- Home
- Lifestyle
- Pani Puri: தெலுங்கானாவை மிரட்டும் 'டைபாய்டு' நோய்... பானி பூரி தான் காரணமா? சுகாதார துறை எச்சரிக்கை..
Pani Puri: தெலுங்கானாவை மிரட்டும் 'டைபாய்டு' நோய்... பானி பூரி தான் காரணமா? சுகாதார துறை எச்சரிக்கை..
Health tips -Pani Puri: மழை காலம் வந்தாலே, தொண்டை கரகரப்பு, நெச்சுசளி, சைனஸ் தலைவலி, ஆஸ்துமா, டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

Pani Puri:
இந்தியாவில் துவங்கியுள்ள பருவமழை காரணமாக, நோய் தொற்றுகள் அதிகம் ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே, நீங்கள் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனம் தேவை. அதேபோல ஒரு சில உணவுகளை தவிர்ப்பது அவசியம். இல்லையெனில், டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்த்தொற்றுகள் அதிகரித்து காணப்படும்.
Pani Puri:
தெலுங்கானாவில் பெய்து வரும் பருவமழையால் டைபாய்டு நோயும் அதிகரித்து காணப்படுகிறது. தெலுங்கானாவில் மே மாதத்தின், தொடக்கத்தில் 2,700 டைபாய்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,752 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் இதுவரை 6,000 க்கும் மேற்பட்ட வயிற்றுப்போக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெங்கு வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு street food (சாலையோர உணவுகள்) என்று சொல்லக்கூடிய ‘பானி பூரி’ தான் காரணம் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இயக்குனர் டாக்டர் ஜி சீனிவாச ராவ், டைபாய்டை "பானி பூரி நோய்" என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சுகாதாரத்தை உறுதிசெய்து பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
டைபாய்டு காய்ச்சல் என்றால் என்ன?
டைபாய்டு காய்ச்சல் ஒரு வித தொற்றுநோயாகும். இந்த தொற்று சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த தொற்று உடல் முழுவதும் பரவி, பல உறுப்புகளை பாதிக்கும். உடனடி சிகிச்சை இல்லா விட்டால், சோர்வு, வெளிர் தோல், வாந்தி இரத்தம் போன்ற கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். இது குறிப்பாக, அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதன் மூலம் ஏற்படுகிறது.
Pani Puri:
தற்காத்து கொள்வது எப்படி?
பருவமழை காலத்தில் பானி பூரி மற்றும் பிற சாலையோர உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்து கொள்ளுங்கள். மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகள் அதிகம் சாப்பிடுங்கள்.
உங்கள் வீட்டில் எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால், கொசுக்கள் அந்த இடத்தில் இனப்பெருக்கம் செய்து விடும்.
Pani Puri:
உணவு உண்ணும் முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் கைகளைக் கழுவுங்கள். வீட்டில், கொசுக்கள் வராமல் பாதுகாக்க மாலையில் அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் மூடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு, உங்கள் கைகளை தவறாமல் கழுவுவதை உறுதிப்படுத்தவும். நீங்கள் இருமல் அல்லது தும்மலுக்கு பிறகு, உங்கள் மூக்கு அல்லது கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.