Diabetes: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் சூப்பர் விதை..இது தெரிஞ்சா இனி குப்பையில் தூக்கி எறிய மாட்டீங்க
Diabetes - jamun fruit seeds: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க, ஆரோக்கியத்தை பராமரிக்க நாவல் பழம், எப்படி உதவியது என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து வைத்து கொள்வோம்.
jamun fruit
இன்றைய நவீன உலகில், நீரிழிவு நோய் என்பது உலகளாவிய நோயாக மாறி வருகிறது. இரத்த குளுக்கோஸ் அளவானது அதிகமாகும் போது இது கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது. இது உங்கள் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும். நீரிழிவு நோய் இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது. எனவே, நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க நாம் சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். அத்தகைய பழங்களில் ஒன்று நாவல் பழம். இது, இரத்தத்தில் சர்க்கரை மேலாண்மைக்கு உதவுவது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவுகிறது.
jamun fruit
நீரிழிவு நோய்க்கு ஆரோக்கியமான உணவு, பழங்களை சாப்பிடுவது நல்லது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஆனால், நீரிழிவு நோயாளிகள் எந்த பழத்தை சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்ற குழப்பம் இருக்கும். அந்த வகையில், ‘நாவல் பழம்’ நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும், இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், துத்தநாகம், புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளுடன் கால்சியம், வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகவும் உள்ளது.
Diabetes:
நாவல் பழ விதைகள் நீரழிவு நோய்க்கு உகந்தது...
பொதுவாக நாம் நாவல் பழங்களை சாப்பிட்டு விட்டு கீழே போட்டு விடுவோம். ஆனால் இந்த விஷயம் தெரிந்தால் இனிமேல் அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீச மாட்டீர்கள். இது நீரிழிவு அபாயத்தைக் குறைப்பது மட்டுமின்றி கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும்குறைக்கிறது.
Diabetes:
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நாவல் பழங்களின் விதை..?
நாவல் பழ விதைகளில் ஜாம்போலின் மற்றும் ஜாம்போசின் என்ற கலவைகள் உள்ளன. தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு நாவல் பழங்களை சாப்பிடுவது, டைப்-2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Diabetes:
நாவல் பழ விதைகளை சாப்பிடுவது எப்படி?
நாவல் பழத்தை சாப்பிட்ட பிறகு, அதன் விதைகளை கழுவி, வெயிலில் நன்கு காய வைக்கவும். பின்னர் மேல் பகுதியை பிரித்து பச்சையாக உள்ளே இருக்கும் பகுதியை வெளியே எடுக்கவும். உலர்ந்த விதைகளை மிக்சியில் பொடி செய்து காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். இதை தினமும் காலையில் இதனை சிறிதளவு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரை மேலாண்மைக்கு உதவுவது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயைத் தடுக்கவும் செய்கிறது.