MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ரக்‌ஷா பந்தன் : புராணங்களில் யார் யாருக்கு ராக்கி கட்டினார்கள் தெரியுமா?

ரக்‌ஷா பந்தன் : புராணங்களில் யார் யாருக்கு ராக்கி கட்டினார்கள் தெரியுமா?

ரக்‌ஷா பந்தன்.. அண்ணன் தங்கைகளுக்கு இடையேயான ஒரு முக்கிய பண்டிகை. ஆகஸ்ட் 19 அன்று ரக்‌ஷ கொண்டாட அனைவரும் தயாராக உள்ளனர். ஆனால், ரக்‌ஷா பந்தன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான புராணக் கதைகள், அவற்றில் யார் யாருக்கு ராக்கி கட்டினார்கள் என்பதை தெரிந்து கொள்வோமா..

2 Min read
Author : Ramya s
Published : Aug 16 2024, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திரௌபதிக்கு கிருஷ்ணரின் வரம்..

திரௌபதிக்கு கிருஷ்ணரின் வரம்..

மகாபாரத புராணத்தின் படி, ஒருமுறை கிருஷ்ணர் பட்டம் விட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது நூல் அறுந்து கிருஷ்ணரின் விரல் வெட்டப்பட்டதாம். இரத்தம் அதிகமாக வெளியேற தொடங்கியதால், அங்கே இருந்த திரௌபதி தனது புடவையின் ஓரத்தை கிழித்து அண்ணனின் விரலில் கட்டினாராம். மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணர் உனக்கு ஒரு சகோதரனாக எல்லா வகையிலும் உதவி செய்வேன் என்று வரம் அளித்தாராம்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
சாந்தோஷி மாதா கதை..

சாந்தோஷி மாதா கதை..

சிவ புராணத்தின் படி, கணேஷனுக்கு அவரது சகோதரி ஒரு முறை ரக்‌ஷ பந்தன் கட்டினாராம். அதைப் பார்த்த கணபதியின் மகன்களான சுபம், லாபம் தங்களுக்கும் ராக்கி கட்ட வேண்டும் என்று விரும்பினார்களாம். எங்களுக்கு சகோதரி இருந்தால் கட்டுவோம் என்றார்களாம். அப்போது கணபதி தனது தெய்வீக சக்தியால் ஒரு பெண்ணைப் படைத்தாராம். அவர்தான் சாந்தோஷி மாதா. அப்போது சுபம், லாபம் இருவரும் சாந்தோஷி மாதாவிற்கு ராக்கி கட்டினார்கள் என்று புராணம் கூறுகிறது.
 

35
மகாலட்சுமிக்கு பலி அளித்த வரம்..

மகாலட்சுமிக்கு பலி அளித்த வரம்..

ஒரு புராணத்தின் படி, மகாபலி சக்கரவர்த்தி விஷ்ணுவுக்காக கடுமையான தவம் செய்தார். அவரின் வரத்தால் மகிழ்ச்சியடைந்த விஷ்ணு அவர் முன் வேண்டிய வரத்தை கேட்க சொன்னார். எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று மகாபலி கேட்டார். மகா விஷ்ணு அவருடனே இருந்துவிட்டார். ஆனால் விஷ்ணு வராததால் விஷயம் தெரிந்த லட்சுமி தேவி மகாபலி சக்கரவர்த்தியிடம் ஒரு ஏழைப் பெண் வேடத்தில் வந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணிடம் என்ன ஆனது மகாபலி கேட்க, தனக்கு அண்ணன் இல்லை என்று வருந்தினார். இதனால் மகாபலி தன்னையே அண்ணனாக நினைத்து ராக்கி கட்டிக் கொண்டார். பிறகு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் தனது உண்மையான ரூபத்தை காட்டி விஷ்ணுவை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கேட்டார். மகாலியும் தான் கொடுத்த வாக்கின் படி விஷ்ணுவை அனுப்ப, இருவரும் வைகுண்டம் சென்றார்களாம்.
 

45
தர்மராஜாவும் ரக்‌ஷா பந்தன் கட்டினார்...

தர்மராஜாவும் ரக்‌ஷா பந்தன் கட்டினார்...

மகாபாரதப் போரின் போது தர்மர் மிகவும் கவலையடைந்தாராம். கிருஷ்ணரிடம் சென்று படையை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அப்போது கிருஷ்ணர் அனைவரும் ரக்‌ஷா பந்தன் கட்ட வேண்டும் என்று கூறினார். இதனால் தர்மராஜாவும் ரக்ஷாபந்தன் கட்டிக்கொண்டு போர்க்களத்திற்கு சென்றாராம்.

55
இந்திரனுக்கு ரக்ஷாபந்தன்..

இந்திரனுக்கு ரக்ஷாபந்தன்..

ஒரு புராணத்தின் படி, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது தனது கணவரைக் காப்பாற்றும்படி இந்திரனின் மனைவி இந்திராணி பகவான் கிருஷ்ணரிடம் சென்றார். அப்போது கிருஷ்ணர் கொடுத்த ரக்ஷாபந்தனை இந்திராணி தனது கையில் கட்டிக்கொண்டாராம்.
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ 100 பட்ஜெட்டில் அசத்தலான 6 பெண்டெக்ஸ் தங்க நகல் வளையல் டிசைன்கள்
Recommended image2
கோடைகாலத்திற்கான 6 சிறந்த லைட் எம்பிராய்டரி காட்டன் சூட் டிசைன்கள்
Recommended image3
Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved