கொசுக்கடி கொல்லுதா? ஈஸியா கொசுவை விரட்டும் சூப்பர் டிப்ஸ்
தொல்லை தரும் கொசுக்களை வீட்டிலிருந்து விரட்டி அடிக்க உதவும் சில குறிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Tips To Prevent Mosquito Bites : கொசுக்கள் நமக்கு எந்த பருவ காலத்திலும் தொல்லை தான் தரும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கொசுக்கள் இருந்தால் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான மக்கள் கொசுக்கடியால் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். எனவே கொசுக்கடியில் இருந்து நம்மை நாம் பாதுகாப்பது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில் கொசு தொல்லையால் உங்களால் இரவு நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தொல்லை தரும் கொசுக்களை சுலபமாக விரட்டி அடிக்கலாம். அவை என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய்
இது எலுமிச்சை வாசனை கொண்ட ஒரு தனித்துவமான எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் பெரும்பாலும் பூச்சிகளை விரட்டி அடித்ததால் பயன்படுத்தப்படும். அதிலும் குறிப்பாக கொசுக்களை விரட்டியடிக்க இது மிகவும் நல்லது. எனவே உங்களது வீடு அல்லது தூங்கும் அறைகள் இந்த எண்ணெயை தெளித்து கொசுக்களை விரட்டி அடிக்கலாம்.
வேப்பிலை எண்ணெய்
வேப்ப எண்ணெயுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து அதை வீடு முழுவதும் துடித்தால் கொசுக்கள் விரட்டி அடிக்கலாம். வேப்ப எண்ணெயில் இருந்து வரும் கடுமையான வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. எனவே அவை வீட்டில் இருந்து ஓடிவிடும்.
லாவெண்டர் எண்ணெய்
லாவண்டர் எண்ணெயில் இருக்கும் பூக்களின் வாசனை கொசுக்களை விரட்டும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.. இந்த எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் கிருமி நாசனை போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் இந்த எண்ணெய் நம்முடைய மனநிலையை மேம்படுத்தும்.
இதையும் படிங்க: கொசுக்கடியை தவிர்க்க பயன்படுத்தும் க்ரீம்கள் ஆபத்தானதா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?
பூண்டு
பூண்டிலிருந்து வரும் வலுவான வாசனை கொசுக்களை விரட்டும் பண்பை கொண்டது. எனவே பூண்டை நசுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு ஆற வைத்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதை வீடு முழுவதும் தெளிக்கவும். இதனால் கொசுக்கள் வராமல் இருக்கும்.
இதையும் படிங்க: இந்த ஒரே ஒரு பொருளை வைத்து வீட்டில் உள்ள ஈக்கள், கொசுக்களை விரட்டலாம்; எப்படி தெரியுமா?
கற்பூரம்
கற்பூரம் ஒரு சிறந்த இயற்கை கொசு விரட்டி ஆகும். இதற்கு நீங்க தூங்கும் அறையில் ஒரு கற்பூரத் துண்டுகளை வைக்கவும் இது சிறப்பான பலன்களை தரும். வேண்டுமானால் கற்பூரத்தை எரித்து அதன் புகையை வீடு முழுவதும் பரப்பச் செய்யுங்கள். மற்றொரு வழி என்னவென்றால், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு மூன்று கற்பூரத்தை போட்டு வைத்தால் அதிலிருந்து வரும் வாசனையால் கொசுக்கல் வீட்டில் தங்காது ஓடிவிடும்.