MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • துபாய், தாய்லாந்து செல்ல சூப்பர் சான்ஸ்; அட! ரூம், சாப்பாட்டுக்கு இவ்வளவுதானா? மிஸ் பண்ணாதீங்க!

துபாய், தாய்லாந்து செல்ல சூப்பர் சான்ஸ்; அட! ரூம், சாப்பாட்டுக்கு இவ்வளவுதானா? மிஸ் பண்ணாதீங்க!

ஐஆர்சிடிசி துபாய், தாய்லாந்து செல்ல டூர் பேக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டூர் பேக்கேஜிக்கு எவ்வளவு கட்டணம்? என்பது குறித்த விவரங்களை விரிவாக பார்ப்போம்.

2 Min read
Rayar r
Published : Jan 06 2025, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IRCTC Tour Packages

IRCTC Tour Packages

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) நிறுவனம் பட்ஜெட் விலையில் உள்நாடு மற்றும் வெளிநாடு டூர் பேக்கேஜ்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஏராளமான மக்கள் இதனால் பயனைடைந்து வரும் நிலையில், ஐஆர்சிடிசி தற்போது துபாய், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு டூர் பேக்கேஜ்களை கொண்டு வந்துள்ளது. அது குறித்து விரிவாக காண்போம்.

துபாய் மற்றும் அபுதாபி பேக்கேஜ்

SIZZLING DUBAI என பெயரிடப்பட்ட துபாய் மற்றும் அபுதாபி டூர் பேக்கேஜை அபுதாபி எக்ஸ் லக்னோ (NLO26) உடன் இணைந்து ஐஆர்சடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இது 7 பகல் மற்றும் 6 இரவுகள் கொண்ட டூர் பேக்கேஜ் ஆகும். இந்த பயண தொகுப்பில் மிராக்கிள் கார்டன், மெரினா குரூஸ் சவாரி, புர்ஜ் கலீஃபா, ஃபியூச்சர் மியூசியம், பெல்லி டான்சிங் போன்றவற்றை ரசிக்கலாம். இந்த பயணம் லக்னோவில் இருந்து தொடங்குகிறது. 

24
Dubai Tour Package

Dubai Tour Package

உணவு, ஹோட்டல் ரூம் 

லக்னோ விமான நிலையத்திலிருந்து ஜனவரி 17ம் தேதி அன்று இரவு 9.55 மணிக்கு புறப்படும் விமானம் நள்ளிரவு 12.55 மணிக்கு ஷார்ஜா விமான நிலையத்தை சென்றடையும். காலை உணவு, மதிய உணவு முதல் இரவு உணவு வரை அனைத்து செலவுகளும் இந்த பயண தொகுப்பில் அடங்கும். மேலும் சுற்றுலா வழிகாட்டியுடன் நல்ல ஹோட்டல் ரூமில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு சென்று இந்த டூர் பேக்கேஜ்க்கு முன்பதிவு செய்யலாம்.

எவ்வளவு கட்டணம்?

இந்த டூர் பேக்கேஜில் ஹோட்டல் ரூம் உள்பட அனைத்து செலவுகளின் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.107000 ஆகும். டபுள் ஷேரிங் செய்ய ரூ.109500ம், ஒருவருக்கு ரூ.129000ம் கட்டணம் வசூலிக்கப்படும். 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு ஒரு பெட்டுக்கு ரூ.104500. 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு பெட் இல்லாமல் ரூ.96000 ஆகும்.
 

34
Thailand Tour Package

Thailand Tour Package

பாங்காக்-பட்டாயா பேக்கேஜ்

மிகக் குறைந்த பட்ஜெட்டில் தாய்லாந்து செல்ல உங்களுக்கு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. ஐஆர்சிடிசி 'எக்சோடிக் தாய்லாந்து எக்ஸ் ஜெய்ப்பூர்' என்ற டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயணத் திட்டதின்படி பிப்ரவரி 11ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் காலை 11.05 மணிக்கு பாங்காக்கை சென்றடையும். நீங்கள் தனியாக பயணம் செய்கிறீர்கள் என்றால் ரூ.62,845 செலவழிக்க வேண்டும். 

அதே நேரத்தில், ஒரு நபருக்கு இரட்டை மற்றும் மூன்று பகிர்வுகளில் கட்டணம் ரூ. 54710 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழு பயணத்தின்போதும் உங்களுக்கு உதவ ஒரு சுற்றுலா வழிகாட்டி இருப்பார். இந்த டூர் பேக்கேஜ்ஜில் நீங்கள் 3 ஸ்டார் ஹோட்டலில் தங்குவது, காலை உணவு முதல் இரவு உணவு வரையிலான செலவுகள் ஆகியவை அடங்கும். மேலும் பயணக் காப்பீடும் இதில் அடங்கும்.

44
Srilanka Tour

Srilanka Tour

இலங்கை டூர் பேக்கேஜ்

SRILANKA- THE RAMAYANA TALES என்ற பெயர் கொண்ட இலங்கை டூர் பேக்கேஜ்ஜை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இது 5 இரவு மற்றும் 6 பகல் கொண்ட டூர் பேக்கேஜ் ஆகும். கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனவரி 22ம் தேதி இலங்கைக்கு விமானம் புறப்படும். இந்த டூர் பேக்கேஜின் குறியீடு EHO042B ஆகும். இந்த பயணம் ஜனவரி 27 அன்று கொழும்பில் இருந்து புறப்பட்டு கொல்கத்தாவில் முடிவடையும். 

இந்த டூர் பேக்கேஜில் தனியாகப் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.90,160 செலவாகும். அதே நேரத்தில், ஒரு நபருக்கு இரண்டு பகிர்வுக்கான செலவு ரூ.74,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை படுக்கைக்கு ரூ.57,110 மற்றும் படுக்கை இல்லாமல் ரூ.54,650 ஆகும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved