சமையலை சுலபமாகவும், வேகமாகவும் முடிக்க குக்கர் ஒரு முக்கிய சாதனம். ஆனால், சில சமயங்களில் பிரஷர் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே கசிய ஆரம்பித்துவிடும்.
குக்கரில் இருந்து தண்ணீர் கசிவதால், சுலபமாக முடிய வேண்டிய வேலை இரண்டு மடங்காகிவிடும். இந்த சிக்கலைத் தவிர்க்க, இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள்.
Image credits: Pixabay
Tamil
பல தேவைகளுக்கு குக்கர்
பருப்பு, சாதம் வேகவைக்க குக்கர் உதவுகிறது. ஆனால், சில சமயம் சமைக்கும்போது குக்கர் விசில் பகுதியில் இருந்து தண்ணீர் கசியும். இது நமது வேலைப்பளுவை அதிகரித்துவிடும்.
Image credits: stockPhoto
Tamil
கால் பகுதி காலியாக இருக்கட்டும்
சமைத்த பிறகு பிரஷர் குக்கரை நன்றாக கழுவ வேண்டும். ஸ்டீம் வால்வை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். குக்கரில் சமைக்கும்போது, உள்ளே கால் பகுதி காலியாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்
Image credits: stockPhoto
Tamil
ரப்பரை மாற்றுங்கள்
குக்கரின் முக்கியமான பாகங்களில் ஒன்று ரப்பர் (கேஸ்கட்). அது சேதமடைந்தால், குக்கரில் இருந்து தண்ணீர் கசிய வாய்ப்புள்ளது. ரப்பர் சேதமடைந்திருந்தால், அதை உடனடியாக மாற்றிவிடுங்கள்.
Image credits: Pixabay
Tamil
மூடியை இறுக்கமாக மூடுங்கள்
பிரஷர் குக்கர் மூடியை எப்போதும் இறுக்கமாகவும், சரியாகவும் பொருத்த வேண்டும். அது லூசாக இருந்தாலோ அல்லது தவறாகப் பொருத்தப்பட்டிருந்தாலோ, குக்கரில் இருந்து தண்ணீர் கசியத் தொடங்கும்.
Image credits: instagram
Tamil
அழுக்கிருந்தால் சுத்தம் செய்யுங்கள்
குக்கரின் உள்ளே பிரஷர் ரெகுலேட்டர் (pressure regulator) ஒன்று இருக்கும். அது சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் குக்கரில் இருந்து தண்ணீர் கசியும். அதைத் தவறாமல் சரிபார்க்க வேண்டும்