- Home
- Lifestyle
- Suriyan Peyarchi 2022: இன்னும் 24 மணி நேரத்தில் சூரியன் பெயர்ச்சி..இந்த ராசிகளின் காட்டில் பண மழை பொழியும்..
Suriyan Peyarchi 2022: இன்னும் 24 மணி நேரத்தில் சூரியன் பெயர்ச்சி..இந்த ராசிகளின் காட்டில் பண மழை பொழியும்..
Suriyan Peyarchi 2022 Palangal: கன்னி ராசியில் அடுத்த 24 மணி நேரத்தில், சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆதாயங்களும் லாபமும் உண்டாகும்.

Suriyan Peyarchi 2022:
ஜோதிடத்தின் பார்வையில், நவ கிரங்களில் சூரியன் முக்கியமான கிரகமாக உள்ளது. சூரியன் பெயர்ச்சியால் குறிப்பிட்ட ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும். அதன்படி, இன்னும் 24 மணி நேரத்தில் அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியை விட்டு விலகி கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார். அந்த வகையில் சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும்.
எனினும், இந்த குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆதாயங்களும் லாபமும் உண்டாகும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
Suriyan Peyarchi 2022:
கன்னி:
கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். சிம்ம ராசியில் இருந்து சூரிய பகவான் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் இரண்டிலும் பெரிய வெற்றி கிடைக்கும். உங்களுக்கு திடீர் பண வரவுகள் உண்டாகும்.இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலைமைகள் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் பல மடங்கு லாபத்தை அதிகரிக்க முடியும்.
மேலும் படிக்க...Guru Peyarchi: குருவின் வக்ர மாற்றத்தால்..பேரதிர்ஷ்டத்தை தங்கள் வசப்படுத்த போகும் ராசிகளில்..நீங்களும் ஒருவரா?
Suriyan Peyarchi 2022:
தனுசு:
இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களின் பணி சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். இந்த இரண்டு சூழ்நிலைகளும் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.வியாபாரிகளுக்கு இந்த நேரத்தில் புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.
Suriyan Peyarchi 2022:
விருச்சிகம்:
கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு 11ஆம் வீட்டில் நடக்கும். இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது திடீர் பண ஆதாயத்தையும் நாம் பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் நன்றாக அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.