பஸ் டிக்கெட் புக் பண்ண போறீங்களா? ஆபர்களை வாரி வழங்கும் புக்கிங் Apps லிஸ்ட் இதோ!
விடுமுறை காலம் தொடங்கி விட்ட நிலையில், அதிக ஆபர்கள் வழங்கும் பஸ் டிக்கெட் புக்கிங் செயலிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
REDBUS
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் பலரும் குடும்பத்துடன் வெளியூர் பயணத்துக்கு திட்டமிட்டு இருக்கலாம். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்தியாவில் சிறந்த பஸ் டிக்கெட் புக்கிங் செயலிகள் மற்றும் அவற்றின் ஆபர்கள் குறித்து விரிவாக காணலாம்.
ரெட் பஸ் (Red Bus)
ரெட் பஸ் இந்தியாவின் நம்பர் 1 பஸ் டிக்கெட் முன்பதிவு செயலியாகும். இந்தியாவின் எந்த ஒரு இடத்தில் இருந்தும் மற்ற இடத்துக்கு செல்ல ரெட் பஸ் வாயிலாக டிக்கெட் புக் செய்து கொள்ள முடியும். குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, இருக்கை வசதி என நமக்கு தேவையான பேருந்துகளில் பயணிக்க புக் செய்ய முடியும். மொபைலில் பிளே ஸ்டோர் மூலம் ரெட் பஸ் செயலியை டவுன்ட்லோட் செய்து செல்போன் எண்ணை பயன்படுத்தி எளிதாக டிக்கெட் புக் செய்யலாம்.
முதன்முறை ரெட் பஸ் செயலில் நீங்கள் டிக்கெட் புக் செய்தால் கட்டணத்தில் 10% வரை தள்ளுபடி கிடைக்கும். ரூ.150 வரை உங்களால் சேமிக்க முடியும். ரூ.100 கேஷ்பேக் சலுகையும் உண்டு. ரெட் பஸ் செயலில் பயண தேதியை மாற்றி அமைக்கும் வசதியும் உள்ளது.
Abhi bus
அபி பஸ் (Abhi Bus)
ரெட் பஸ் செயலிக்கு அடுத்தபடியாக அபி பஸ் செயலி மூலம் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அபி பஸ் செயலியின் மூலம் முதல்முறை டிக்கெட் புக் செய்தால் SKIP2024 என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தி 10% வரை அதாவது ரூ.250 வரை கட்டணத்தில் தள்ளுபடி கிடைக்கும். மேலும் ரூ.250 வரை கேஷ்பேக்கும் கிடைக்கும். இது தவிர ABHIFIRST என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தி புக் செய்ய்யும்போது 10% முதல் ரூ.175 வரை உடனடித் தள்ளுபடி பெறலாம். ரூ.255 வரை கேஷ்பேக் கிடைக்கும்.]
டீனேஜ் பிள்ளைக்கு பெற்றோர் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டிய '5' முக்கிய விஷயங்கள்
Paytm
பேடிஎம் (Paytm)
ஆன்லைன் பணபரிவர்த்தனை செயலியான பேடிஎம், பஸ் டிக்கெட் முன்பதிலும் முன்னிலையில் உள்ளது. BUSFESTIVE என்ற குறியீட்டைப் பயன்படுத்தி ரூ.500க்கு மேல் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 8% உடனடி தள்ளுபடி அதாவது ரூ.300 வரை கேஷ்பேக் கிடைக்கும். பெண்கள் LADYBUS என்ற குறியீட்டைப் பயன்படுத்தி புக் செய்யும்போது ரூ.300 வரை தள்ளுபடி பெறலாம். மேலும் டிக்கெட் கேன்சல் செய்யும்போது 100% ரீபண்ட் தொகை பெறும் வசதியும் உள்ளது.
Make my trip
மேக் மை டிரிப் (Make My Trip)
விமானம், ஹோட்டல்களுக்கான முன்பதிவு செயலியில் முன்னிலை வகிக்கும் make my trip பஸ் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஏராளமான ஆபர்களை வழங்கி வருகிறது. FLASH100 என்ற குறியீட்டைப் பயன்படுத்தி ரூ.1000க்கு மேல் டிக்கெட் புக் செய்யும்போது ரூ.100 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும். MMTBLACK என்ற குறியீட்டைப் பயன்படுத்தி ரூ.2,000க்கு மேல் டிக்கெட் புக் செய்யும்போது உடன்டியாக ரூ.150 கேஷ்பேக் கிடைக்கும்.
இந்த '6' பிரச்சினை உள்ளவங்க வெறும் வயிற்றில் மறந்தும் நெய் சாப்பிடாதீங்க!!