அமெரிக்க வீட்டை பிரபல ஹாலிவுட் ஜோடிக்கு விற்ற இஷா அம்பானி! இத்தனை கோடிக்கா?
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது ஆடம்பர மாளிகையை பிரபல ஹாலிவுட் தம்பதிக்கு விற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Isha Ambani
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, 15,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள, நாட்டின் மிக விலையுயர்ந்த குடியிருப்பாக அங்கீகரிக்கப்பட்ட ஆடம்பரமான ஆண்டிலியாவில் வசிக்கிறார். உலகளவில் ஆடம்பர வீடுகள், பங்களாக்கள் மற்றும் சொத்துக்களை அம்பானி குடும்பத்தினர் வைத்திருக்கின்றனர்.
Isha Ambani
அந்த வகையில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு சொந்தமாக பல்வேறு சொத்துக்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது ஆடம்பர மாளிகையை பிரபல ஹாலிவுட் ஜோடியான பென் அஃப்லெக் மற்றும் ஜெனிபர் லோபஸுக்கு இஷா அம்பானி விற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிவர்த்தனை 494 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு தனது கர்ப்ப காலத்தில் கணிசமான நேரத்தை இந்த ஆடம்பர வீட்டில் தான் இஷா அம்பானி செலவழித்தார். எனவே அவருக்கு இந்த ஆடம்பர மாளிகை முக்கியத்துவம் வாய்ந்தது. முகேஷ் அம்பானியின் மனைவியும், இஷாவின் தாயுமான நீதா அம்பானியும் இந்த வீட்டில் வசித்து வந்தார்.
இந்த சூழலில் இந்த ஆடம்பர வீட்டை இஷா அம்பனைக்கு பென் அஃப்லெக் மற்றும் ஜெனிஃபர் லோபஸ் ஆகியோருக்கு விற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்த சொத்து இடைவிடாமல் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Isha Ambani three best look
பெவர்லி ஹில்ஸ் பகுதியில் 5.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பரந்த மாளிகையானது 155-அடி குளம், உட்புற மைதானம், சலூன், ஜிம்னாசியம், ஸ்பாக்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆடம்பரமான வசதிகளைக் கொண்டுள்ளது.
12 படுக்கையறைகள் மற்றும் 24 குளியலறைகளுடன் இந்த எஸ்டேட் ஒரு வெளிப்புற பொழுதுபோக்கு பெவிலியன், நன்கு பொருத்தப்பட்ட சமையலறை மற்றும் பரந்த புல்வெளிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது ஆடம்பர வாழ்க்கையின் சான்றாக உள்ளது.