணப்படும்.
இரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரே சீரான பளபளப்பான மஞ்சள் அல்லது தங்க நிறத்தில் இருக்கும்.
காம்பு பகுதியில் வாசனை
இயற்கை மாம்பழம்:
மாம்பழத்தின் காம்புப் பகுதிக்கு அருகில் மூக்கை வைத்து மோப்பம் பிடித்தால், நல்ல இனிப்பான, தூய்மையான மாம்பழ வாசனை வீசும்.
இரசாயன மாம்பழம்:
இதில் எந்தவித நறுமணமும் இருக்காது; அல்லது ஒருவித இரசாயன (Chemical) வாடை வீசும்.
* தொட்டுப் பாருங்கள்
இயற்கை மாம்பழம் என்றால் கைகளில் எடுத்து லேசாக அழுத்தினால் பழம் மென்மையாக (Soft) இருக்கும்.
இரசாயன மாம்பழம் என்றால் பழத்தை அமுக்கினால் மேல்பகுதி மென்மையாகத் தோன்றும், ஆனால் உள்ளே காய் போலக் கடினமாக இருக்கும். சில பழங்கள் அளவுக்கு அதிகமாகக் குழைந்து போயிருக்கும்.
மாம்பழத்தை வெட்டி பார்த்தல்
பழத்தை வெட்டிப் பார்த்தால் உள்ளே இருக்கும் சதைப்பகுதி (Pulp) முழுவதும் ஒரே சீரான நிறத்திலும், சாறு நிறைந்தும் இருக்கும். அப்படி இருந்தால் இயற்கை மாம்பழம்.
உள்ளே சில இடங்கள் பழுத்தும், சில இடங்கள் வெளிறிய மஞ்சள் நிறத்தில் காயாகவும், நார் பகுதிகள் கடினமாகவும் இருக்கும். அப்படி இருந்தால் இரசாயன மாம்பழம்.
தண்ணீர் சோதனை
ஒரு வாளித் தண்ணீரில் நீங்கள் வாங்கிய மாம்பழங்களைப் போடுங்கள். இயற்கை பழங்கள் உள்ளே சர்க்கரைச் சத்து நிறைந்து கனமாக இருப்பதால் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். செயற்கை பழங்கள் இரசாயன மாற்றத்தால் எடை குறைந்து தண்ணீரின் மேல் மிதக்கும்.
நம்பகமான இடங்களில் வாங்குங்கள்
உள்ளூர் விவசாயச் சந்தைகள், தெரிந்த பழ வியாபாரிகள் அல்லது ஆர்கானிக் (Organic) கடைகளில் மாம்பழங்களை வாங்குவது ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க உதவும்.
அதிக பளபளப்பைத் தவிருங்கள்
கண்ணைக் கவரும் வகையில் மெழுகு (Wax) அல்லது இரசாயனம் பூசப்பட்டது போல அதிகப் பளபளப்புடன் இருக்கும் மாம்பழங்களைத் தவிர்க்கவும். இயற்கை மாம்பழங்களின் தோல் சற்று சாதாரண தோற்றத்தில்தான் இருக்கும்.
* கால்சியம் கார்பைடு ஆபத்து
செயற்கையாகப் பழுக்க வைக்க வியாபாரிகள் 'கால்சியம் கார்பைடு' என்ற ஆபத்தான இரசாயனத்தைப் பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வெளியாகும் நச்சுப் பொருட்களால் தலைவலி, தலைச்சுற்றல், வயிற்று எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். இதன் தீமை காரணமாகவே இந்த இரசாயனத்தைப் பயன்படுத்தப் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

