MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Jio Smart Tag: மாடுகளுக்கும் வந்துடுச்சு ஸ்மார்ட் வாட்ச்! இது எப்படி வேலை செய்யுது? விவசாயிகளுக்கு என்ன லாபம்?

Jio Smart Tag: மாடுகளுக்கும் வந்துடுச்சு ஸ்மார்ட் வாட்ச்! இது எப்படி வேலை செய்யுது? விவசாயிகளுக்கு என்ன லாபம்?

Jio Smart Tag: பால் பண்ணை தொழில்ல நிறைய பேர் நஷ்டத்தை சந்திக்கிறாங்க. ஆனா, இந்த தொழிலை சுலபமாக்கி, லாபம் சம்பாதிக்க ஒரு புதிய டெக்னாலஜி வந்திருக்கு. அதுதான் மாடுகளுக்கான ஸ்மார்ட் நெக் டேக். ஜியோ நிறுவனம் இதை அறிமுகப்படுத்துது.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 04 2026, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜியோ ஸ்மார்ட் நெக் டேக்
Image Credit : jiogausamriddhi.com

ஜியோ ஸ்மார்ட் நெக் டேக்

மாடுகளோட ஆரோக்கியத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கிறது ரொம்ப கஷ்டம். ஆனா, இந்த ஸ்மார்ட் டேக் மூலமா மாடுகளோட அசைவுகள், அசை போடுறது, இனப்பெருக்க சுழற்சி, உடல்நல மாற்றங்கள் எல்லாத்தையும் கண்காணிக்கலாம். ரிலையன்ஸ் ஜியோவின் JioGauSamriddhi சிஸ்டம் இந்த வேலையை செய்யுது. இந்த டெக்னாலஜி பால் பண்ணை விவசாயத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும்னு ஜியோ சொல்லுது. நூற்றுக்கணக்கான மாடுகளை வெச்சுருக்கிற பெரிய பண்ணைகள்ல, ஒவ்வொரு மாட்டையும் 24 மணி நேரமும் கவனிக்க முடியாது. இந்த JioGauSamriddhi ஸ்மார்ட் நெக் டேக், மாட்டின் கழுத்துல கட்டப்பட்டதும், அதோட அசைவுகள், அசை போடும் முறை, நடத்தை மாற்றங்கள், சினைக்கு வருவதற்கான அறிகுறிகள் எல்லாத்தையும் தொடர்ந்து கண்காணிக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜியோ கவுசம்ரித்தி
Image Credit : jiogausamriddhi.com

ஜியோ கவுசம்ரித்தி

இந்த தகவல்கள் ஒரு கேட்வே வழியாக JioGauSamriddhi ஆப்-க்கு போகும். அங்கே டேட்டாவை ஆய்வு செஞ்சு, விவசாயிக்கு தேவையான எச்சரிக்கைகளையும், ஆலோசனைகளையும் இந்த சிஸ்டம் கொடுக்கும். மாடுகளுக்கு நோய் முத்திப்போன பிறகுதான் பலருக்கும் தெரியவரும். ஆனா, அதுக்கு முன்னாடியே அதோட நடவடிக்கையில சின்ன சின்ன மாற்றங்கள் தெரியும். உதாரணமா, மாடு சோர்வா இருக்கிறது, சரியா அசை போடாம இருக்கிறது, தீவனம் சாப்பிடாம இருக்கிறது போன்ற அறிகுறிகளை இந்த ஸ்மார்ட் டேக் கண்டுபிடிச்சுடும். JioGauSamriddhi ஆப் மூலமா விவசாயிக்கு உடனே ஒரு அலர்ட் போகும். ஆனா, இது மருத்துவ ஆலோசனை இல்லை. இந்த அலர்ட் வந்ததும், விவசாயியோ அல்லது கால்நடை மருத்துவரோ மாட்டை பரிசோதிக்கணும்.

Related Articles

Related image1
USA Rules: அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கூடாதா? காரணம் தெரிஞ்சா சிரிப்பே வந்துடும்!
Related image2
Mutton Biryani : ஹோட்டல் ஸ்டைல் மட்டன் பிரியாணி செய்ய 7 சூப்பர் டிப்ஸ்.! 5 நிமிடத்தில் மணக்க மணக்க ரெடியாகும் மட்டன்.!
34
மாடுகளுக்கான ஸ்மார்ட் டேக்
Image Credit : jiogausamriddhi.com

மாடுகளுக்கான ஸ்மார்ட் டேக்

பால் பண்ணை விவசாயிகளுக்கு மாட்டின் ஆரோக்கியம் போலவே, இனப்பெருக்கமும் ரொம்ப முக்கியம். மாடுகள் சினைக்கு வர்ற நேரத்தை (Heat/Estrus) சரியா கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஆனா, இந்த நெக் டேக், மாடுகளின் அசைவுகளில் ஏற்படும் மாற்றங்களை வெச்சு, அது சினைக்கு தயாராகும் அறிகுறிகளை கண்டுபிடிக்கும். JioGauSamriddhi ஆப் மூலமா விவசாயிக்கு எச்சரிக்கை வரும். இதனால, சரியான நேரத்துல செயற்கை கருவூட்டல் செஞ்சு, இனப்பெருக்கத்தை திறமையா நிர்வகிக்க முடியும். ஒரு கேட்வே மூலமா ஒரே நேரத்துல 500 ஸ்மார்ட் டேக்ஸ் வரைக்கும் கண்காணிக்க முடியும்னு ஜியோ சொல்லுது.

44
மாடு உடல்நிலை கண்காணிப்பு
Image Credit : jiogausamriddhi.com

மாடு உடல்நிலை கண்காணிப்பு

மாட்டின் ஆரோக்கியம் விவசாயியோட வருமானத்தோடு நேரடியா சம்பந்தப்பட்டது. மாட்டுக்கு உடம்பு சரியில்லைன்னா பால் உற்பத்தி குறையும். சினைப் பருவம் தள்ளிப்போனாலும் அடுத்த பால் உற்பத்தி சுழற்சி பாதிக்கப்படும். இந்த JioGauSamriddhi சிஸ்டம், மாட்டின் ஆரோக்கியம், சினை அறிகுறி, பால் உற்பத்தி பதிவுகள் எல்லாத்தையும் ஒரே டிஜிட்டல் தளத்துல கொண்டு வருது. இதனால, சரியான நேரத்துல சரியான முடிவெடுத்து, விவசாயி தன்னோட வருமானத்தை பெருக்கிக்கலாம். இதுக்கு பேருதான் 'Precision Dairy Farming', அதாவது துல்லியமான பால் பண்ணை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜியோ
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Neeti : இந்த 4 விஷயங்களில் ஆண்களால் பெண்களை ஜெயிக்கவே முடியாதாம்!
Recommended image2
USA Rules: அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கூடாதா? காரணம் தெரிஞ்சா சிரிப்பே வந்துடும்!
Recommended image3
Necklace Chains : நெக்லஸ் மாதிரி டிசைன்ல அட்டகாசமான செயின் போடுங்க!
Related Stories
Recommended image1
USA Rules: அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கூடாதா? காரணம் தெரிஞ்சா சிரிப்பே வந்துடும்!
Recommended image2
Mutton Biryani : ஹோட்டல் ஸ்டைல் மட்டன் பிரியாணி செய்ய 7 சூப்பர் டிப்ஸ்.! 5 நிமிடத்தில் மணக்க மணக்க ரெடியாகும் மட்டன்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved