சிக்கன், முட்டை சாப்பிட்டால் பறவை காய்ச்சல் வருமா? நிபுணர்கள் சொல்றது என்ன?
Bird Flu : பறவைக்காய்ச்சல் சமயத்தில் கோழிக்கறி மற்றும் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? உண்மையில் அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும். இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இங்கு பார்க்கலாம்.

சிக்கன், முட்டை சாப்பிட்டால் பறவை காய்ச்சல் வருமா? நிபுணர்கள் சொல்றது என்ன?
இன்றைய காலகட்டத்தில் பறவை காய்ச்சல் குறித்து தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பரவக் காய்ச்சல் என்பது பறவைகளால் ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகும். குறிப்பாக, சீசன் சமயங்களில் பறவை காய்ச்சல் வந்து மக்களை வாட்டி வதைக்கும். முக்கியமாக பறவை காய்ச்சல் சமயத்தில் கோழிக்கறி, முட்டை சாப்பிடக்கூடாது என்று சமூக ஊடகங்களில் பலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். என்னதான் பலர் சொன்னாலும் நாங்கள் கோழிக்கறி மற்றும் முட்டைகளை விற்பனை செய்வோம் என்று விற்பனையாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்கிறார்கள். அதை வாங்குபவர்களும் தொடர்ந்து வாங்கி சாப்பிடு தான் செய்கிறார்கள். இன்றைக்கு சூழ்நிலையில், பறவை காய்ச்சல் சமயத்தில் உண்மையில் கோழிக்கறி மற்றும் முட்டை சாப்பிடுவது நிறுத்த வேண்டுமா? அப்படி சாப்பிட்டால் என்னதான் நடக்கும்? இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பறவைக் காய்ச்சல்:
பறவைக் காய்ச்சல் என்பது பறவைகளை பாதிக்கும் ஒரு வகையான தொற்று வைரஸ் ஆகும். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்படுகிறார்கள் சில சமயங்களில் இந்த தொற்று நோயால் மரணம் கூட ஏற்படும். ஒரு நபருக்கு பறவை காய்ச்சல் வந்தால் அவருக்கு சில அறிகுறிகள் முன்கூட்டியே ஏற்படும். அதை அறிந்து கொண்டு அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டால் குணப்படுத்திவிடலாம் இல்லையெனில் உயிருக்கு ஆபத்து.
பறவை காய்ச்சல் அறிகுறிகள்:
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தசை வலி, சோர்வு, மூச்சு திணறல், நிமோனியா காய்ச்சல், கடுமையான சுவாச கோளாறு ஆகியவை ஆகும். இந்த அறிகுறிகளை உடனே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் உறுப்புகள் செயலிழக்கப்படும். பிறகு மரணத்திற்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: காய்ச்சாத பச்சை பாலில் 'காய்ச்சல்' வைரஸ் இருக்குமா? ஆய்வில் பகீர் தகவல்!!
பறவை காய்ச்சலின் போது கோழி கறி சாப்பிடலாமா?
பறவை காய்ச்சலின் போது கோழி கறி சாப்பிடுவதை தவிர்ப்பது தான் நல்லது என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். ஒருவேளை நீங்கள் அதை சாப்பிட விரும்பினால் நன்றாக சமைத்து சாப்பிடுங்கள். மேலும் இந்த சமயத்தில் முட்டை கூட சாப்பிடலாம். ஆனால் கோழி மற்றும் முட்டைகளை நீங்கள் சமைக்கும்போது வெப்பநிலையானது 165 டிகிரி பாரன்ஹீட்டில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். CDC படி, இவை பறவை காய்ச்சல் வைரஸ் உள்பட பாக்டீரியா மற்றும் தொற்றுக்களை அளிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல்: மனிதர்களுக்குப் பரவுமா? அறிகுறிகள், தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் என்ன.?
எப்படி சமைக்க வேண்டும்?
பரவில் காய்ச்சல் சமயத்தில் நீங்கள் கோழி மற்றும் முட்டைகளை சாப்பிட விரும்பினால் அவற்றை நன்கு வேக வைத்து சாப்பிடுங்கள். முக்கியமாக கோழியை கிச்சனில் வைத்து கழுவ வேண்டாம். அதை தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக சுத்தம் செய்து சமைக்க வேண்டும். கோழியை நீங்கள் சுத்தம் செய்த பிறகு உங்களது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ மறக்காதீர்கள். அதுபோல முட்டையை சாப்பிடும் போது கவனமாக இருங்கள் அதை பச்சையாக சாப்பிட வேண்டாம். நன்கு வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்.