- Home
- Lifestyle
- Bramma Mantra: பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தை உச்சரித்தால்....கேட்ட வரம் உடனே கிடைக்குமாம்..?
Bramma Mantra: பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தை உச்சரித்தால்....கேட்ட வரம் உடனே கிடைக்குமாம்..?
Bramma Mantra: ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் மாறுதலால் ஏற்படும் மாற்றங்கள், வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் தோஷங்களும், யோகங்களும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. ஒருவரின் வாழ்க்கையில் துன்பமோ அல்லது இன்பமோ நிலையானதாக இருப்பதில்லை.

Bramma Mantra:
ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் மாறுதலால் ஏற்படும் மாற்றங்கள், வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் தோஷங்களும், யோகங்களும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. ஒருவரின் வாழ்க்கையில் துன்பமோ அல்லது இன்பமோ நிலையானதாக இருப்பதில்லை.
ஒருவரது ஜாதகத்தில் தோஷங்களுக்கு பரிகாரங்கள் இருப்பதுபோல, பிறக்கும் போது ஒருவருக்கு கோடீஸ்வர யோகம் இருக்கும். ஆனால் நமக்கு யோகங்கள் இல்லாமலேயே எப்படி செல்வம் பெறலாம். என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Bramma Mantra:
வேதங்களை உருவாக்கியவர் பிரம்மதேவர். இந்த பிரம்ம தேவரை முறையாக வழிபடுபவர்களுக்கு கோடீஸ்வர யோகமும், நீண்ட ஆயுளும், குறைவற்ற ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படியாக, பிரம்ம தேவருடைய காயத்ரி மந்திரம் ரொம்பவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இம்மந்திரத்தை தினமும் காலை 3.00 முதல் 5.00 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
Bramma Mantra:
பிரம்ம காயத்ரி மந்திரம்:
ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்!!!
Bramma Mantra:
வழிபாட்டின் பலன்கள்:
தினமும் பிரம்ம தேவருடைய காயத்ரி மந்திரதை துதித்து வழிபடுவர்களுக்கு ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல்கள் உண்டாகும். புகழ், சொத்து, செல்வாக்கு, செல்வம், நிம்மதியான வாழ்க்கை, சொந்த வீடு, நிலம் என அனைத்து வசதிகளுடன் வாழமுடியும். உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தும் தெய்வீக ஆற்றலால் நிறையும். வாழ்வில் புத்துணர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள், பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ந்து போகுமாம். நீண்ட நாள் இருந்து வந்த திருமண தடை நீங்கும். வாழ்வில் வெற்றி உண்டாகும். புது ஒளி பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம் ஆகும்.