- Home
- Lifestyle
- Ketu Peyarchi 2022:செவ்வாய்-கேது 9-வது இடத்தில் சேர்க்கை..இந்த ராசிகளுக்கு ஆபத்து இருக்கு ..உஷாராக இருங்கள்..!
Ketu Peyarchi 2022:செவ்வாய்-கேது 9-வது இடத்தில் சேர்க்கை..இந்த ராசிகளுக்கு ஆபத்து இருக்கு ..உஷாராக இருங்கள்..!
Ketu peyarchi palangal 2022: செவ்வாய்-கேது ஒன்பதாம் இடத்தில் இணைந்தால் உருவாகும் புதிய யோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

ஜோதிடத்தின் பார்வையில், கிரங்களின் ராசி மாற்றம் ஒருவருக்கு சுப மற்றும் அசுப பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். நிழல் கிரகமான ராகுவும், கேதுவும் பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை ராசி மாறும், கிரகங்களாகும். ராகு, கேது தோஷம் உள்ள ராசிகளுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும். இந்த நிலையில், செவ்வாயின் இணைவதால் புதிய தோஷம் உருவாகியுள்ளது.
அக்டோபர் 16-ம் தேதி மிதுன ராசிக்கு செவ்வாய் சென்ற பிறகு இந்த தோஷம் உருவாகியுள்ளது. இதனால், சட்டச் சிக்கல்கள், குடும்ப உறுப்பினரின் உயிரிழப்பு அல்லது கடுமையான விபத்து போன்றவை ஏற்படும். இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு அசுபமானதாக இருக்கும்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் மன அழுத்தம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடையலாம். இந்த காலகட்டத்தில் செய்த முதலீடுகளால் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். முதலீடு செய்வது அவசியமானால், ஒரு நிபுணரைத் தொடர்பு கொண்ட பின்னரே செய்யவும். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனை ஏற்படலாம்.
ரிஷபம்:
செவ்வாய் மற்றும் கேது இணைவு ரிஷப ராசிக்காரர்களுக்கும் சரியில்லை. பொருளாதார ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் சற்று கவலையாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். வாகனங்களை ஓட்டும்போதுகவனம் தேவை. வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களை நீதிமன்றத்திற்கு போகலாம். நீதிமன்றத்தில் ஏதாவது வழக்கு இருந்தால் வாய்தா வாங்குங்கள். குடும்ப வாழ்க்கையிலும் மக்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு வரலாம். வீட்டுப் பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அவர்களுக்கு விபத்து ஏற்படலாம். எச்சரிக்கையாக இருங்கள்.