- Home
- Lifestyle
- வீட்டின் சமையல் அறையில் இருக்கும் இந்த பொருளை தெரியாமல் கூட தானம் கொடுக்க வேண்டாம்; மீறினால் என்ன பிரச்சனை..?
வீட்டின் சமையல் அறையில் இருக்கும் இந்த பொருளை தெரியாமல் கூட தானம் கொடுக்க வேண்டாம்; மீறினால் என்ன பிரச்சனை..?
Vastu tips for home: ஜோதிட சாஸ்திரத்தில் சிலவற்றை தானம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. என்ன காரணம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

Vastu tips for home:
ஜோதிடத்தில், ஒவ்வொரு தெய்வத்திற்கு அதன் தனி சிறப்பு உண்டு, தானம் செய்வதும் இறைவனை அடையும் வழி. அன்னதானம், ஆடை தானம், ஏழை எளியவர்களுக்கு செய்யும் தானம் இறைவனுக்கு பிடிக்கும். இதன் மூலம் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்குவார். அதே போல, லட்சுமி தேவியின் அருளைத் தக்கவைக்க ஜோதிட சாஸ்திரத்தில் சிலவற்றை தானம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி என்ன பொருட்களை நாம் தானம் செய்ய கூடாது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Vastu tips for home:
எல்லோருக்கும் தங்களுடைய மனதில் ஒவ்வொரு ஆசைகளும், வேண்டுதல்களும் இருக்கும். அது பலிக்க வேண்டும் என்கிற தீராத பிரார்த்தனை இருப்பவர்கள் சில பரிகாரங்கள் செய்வதுண்டு. ஆனால், இந்து மதத்தில், லட்சுமி தேவியின் ஆசியைப் பெற வெள்ளிக்கிழமை சில வேலைகளைச் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இப்படி செய்தால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும் என்பது ஐதீகம்.
Vastu tips for home:
அதன்படி வெள்ளிக்கிழமையன்று யாருக்கும் சர்க்கரை தானம் செய்யக்கூடாது என்பது ஐதீகம். இது மங்களகரமானதாக கருதப்படவில்லை. இந்த நாளில் சர்க்கரை தானம் செய்வது பொருளாதார பிரச்சனை சந்திக்க நேரிடச் செய்யும் .
அதேபோன்று, இந்நாளில் யாரிடமும் கடன் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. ஏனெனில், யாரிடமாவது கடன் வாங்குவது அல்லது கொடுப்பது, உங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.
Vastu tips for home:
அதேபோன்று,வழிபாடு நடைபெறும் போது ஆரத்தி விளக்கில் போதுமான நெய் அல்லது எண்ணெய் இருப்பதை உறுதி செய்யுங்கள். இடையில் அவை அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வழிபாடு நடைபெறும்போது விளக்கு அணைந்தால், அதற்கு பலன் கிட்டாது. தெய்வங்களுக்கு சுத்தமான பூக்களை பயன்டுத்துங்கள்.
லட்சுமி தேவியின் ஆசியைப் பெற பெண்கள் யாரையும் அவமதிக்காதீர்கள். இவ்வாறு செய்வதால், தாய் லட்சுமி கோபமடைந்து, உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை கெடுக்கும். மேலும், வீட்டில் வறுமை தாண்டவமாடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.