தொலைத்தொடர்பு துறையில் ஜியோ களமிறங்கிய பிறகு மற்ற நிறுவனங்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரத்தை தரச்சான்று நிறுவனமான தெரிவித்து உள்ளது.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் அறிமுகமான போது பல அதிரடி சலுகைகளை அறிவித்து மக்கள் மனதை வென்றது. குறைந்த விலையில் சேவைகளை வழங்கியது. எல்லையற்ற phone calls, sms, free data என தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வாரி வாரி வழங்கியது. அதனுடைய தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்க தொடங்கியது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.

ஏன்..? ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் திவாலானது அனைவரும் அறிந்ததே. அதற்கு அடுத்தபடியாக போட்டியை சமாளிக்க வோடபோன் மற்றும் ஐடியா ஒன்றாக இணைந்து ஜியோவுக்கு எதிராக பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி தற்போது சந்தையில் தாக்குப் பிடிக்கிறது.

ஐடியா-வோடபோன்

சந்தை பங்களிப்பு பொருத்தவரையில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் கணிசமான வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது என்றுதான் கூறமுடியும். இதன் காரணமாக லாபம் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா வருவாயை பொருத்தவரையில் 4 சதவீதமும், செயல்பட்டு லாபத்தை பொறுத்தவரையில் 22 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 1.4 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. 

வோடபோன் ஐடியா நிறுவனம் அதேபோன்று ஏர்டெல் நிறுவனத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் செயல்பாட்டு லாபம் 7 சதவீதம் உயர்ந்து இருந்தாலும் கடும் போட்டியை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது ஏர்டெல் நிறுவனம். அதன்படி மிக விரைவில் 3ஜி சேவையை அமலில் இருந்து நீக்க முடிவு எடுத்து இருப்பதாகவும் மற்றபடி 2 ஜி மற்றும் 4ஜி சேவை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது என்பது கூடுதல் தகவல்.

ஜியோவை பொறுத்தவரையில் வருவாய் மட்டுமே 44 சதவீதமும், செயல்பாடு லாபம் மட்டுமே 37 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.