MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Walking Tips: குறைந்த நேரத்தில் அதிக பலன்.. 'ஜப்பானிய வாக்கிங்' டெக்னிக் பாலோ பண்ணுங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்!

Walking Tips: குறைந்த நேரத்தில் அதிக பலன்.. 'ஜப்பானிய வாக்கிங்' டெக்னிக் பாலோ பண்ணுங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்!

Walking Tips: தினமும் வாக்கிங் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஜப்பானிய வாக்கிங் முறைதான் ரொம்ப எஃபெக்டிவ். ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 04 2026, 08:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
'ஜப்பானிய வாக்கிங்' டெக்னிக்
Image Credit : Getty

'ஜப்பானிய வாக்கிங்' டெக்னிக்

உலக அளவில் பல லட்சம் பேருக்குப் பிடித்த எளிய உடற்பயிற்சி நடைப்பயிற்சியாகும். இதற்கு எந்தவித ஜிம் உபகரணங்களும் தேவையில்லை; எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளும் இதில் உள்ளன. இருப்பினும், எவ்வளவு நேரம் நடக்க வேண்டும், எத்தனை படிகள், என்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்பதில் எப்போதும் பலருக்குச் சந்தேகம் உண்டு.

பொதுவாக, ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடப்பது சிறந்தது என்று கூறப்படும் நிலையில், தற்போது ஜப்பானிய நடைப்பயிற்சி முறை (Japanese Walking) அதிக பிரபலமடைந்து வருகிறது. தினமும் 10,000 படிகள் நடப்பது நல்லதா அல்லது 30 நிமிடம் ஜப்பானிய நடைப்பயிற்சி செய்வது நல்லதா என்பது குறித்து ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக நிபுணர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தினமும் 10,000 படிகள் நடந்தால் என்ன பலன்?
Image Credit : Getty

தினமும் 10,000 படிகள் நடந்தால் என்ன பலன்?

இது தோராயமாக ஐந்த மைல் தூரத்தைக் குறிக்கிறது. நீண்ட காலமாக இதுவே ஃபிட்னஸுக்கான அளவுகோலாக உள்ளது. தினமும் 10,000 படிகள் நடப்பது உடல் எடையைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் மிகவும் நல்லது. இந்த இலக்கை அடைவதன் மூலம் இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் அபாயம் குறைகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை ஃபிட்னஸ் வாட்ச் மூலமாக எளிதாகக் கண்காணிக்க முடியும். 2022-ஆம் ஆண்டு லண்டனில் 78,430 பேரிடம் இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களின் மனமும் உடலும் மிகவும் ஆக்டிவாக‌செயல்பட்டது கண்டறியப்பட்டது.

34
ஜப்பானிய வாக்கிங் டெக்னிக் என்றால் என்ன?
Image Credit : Getty

ஜப்பானிய வாக்கிங் டெக்னிக் என்றால் என்ன?

இதை 'ஜப்பானிய இன்டர்வல் வாக்கிங்' (IWT) என்று அழைப்பார்கள். ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நடைப்பயிற்சி முறையில், சீரான இடைவெளியில் வெவ்வேறு வேகத்தில் நடக்க வேண்டும். தினமும் 30 நிமிடம் செய்ய வேண்டிய இம்முறையில், மூன்று நிமிடங்கள் மெதுவாகவும், அடுத்த மூன்று நிமிடங்கள் வேகமாகவும் மாற்றி மாற்றி நடக்க வேண்டும்.

எது சிறந்தது?

நிபுணர்கள் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையையே அதிகம் ஆதரிக்கின்றனர். "வழக்கமாக நடக்கும் 10,000 படிகளை விட, அதிக நன்மைகளைத் தரக்கூடிய இந்த முறையை ஜப்பானியர்கள் கண்டறிந்துள்ளனர். தினமும் 30 நிமிடம் இதைச் செய்து பாருங்கள், இதன் முடிவு உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும்" என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வழக்கமான 10,000 படிகளை விட இந்த IWT முறை இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது, மனநிலையை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முறை இதய ஆரோக்கியத்தையும் உடற்தகுதியையும் பெரிய அளவில் மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

44
நிபுணர்கள் சொல்வது என்ன?
Image Credit : Getty

நிபுணர்கள் சொல்வது என்ன?

"முதலில் 3 முதல் 5 நிமிடங்கள் உங்களுக்கு வசதியான வேகத்தில் நடவுங்கள். அதன்பிறகு மெதுவாகவும் வேகமாகவும் மாற்றி மாற்றி நடவுங்கள். கடைசியாக 3 முதல் 5 நிமிடங்கள் கூல்-டவுன் செய்து முடிக்கவும். இது குறைந்த நேரத்தில் அதிக பலன் தரும் ஒரு சிறந்த முறையாகும்" என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எனவே, தினமும் சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவும் மிக முக்கியமானது. உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குச் சமச்சீரான உணவு மிகவும் அவசியமாவதுடன், அது உங்கள் ஃபிட்னஸ் லெவலையும் அதிகரிக்கும். நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுதான் முக்கியம். எனவே தவறாமல் ஏதேனும் ஒரு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நடைப்பயிற்சி குறிப்புகள்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Phone Pocket: உஷார்..! சட்டைப் பாக்கெட்டில் போன் வைப்பவர்களே.. இந்த விஷயம் தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
Blouse Design : அட! இது கோலமா..பிளவுஸ் டிசைனா? சேலை லவ்வர்களுக்கான லேட்டஸ்ட் டிரெண்ட்
Recommended image3
White Clothes Laundry Hacks: வெள்ளை துணி மங்கவே மங்காது! புதுசு போல பளபளக்க வைக்கும் சிம்பிள் டிப்ஸ்
Related Stories
Recommended image1
Home Workout: வாக்கிங் பேடா, டிரெட்மில்லா? வீட்டில் ஒர்க்அவுட் செய்ய எது பெஸ்ட்?
Recommended image2
Weight Loss: வாக்கிங் vs ஸ்கிப்பிங்: வேகமா வெயிட் லாஸ் பண்ண எது பெஸ்ட் சாய்ஸ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved