Numerology Palangal: இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று யோகம் பிறக்கும்..!
Today Numerology Predictions Palangal: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, (18 அக்டோபர் 2022) ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணித பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த மாதம், எந்த ஆண்டு பிறந்தவராயின் இந்த பலன்கள் உங்களுக்கு பொருந்தும்.
எண் 1 (எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று வீட்டின் சூழ்நிலை சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சாதகமாக மாறும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அக்கம்பக்கத்தினருடன் தகராறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழிலில் சில காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம். வேலையில் பிஸியாக இருப்பீர்கள்.
எண் 2 (எந்த மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று தொழில் சம்பந்தமான வேலைகளில் நஷ்ட்டம் ஏற்படலாம். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் அவர்களின் மன உறுதியை நிலைநிறுத்துவது உங்கள் பொறுப்பு ஆகும். வியாபாரத்தில் லாபம் கூடும். கணவன்-மனைவி உறவு நெருக்கமாக இருக்கும். மன அழுத்தம் மற்றும் சோர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
எண் 3 (எந்த மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
சமூக விஷயங்களுக்கு உதவுவதற்கு சிறிது நேரம் செலவிடப்படும். பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்கவும். நீங்கள் வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். இன்று வீடு மற்றும் வியாபாரத்தில் நல்லிணக்கம் பேணுவதில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அதிக வேலை சோர்வை ஏற்படுத்தும்.
எண் 4 (எந்த மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று வீட்டில் நெருங்கிய விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வீட்டில் உள்ள பெரியவரின் உடல்நிலை காரணமாக மருத்துவமனைக்கு செல்ல நேரிடலாம். இன்று புதிய வேலைகள் தொடங்கலாம். கணவன்-மனைவிக்கு இடையே ஏதேனும் தகராறு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
எண் 5 (எந்த மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று உங்களுக்கு சிறப்பு நபர்களுடன் சந்திப்பு இருக்கும். மேலும், ஒரு சிறப்பு விவகாரம் தொடர்பான விவாதமும் நடைபெறும். இது அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். சொத்துக்களை விற்க இன்று சிறப்பான நாளாகும். மேலும், குடும்ப சூழ்நிலையை சாதாரணமாக வைத்திருங்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை குறித்து கவலைகள் ஏற்படலாம்.
எண் 6 (எந்த மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
உங்கள் திட்டங்களை ரகசியமாகத் தொடங்குங்கள். தற்போது உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்காது என்பதால் பொறுமை காக்க வேண்டும். இந்த கடின உழைப்பு எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். ஒருவர் மீது அதிக சந்தேகம் கொள்வது தீங்கு விளைவிக்கும். உங்களின் தனிப்பட்ட பணிகளால் இன்று வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த முடியாது. கணவன்-மனைவி இடையே சிறு விஷயத்தால் மோதல் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
எண் 7 (எந்த மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்றைய அரசியல் உறவுகள் உங்களுக்கு அனுகூலத்தைத் தரும். மேலும், குடும்பப் பணிகளை திட்டமிட்டு, ஒழுக்கத்துடன் செய்வதால், பெரும்பாலான பணிகள் சரியாக முடிவடையும். மேலும், அந்நியருடன் பழகும்போது கவனமாக இருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் வீட்டிலும் வியாபாரத்திலும் நல்லிணக்கத்தைப் பேண வேண்டியிருக்கும். சில நேரங்களில் அதிக வேலை காரணமாக சோர்வு ஏற்படலாம்.
எண் 8 (எந்த மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று உங்கள் சேவையால் வீட்டின் பெரியவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நெருங்கிய உறவினரை சந்திக்கும் போது, பழையநபரை சந்திக்கும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் இது உறவில் விரிசலை ஏற்படுத்தும். வியாபார நடவடிக்கைகள் மந்தமாகவே இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்கள் மன உறுதியையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.
எண் 9 (எந்த மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உங்கள் உறவு வலுவடைகிறது. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான திட்டங்களில் உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். இன்று உங்கள் சகோதரர்களுடனான உறவும் மோசமடைய வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி உறவு சுமூகமான இருக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.