- Home
- Lifestyle
- Cooking Tips: எண்ணெய் கம்மியா ஊத்தினாலும் சாப்பாடு டேஸ்ட்டா இருக்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Cooking Tips: எண்ணெய் கம்மியா ஊத்தினாலும் சாப்பாடு டேஸ்ட்டா இருக்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Cooking Tips: சமையலில் எண்ணெயை குறைக்க நினைப்பவர்கள் சுவையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சில எளிய பழக்கங்களை மாற்றினாலே போதும். உணவின் இயற்கையான சுவையை வெளிக்கொண்டு வருவதுடன், தேவையற்ற எண்ணெய் பயன்பாட்டையும் குறைக்கலாம்.

குறைந்த எண்ணெய் சமையல் முறைகள்
ஆரோக்கியமா இருக்கணும், உடல் எடையைக் குறைக்கணும்னு நினைக்கிறவங்க சமையல்ல எண்ணெயைக் குறைக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, எண்ணெய் குறைச்சா டேஸ்ட் போயிடும்னு ஒரு கவலை இருக்கும். பிரபல செலிபிரிட்டி செஃப் ரன்வீர் ப்ரார், சுவை குறையாமல் குறைந்த எண்ணெயில் எப்படி சமைப்பது என்ற ரகசியத்தைச் சொல்லியிருக்கார். அந்த சூப்பர் டிப்ஸை இப்போ பார்க்கலாம்.
முதலில் எண்ணெய் பாட்டிலை மாற்றுங்கள்
நம்மில் பலரும் பெரிய எண்ணெய் கேன் அல்லது அகலமான வாய் கொண்ட பாட்டில்களைப் பயன்படுத்துவோம். இதனால, நமக்குத் தெரியாமலேயே அதிக எண்ணெயை ஊற்றிவிடுவோம். இதுக்கு பதிலா, சின்ன அல்லது குறுகலான வாய் கொண்ட பாட்டிலுக்கு மாறுங்க. இதனால எண்ணெய் ஊற்றும்போது அளவு கட்டுப்படும், தேவையில்லாம எண்ணெய் அதிகமாகாது. தாளிக்கும்போது மசாலா கருகாம இருக்க நிறைய எண்ணெய் ஊத்துவோம். இனிமே அப்படி செய்யாதீங்க.
School Uniforms: இந்தியப் பள்ளிகளில் ஏன் விதவிதமான யூனிஃபார்ம்? 7 சுவாரஸ்யமான காரணங்கள்!
எண்ணெய் இல்லாமல் சமைப்பது
கொஞ்சமா எண்ணெய் ஊத்தி, கடுகு பொரிஞ்சதும் லேசா தண்ணீர் தெளிங்க. இதனால மசாலா கருகாது, வாசனையும் சுவையும் நல்லா இறங்கும். குழம்பு, கிரேவி செஞ்சு முடிச்சதும், மேல எண்ணெய் மிதக்கும். பரிமாறுறதுக்கு முன்னாடி, அந்த அதிகப்படியான எண்ணெயை ஒரு கரண்டியால மெதுவா எடுத்துடுங்க. இதனால சுவை மாறாது, ஆனா தேவையில்லாத கலோரிகள் உடம்புக்குள்ள போகாது.
குறைந்த எண்ணெயில் சமைக்க சூப்பர் டிப்ஸ்
சாதாரண பாத்திரங்களை விட, நான்-ஸ்டிக் அல்லது காஸ்ட்-ஐயன் பாத்திரங்கள் பயன்படுத்தினால் 70% வரை எண்ணெய் மிச்சமாகும். கரண்டியால் ஊற்றுவதற்குப் பதில், ஸ்ப்ரே பாட்டில் பயன்படுத்தினால், எண்ணெய் பாத்திரம் முழுக்க சமமாகப் பரவும், பயன்பாடும் குறையும். காய்கறிகளை எண்ணெயில் வதக்குவதற்குப் பதில், முதலில் லேசாக வேகவைத்துவிட்டு, பிறகு தாளித்தால் எண்ணெய் தேவை ரொம்பவே குறையும்.
குறைந்த எண்ணெயில் சுவையான உணவு
சமோசா, பக்கோடா போன்றவற்றை டீப் ஃபிரை செய்வதற்குப் பதில், ஏர் ஃபிரையர் பயன்படுத்தினால் 80-90% வரை எண்ணெய் குறையும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL) குறைத்து, ரத்த அழுத்தத்தை (BP) கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 1 ஸ்பூன் எண்ணெயில் சுமார் 120 கலோரிகள் உள்ளன. எண்ணெயைக் குறைத்தால், தேவையற்ற கலோரிகளைக் குறைக்கலாம். அதிக எண்ணெய் உணவால் வரும் அசிடிட்டி, கேஸ் போன்ற பிரச்சனைகள் குறையும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

