- Home
- Lifestyle
- Ants In Monsoon : மழைநேரத்தில் வீட்டிற்குள் படையெடுக்கும் எறும்புகள்!! இந்த ஒரு பொருளை வைச்சு நிரந்தரமா விரட்டலாம்
Ants In Monsoon : மழைநேரத்தில் வீட்டிற்குள் படையெடுக்கும் எறும்புகள்!! இந்த ஒரு பொருளை வைச்சு நிரந்தரமா விரட்டலாம்
மழைக்காலத்தில் வீட்டில் எறும்புகள் தொல்லை அதிகமாக இருந்தால் அவற்றை நிரந்தரமாக விரட்டியடிக்க பயனுள்ள சில டிப்ஸ்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Monsoon Ants Control Tips
மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு. சில இடங்களில் சாரல் மழை, சில இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த சீசனில் வீட்டில் ஈக்கள், எலும்புகள் பூச்சிகளின் தொல்லை அதிகமாகும். அதுவும் குறிப்பாக மத்த சீசனை விட இந்த சீசனில் தான் எறும்புகளின் தொல்லை ரொம்பவே அதிகமாக இருக்கும். இதனால் எந்தவொரு உணவையும் வெளியில் வைக்க கூட முடிவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், எறும்புகளை விரட்ட கெமிக்கல் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாகிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்கள். எறும்புகள் இனி உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
வெள்ளை வினிகர்
மழைக்காலத்தில் வீட்டிற்குள் வந்து தொல்லை தரும் எறும்புகளை விரட்ட வெள்ளை வினிகர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு வெள்ளை வினிகருடன் சிறிதளவு தண்ணீர் கலந்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதை எறும்புகள் வரும் இடங்களில் தெளித்தால் போதும். எறும்புகள் செத்துமடியும்.
உப்பு :
வீட்டில் தொல்லை தரும் எலும்புகளை விரட்ட உப்பை பயன்படுத்தலாம். இதற்கு எறும்புகள் வீட்டிற்குள் நுழையும் கதவுகள், ஜன்னல்கள் போன்ற இடங்களில் உப்பை போட்டு வைத்தால் எறும்புகள் வீட்டிற்குள் வராது.
எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் :
இதற்கு ஒரு ஸ்பிரே பாட்டிலில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் கலந்து அதை எறும்புகள் இருக்கும் இடத்தில் தெளித்தால் எறும்புகள் அழிந்துவிடும்.
மிளகாய் பொடி :
எறும்புகள் வரும் மற்றும் இருக்கும் இடங்களில் சிறிதளவு மிளகாய் பொடியை தூவி விடுங்கள். அதிலிருந்து வரும் வாசனை மற்றும் நெடிக்கு எறும்புகள் ஓடிவிடும். அல்லது இறந்துவிடும்.