- Home
- Lifestyle
- Numerology Predictions: இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று உப்பு தானம் செய்யுங்கள்..!
Numerology Predictions: இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று உப்பு தானம் செய்யுங்கள்..!
Today Numerology Predictions Palangal: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, (19 அக்டோபர் 2022) ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணித பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

எண் 1 (எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
குடும்பத்துடன் ஆன்மீக வழிபாடு செய்யலாம். கல்வியில் பிள்ளைகள் வெற்றி பெறலாம். சோம்பேறித்தனத்தால் சில வேலைகள் முழுமையடையாமல் இருக்கலாம். எனவே உங்கள் ஆற்றலையும் செயல்திறனையும் அதிகப்படுத்தவும். நிதி விஷயங்களில் எந்தவொரு முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும் இல்லையெனில் ஒருவித தவறு செய்ய வாய்ப்பு உள்ளது.
எண் 2 (எந்த மாதத்திலும் 2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று நீங்கள் தன்னம்பிக்கை உடையவராக உணர்வீர்கள். நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். பரம்பரைச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்தால், அதைத் தீர்க்க இன்றே சரியான நேரம். உங்கள் கோபமான நடத்தை உங்கள் வேலையில் இடையூறுகளை ஏற்படுத்தலாம். சகோதரர்களுடன் சிறு விஷயத்தால் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
எண் 3 (எந்த மாதத்திலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்றைய நாளில் பெரும்பாலான நேரம் ஆக்கப்பூர்வமான செயல்களில் செலவிடப்படும். வீட்டில் புதுப்பித்தல் மற்றும் அலங்காரம் தொடர்பான பணிகள் நடைபெறும். மேலும், குழந்தைகளின் தொழில் தொடர்பாக நல்ல செய்திகளை பெறுவீர்கள். தவறான செயல்களில் நேரத்தை செலவிடுவது உங்கள் முக்கியமான வேலையை நிறுத்தலாம். வியாபார நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை.
எண் 4 (எந்த மாதத்திலும் 4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்றைய நேரத்தை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் செலவிடுங்கள். இன்று நீங்கள் ஆக்கப்பூர்வமான வேலைகளிலும் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் அன்றாட வழக்கத்தை சரியாகப் பராமரிப்பது அவசியம், இல்லையெனில் கவனக்குறைவால் உங்கள் முக்கியமான வேலை தடைபடும். ஊடகம், பங்குச் சந்தை, கணினி போன்றவற்றுடன் தொடர்புடைய வியாபாரம் வெற்றி பெறும்.
எண் 5 (எந்த மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பான சில திட்டங்கள் இருக்கும். நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்கு வரலாம். ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.பரம்பரைச் சொத்துக்கள் தொடர்பாக சகோதரர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
எண் 6 (எந்த மாதத்திலும் 6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று திடீரென்று சில நல்ல செய்திகளைப் பெறுவதன் மூலம் அதிக மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். இன்று உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். சரியான வீட்டுச் சூழலைப் பராமரிப்பது அவசியம். ஏனெனில் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமான சிரமங்கள் வரலாம். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். வேலைப்பளு காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் நேரம் ஒதுக்க முடியாமல் போகும்.
எண் 7 (எந்த மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்றுதொழிலில் வருமான ஆதாரமும் கூடும். தவறான நடவடிக்கைகள் மற்றும் செயல்களுக்கு செலவு செய்வது வீட்டு வரவு செலவுத் திட்டத்தை கெடுக்கும், என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். பெரியவர்களுடன் சரியான மரியாதையைக் கடைப்பிடிப்பது முக்கியம்.
எண் 8 (எந்த மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பான காரியங்களைச் செய்ய சிறந்த நேரம் ஆகும். சமூக நடவடிக்கைகளிலும் சிறிது நேரம் செலவிடுவீர்கள். இயற்கையில் சிறிது நேரம் செலவிடுங்கள். தியானத்திலும் கவனம் செலுத்துங்கள். இளைஞர்கள் தங்கள் தொழில் தொடர்பான பணிகளில் அதிக கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும்.
எண் 9 (எந்த மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அமையும். சோம்பல் காரணமாக சில வேலைகளைத் தவிர்க்க முயற்சிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனையை அதிகம் நம்பாதீர்கள். உங்கள் கூட்டாளி அல்லது பணியாளருடன் நல்ல உறவைப் பேணுவது முக்கியம்.