MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வெறும் வயிற்றில் பால் குடிக்கலமா? காலையில் பால் குடிப்பதால் 'இப்படி' கூட நடக்குமா?

வெறும் வயிற்றில் பால் குடிக்கலமா? காலையில் பால் குடிப்பதால் 'இப்படி' கூட நடக்குமா?

Drinking Milk on an Empty Stomach : பாலில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே அதை வெறும் வயிற்றில் குடிக்கலாமா கூடாதா என்ற கேள்வி எழுகிறது அதற்கான பதில் உள்ளே..

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 25 2024, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Drinking Milk on an Empty Stomach In Tamil

Drinking Milk on an Empty Stomach In Tamil

நம்மில் பலரும் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் பாலுடன் தங்களது நாளை தொடங்குகிறார்கள். பால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் கால்சியம், புரதம், வைட்டமின் டி மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவாசிய பல ஊட்டச்சத்துக்கள். பால் குடிப்பது எலும்புகள் மற்றும் தசைகளுக்கு ரொம்பவே நல்லா இருக்கும். 

25
Drinking Milk on an Empty Stomach In Tamil

Drinking Milk on an Empty Stomach In Tamil

இத்தகைய சூழ்நிலையில் வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா? என்ற கேள்வி எழுகிறது. அதை குடிக்க சரியான நேரம் என்ன? இது போன்ற பல கேள்விக்கான பதிலை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: சத்துக்கள் நிறைந்த ஆட்டுப்பால் குடித்தால் டெங்கு கூட குணமாகுமாம் தெரியுமா?

35
Drinking Milk on an Empty Stomach In Tamil

Drinking Milk on an Empty Stomach In Tamil

பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

தினமும் காலையில் பால் குடித்து வந்தால் செரிமானம் மேம்படும், தசைகள் வலுவடையும் மற்றும் பலவீனமான எலும்புகளுக்கு உயிர் கிடைக்கும்.

வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் :

சிலருக்கு லாக்டோஸ் பிரச்சனை இருக்கும். இது வயிற்று வலி வயிற்றுப்போக்கு வாயு பிரச்சனை கொஞ்சம் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் பால்குடித்தால் வயிற்றில் எரிச்சல் மற்றும் அமிலத்தன்மை ஏற்படும். ஒருவேளை நீங்கள் வெறும் வயிற்றில் பால் குடிக்க விரும்பினால் வயிற்றில் அமல தன்மை ஏற்படாமல் இருக்க சூடான பாலுக்கு பதிலாக நன்கு குளிர்ந்த பாலை குடியுங்கள்.

45
Drinking Milk on an Empty Stomach In Tamil

Drinking Milk on an Empty Stomach In Tamil

பால் குடிக்க சரியான நேரம் எது?

காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பது நல்லதல்ல. ஆனால் நீங்கள் காலை உணவு சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே வெறும் வயிற்றில் பால் குடிப்பதற்கு பதிலாக ஏதாவது உணவு சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாம். குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நீங்கள் உடல் எடையை குறைக்க அல்லது இதய நோய் இருந்தால் நீங்கள் வெறும் வயிற்றில் பால் குடிக்க வேண்டாம். மேலும் நீங்கள் இரவு தூங்கும் முன் பால் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் இரவு பால் குடிப்பது நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது மற்றும் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் ஆரோக்கியமும் மேம்படும்.

55
Drinking Milk on an Empty Stomach In Tamil

Drinking Milk on an Empty Stomach In Tamil

நினைவில் கொள் :

ஆய்வுகளின் படி, நீங்கள் காலையில் பால் குடிப்பது நல்லது தான். ஆனால் அதை குடிக்கும் முன் சில பழங்கள் அல்லது காலை உணவை சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் ஒருபோதும் பால் குடிக்காதீர்கள்.

இதையும் படிங்க:  அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு கட்டாயம் 'பால்' குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved